தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 36 நாள்

பயங்காட்டும் புதுப்பாட்டு

ஆதிகாலத்து கிரேக்கர்கள் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிட நேரத்தில் கடப்பது என்பதை சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்கள். இதை சாதிப்பதற்கென்று கிரேக்கர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பற்றிய பழைய காலத்து சுவடிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓடுபவர்களின் வேகத்தைக் கூட்டுவதற்காக காட்டு மிருகங்களைத் துரத்தச் செய்தார்கள், புலியின் பாலைக் குடித்தார்கள். ஆனால் எதுவும் அந்த சாதனையைத் தொட அவர்களுக்கு உதவியாக இருக்கவில்லை. ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் கடப்பது என்பது நடக்காத விஷயம் என்று முடிவு கட்டிவிட்டார்கள். நமது எலும்புகளின் அமைப்பு சரியாக இல்லை, காற்றின் எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது. மனித நுரையீரலின் ஆற்றல் போதுமானதாக இல்லை. இன்னும் ஆயிரம் காரணங்கள்.

ஆனால் ஒரு மனிதன் ஒரு நாளில் இந்த மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள் யாவரையுமே தவறு என்று நிரூபித்தார். அதிசயத்திலும் அதிசயமாக, ரோஜர் பானிஸ்டர் என்பவர் ஒரு மைல்-நான்குக நிமிட சாதனையைச் செய்த மறுவருடத்திலேயே முன்னூறு ஓட்டப்பந்தய வீரர்கள் இதே சாதனையைச் செய்தார்கள்.

ஒரு வீரன் நூற்றாண்டு காலக் கனவை நனவாக்கினான். அதைக் கண்ட பலர் தங்களாலும் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றார்கள். வென்றார்கள். தாவீதின் புதுப்பாட்டும் இதையே செய்தது. செய்து கொண்டிருக்கிறது. தாவீதின் பாடல்கள் அவர் வாழ்வில் கடவுள் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிப்பதாக இருந்தன. புதுப்புது நன்மைகளால் புதுப்புதுப் பாடல்களை அவர் எழுதிப் பாடினார். அநேகர் அதைக் கண்டு பயந்தார்கள். கடவுளுக்குப் பயந்தார்கள். கர்த்தரை நம்பினார்கள். நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிந்தனை : உங்கள் பாட்டு கடவுளை நம்ப வைக்கின்றதா? அவரிடமிருந்து மக்களை விலக்குகிறதா?

ஜெபம் : தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும். ஆமென்.

நாள் 35நாள் 37

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org