தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
உடைந்த பாத்திரம்
நல்லவர்களுக்குத் தீமை வரும் போது என்ற புத்தகத்தை எழுதிய யூத ரபி ஹெரால்ட் குஷ்னரிடம் ஒரு நண்பர் வந்து இப்படிச் சொன்னார்: “இரண்டு வாரங்களுக்கு முன் என் வயதில் என் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவரின் அடக்கத்திற்குப் போயிருந்தேன். நான் அதிகம் அவருடன் பழகியிருக்கவில்லை. என் நண்பர்கள் நாம் கூட இவரைப் போல இறந்து போயிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். இரண்டு வார காலத்தில் அவனது இன்னொருவனை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள். அவனது மனைவியும் தன் பெற்றோருடன் வாழ்வதற்காக ஊரை விட்டுச் சென்றுவிட்டாள். அனைவருமே அவனை மறந்தது போல் இருக்கிறது. சில விநாடிகள் அலையை ஏற்படுத்திவிட்டு குளத்துக்குள் அமிழ்ந்து போகும் கல் போன்றது தான் வாழ்க்கையா? அதன் பின் அது மறக்கப்பட்டுப் போகுமா? அன்றிலிருந்து எனக்கு சரியாக உறக்கமே இல்லை. அதே சம்பவம் எனக்கும் நடந்திருக்கலாம். மக்களும் சில நாட்களில் என்னை மறந்து போய்விடுவார்கள். நான் இந்த உலகத்தில் வாழ்ந்ததே யாருக்கும் தெரியாமல் போய்விடும். மனித வாழ்க்கைக்கு இதற்கு மேல் எந்த மதிப்பும் இல்லையா?”
தாவீதும் உயிரோடு இருக்கும் போதே மறக்கப்பட்ட நிலையில் புலம்புகிறார். ஆனாலும்.... ”ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.” என்று பின்னர் சொல்கிறார்.
இதைப் போன்ற சிந்தனை வரும்போது தாவீது தரும் ஆலோசனையைக் கேளுங்கள் : கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சிந்தனை : மனிதர்கள் மறக்கலாம், ஆனால் நம்மை மறக்காதவர் நம் ஆண்டவர். நாம் அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோமா?
ஜெபம் : கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org