தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
சகாயர்
போலந்து நாட்டிலிருந்து வந்து அமெரிக்க நாட்டில் குடியேறிய ஒரு மனிதனின் பேரன் வேய்ன் எல்பஸ் என்பவர் தனது தாத்தாவின் கதையைச் சொல்கிறார். அவர் அமெரிக்காவுக்கு வரும் போது ஆங்கிலத்தில் அவருக்குத் தெரிந்த ஒரே வாக்கியம் ”எங்களுக்கு உதவுங்கள்” என்பது தான். குடியேற்ற அதிகாரிகள் அவரிடம் எதைக் கேட்டாலும் ”Help Us” என்று சொன்னார். பெயர் என்ன என்று கேட்ட போதும் அப்படியே சொன்னதால் அவரது பெயரை எல்பஸ் என்றே எழுதிவிட்டார்கள். அவர் பெயரும் அப்படியே நிலைத்துவிட்டது.
கடவுளே நமக்கு உதவி செய்பவர். ஆகவே தாவீது ஆண்டவருக்கு சகாயர் என்று பெயரிட்டார். மட்டுமல்ல தாவீது தன்னை ஆதரிக்கும் மக்களுடனும் ஆண்டவர் இருக்கிறார் என்கிறார். அதாவது, ஆண்டவர் நமக்கு உதவி செய்ய நம்மை ஆதரிக்கிற மக்களை அனுப்புகிறார்.
நம்மால் முடியாது, நமக்கு உதவி வேண்டும் என்று கேட்பதால் நாம் தாழ்மையைக் கற்றுக் கொள்கிறோம், அத்துடன் உதவியைப் பெற்றுக் கொள்கிறோம். இதில் ஆண்டவரிடம் உதவி கேட்பதில் நமக்கு வெட்கம் தேவையில்லை. ஆண்டவர் எப்போதுமே இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் நமக்கு உதவி செய்வார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் தமது மக்களை அனுப்பி அவர்கள் மூலம் நமக்கு ஆதரவு தருவார். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவி தேவை என்பதைத் தமது மக்களுக்கு ஆண்டவர் கற்பிக்கிறார். நாமும் நமக்கு உதவி கிடைத்த பின் நமது ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடையும் போது பிறருக்கு உதவி செய்வதில் அதிக அக்கறை காட்டுவோம். நாம் மற்றவர்களை ஆதரிக்கிறவர்களாக மாறுவோம்.
சிந்தனை : உதவி கேட்பவர்கள் அனைவருமே அப்படியே இருந்துவிடுவதில்லை. உதவி செய்யும் நிலைக்கு உயருவார்கள்.
ஜெபம் : தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org