தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 27 நாள்

அவசர சிகிச்சை

டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் 1985-இல் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். ஒரு முனிசிபல் நீச்சல் குளத்தில் கொண்டாட்டம் ஒன்று நடந்தது. அந்த நீச்சல் குளத்தில் எல்லா கோடைக்காலத்திலும் யாராவது ஒருவர் மூழ்கிவிடுவார். இந்த கோடையில் யாருமே மூழ்கவில்லை என்பதுவே அந்த கொண்டாட்டத்திற்கான காரணமாகும். பிறரை மூழ்குவதிலிருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற நூறு பேர் உட்பட இருநூறு பேர் அந்த கொண்டாட்டத்தில் பங்குபெற்றனர். கொண்டாட்டம் முடிந்து குளத்தை சுத்தம் செய்யும் போது குளத்தின் ஆழத்தில் நன்றாக உடை உடுத்திய ஒரு நபரைக் கண்டார்கள் பணியாளர்கள். 31 வயதான ஜெரோம் என்ற அவரை வெளியே எடுத்து முதலுதவி செய்து பார்த்தார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து போயிருந்தார். காப்பாற்றும் பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சி பெற்றவர்கள் இருக்கும் போதே ஒருவர் அநியாயமாக இறந்து போனார். அதுவும் அவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடிய கூட்டத்தில். 

ஆனால் ஆண்டவர் நமக்குத் தரும் பாதுகாப்பு மிகவும் சிறப்பானது. தாவீதின் அனுபவங்கள் இந்த சங்கீதத்தில் வரிசையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கைதூக்கி எடுத்தார். குணமாக்கினார், அவருடைய தயவோ நீடியவாழ்வு, அவருடைய தயவினால் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணுபவர். புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணுபவர். இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைகட்டுபவர். நமது வாழ்வின் ஆபத்துக்களில் நம்மைக் காப்பவர், நமக்கு வந்த பல ஆபத்துகளில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்மைக் காத்தவர் ஆண்டவர். அவர் சர்வ வல்லவர். நம் மேல் அக்கறை உள்ளவர்.

சிந்தனை : உதவி செய்ய வருவதில் அவசரத்தைவிட அன்பும் அக்கறையும் உள்ளவர் நம் ஆண்டவர்.

ஜெபம் : நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும். ஆமென். 

நாள் 26நாள் 28

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org