தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
முட்டாள் அறிவாளி
சி. எஸ் லூயிஸ் ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகராக இருந்தார். அவர் தனது முந்திய வாழ்க்கையையும் கடவுள் நம்பிக்கையுள்ள ஆத்திகனாக பின்னர் உள்ள வாழ்க்கையையும் பற்றிச் சொல்லும் போது, “ கடவுளுக்கு எதிரான எனது வாதமானது இப்படியாக இருந்தது, ‘இந்த உலகமானது இத்தனை கொடூரமானதாகவும் அநீதி நிறைந்ததாகவும் இருக்கிறதே?’ ஆனால் நீதி அநியாயம் என்பதைப் பற்றிய எண்ணம் எனக்கு எங்கிருந்து வந்தது? ஒரு மனிதன் நேரான கோடு ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒரு கோடானது கோணலாக இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆகவே உண்மையின் ஒரு பாகத்தை நான் முழுமையான அறிவு என்று ஏற்றுக் கொள்ள வற்புறுத்தப்பட்டதை உணர்ந்தேன். நாத்திகம் என்பது மிகவும் சாதாரணமானதாக எனக்குத் தெரிந்தது. இந்த முழு உலகங்களுக்கும் அர்த்தமே இல்லை என்றால், அதற்கு அர்த்தம் இல்லை என்பதையே நம்மால் கண்டுபிடித்திருக்க முடியாது. ஏனென்றால் உலகத்தில் வெளிச்சமே இல்லை என்றால் உயிரினங்களுக்குக் கண்கள் தேவையில்லை அல்லவா? இருட்டு என்றால் என்னவென்றே நமக்குத் தெரிந்திருக்காது. இருட்டு என்னும் கருத்தே அர்த்தமில்லாததாகப் போயிருந்திருக்கும்.” என்கிறார்.
கடவுளை நிரூபிக்க அதிக முயற்சிகளை வேதாகமம் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு உண்மை என்றும் அதை எல்லாரும் ஏற்றிருக்க வேண்டும் என்ற யூகத்தில் தான் வேதாகமம் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கின்றது.
சிந்தனை : கடவுள் இருக்கிறார் என்று இருதயத்தில் சொல்வதே நம்மை ஞானியாக்குகிறது.
ஜெபம் : கர்த்தாவே, உம்மை விசுவாசிக்கும் ஞானியாக மட்டுமல்ல, உமக்குக் கீழ்ப்படியும் பிள்ளையாகவும் என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org