தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
தாதா
நன்மை மற்றும் தீமை இரண்டுமே கூட்டு வட்டி முறையில் பெருகிக் கொண்டே இருக்கும் என்று சி எஸ் லூயிஸ் என்னும் அறிஞர் எழுதியிருக்கின்றார். ஆகவே தான் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் தீர்மானங்கள் நித்தியத்துக்குமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறு நல்ல செயலானது, முக்கிய புள்ளியிலிருந்து, சில மாதங்களுக்குப் பின் நீங்கள் கனவிலும் கண்டிராத வெற்றிகளை உங்களுக்குக் கொண்டுவரும். இன்றைய நாளில் இச்சையில் நீங்கள் மூழ்கும் உங்களது ஒவ்வொரு சிறு செயலும், சிறு கோபங்களும் உங்கள் வாழ்வில் நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு பெரும் தாக்குதலை சாத்தான் நடத்துவதற்கான வழியாக மாறிவிடலாம். உங்கள் தப்பும் வழியானது சிறிது சிறிதாக உங்களிடமிருந்து அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
தீவினையில் பலத்துக்கொண்ட எந்த மனிதனும் பிறக்கும் போதே தீயவனாகப் பிறப்பதில்லை. ஆனால் சிறு சிறு இச்சைகள், தவறுகள், சோதனைகள் போன்றவற்றில் கடவுளின் பெலத்தை நம்பாமல் சிறிது சிறிதாக தீமை அவர்களை அடிமைப்படுத்தியதால் அவர்கள் தீமையில் பலத்துக் கொள்வார்கள். கடைசியில் அந்தத் தீயவனுக்குத் தீர்ப்பு வரும் போது இவன் தான் அந்த தீயவன், கடவுளை நம்பாமல் போனவன் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள்.
ஆனால் கடவுளை நம் பெலமாக எண்ணும் நாம் நமது பணத்தை நம்பாமல், நன்மைகளில் பலத்துக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். சிறு சிறு நல்ல செயல்களால் நம்மை நிறைத்து, சிறியதாக இருந்தாலும் தீமைகளை நம்மிடம் ஒட்டாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிந்தனை : சிறு துளி பெரு வெள்ளம். சிறு எண்ணம் பெரும் சாதனை.
ஜெபம் : ஆண்டவரே உம்மை என் பெலனாக நினைத்து, செல்வத்தை நம்பாமல், நன்மைகளில் பலத்துக் கொள்ளும் மனுஷியாக, மனுஷனாக என்னை மாற்றும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org