ரூத், மீட்பின் கதைமாதிரி

Ruth, A Story Of Redemption

5 ல் 5 நாள்

நமக்கான தேவனின் முடிவு

அதிகாரம் நான்கானது நகரின் மையத்தில் உள்ள வாசலில் போவாஸ் நிற்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் ரூத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் அவர் இங்கே இருக்கிறார், மேலும் அவளுடைய தன்னை விட நெருங்கிய அல்லது அன்றைய வழக்கப்படி முறை கொண்ட உறவினர்கள் அவளை மீட்க அங்கே இருக்கின்றனரா அல்லது விரும்புகின்றனரா என்பதையும் அறிய அங்கிருந்தார். ரூத் மற்றும் நகோமியின் நெருங்கிய உறவினர் நமக்குத் தெரியாத ஒரு மனிதர், இருப்பினும் இந்த சிறிய வசனத்தின் மூலம் அவருடைய குணாதிசயத்தைப் பற்றி நாம் கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண் இரண்டு பெண்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதை நாம் அறிவோம், ஆனால் அவர் ஒரு முறை கூட அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதையும் மீறி, ரூத்தை மீட்க விரும்புகிறீர்களா என்று போவாஸ் அந்த நபரிடம் கேட்டபோது, ​​​​அவர் மறுக்கிறார். இந்த மனிதர் குறிப்பாக போவாஸுடன் ஒப்பிடுகையில், நேர்மையும் குணமும் இல்லாத ஒரு மனிதர்.

ரூத்தை மீட்டுக்கொள்ளும் உரிமையைப் பெறுவதற்காக அந்த உறவினருடன் போவாஸ் சட்டப்பூர்வ பரிவர்த்தனை செய்கிறார். ரூத்துக்காக எதையும் செய்ய அவருக்கு சட்டப்பூர்வ கடமை இல்லை, இருப்பினும் புத்தகம் முழுவதும் அவர் அவளை கவனித்துக்கொள்வதைத் தவிர வேறு எதையும் சொல்லவில்லை. இயேசு நமக்கு அருளியது போல் போவாஸ் தன்னுடைய கிருபையை ரூத்துக்கு நீட்டித்திருக்கிறார்.

தேவனின் கிருபை நமக்கு போதுமானது. நாம் இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டோம், எதற்கும் தகுதியில்லாத புறஜாதியாராகிய நமக்கும் வாரிசு உரிமை வழங்கப்பட்டது. இப்போது இயேசு தனது மணமகளை (தேவாலயத்தை) மீட்டுக்கொள்வது போல, போவாஸ் தனது மணமகளை (ரூத்தை) மீட்டுக்கொண்டார். அவன் அவளை மணந்து அவள் கருத்தரிக்கிறாள்.

சுவாரஸ்யமாக, ரூத் தனது முந்தைய பத்து வருடத் திருமண பந்தத்தில் கருத்தரிக்கவில்லை. முந்தைய திருமணத்தில் அவள் மலடியாக இருந்தாள் என்று நாம் கருதலாம், இருப்பினும் பிரசவத்திற்காக தேவன் இந்த நேரத்தில் அவளுடைய கருப்பையைத் திறந்தார். ஓபேத் என்ற சிறுவனுக்கு அவள் தாயாகிறாள், அவன் பெரிய ராஜா தாவீதின் தாத்தாவாகிறான்.

இந்தக் குழந்தையின் பிறப்பின் மூலம் தேவனின் கிருபையையும் அன்பையும் பற்றி மேலும் ஒரு சித்திரத்தை வரைய விரும்புகிறேன். ரூத் ஒரு மோவாபிய பெண்; எந்த உரிமையும் இல்லாத புறஜாதியை சேர்ந்த பெண்மணி. இருப்பினும், கிருபை மற்றும் மீட்பின் மூலம் அவள் கிறிஸ்துவின் வம்சாவளியின் ஒரு பகுதியாக மாறுகிறாள். எவ்வளவு நம்பமுடியாத கதை!

ரூத்துக்கு அது எளிதான வாழ்க்கையாக இருக்கவில்லை. அவள் ஒரு அன்னிய தேசத்தில் வளர்ந்தாள். அங்கே கணவனை இழந்து தவித்தாள். அவள் நகோமியைப் பின்தொடர்ந்து வேறுநாட்டிற்கு சென்று வறுமையில் வாழ்ந்தாள். எல்லாமே மிகக் கடினமான சூழ்நிலைகள் என்று சொல்லலாம்.

இருப்பினும், இந்தத் தொடரின் தொடக்கத்தில் நான் சுட்டிக்காட்டியபடி, ரூத்தின் கதை முழுவதும் தேவனின் கைரேகைகளை நாம் காணலாம், மேலும் அவர் முழு நேரமும் அவளது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு நீண்ட மற்றும் கடினமான பயணம், ஆனால் அது மீட்புடன் முடிந்தது. ரூத் வெறுமையான பாத்திரமாக தனது வாழ்வினைத் தொடங்கினாள், ஆனால் அவள் நிரப்பப்பட்டாள்!

உங்களது பருவம் எதுவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் தேவன் செயல்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அழகிய வாழ்வினை உங்களுக்காக நெய்கிறார்; அது முடிக்கப்படவில்லை, அது இன்னும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவன் இரக்கமுள்ளவர், நல்லவர், அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் சோர்வடைவதாகக் கண்டால், ரூத்தின் வாழ்க்கையை இன்னொரு முறை பாருங்கள், தேவன் தம்முடைய மக்களின் நன்மைக்காகவே செயல்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Ruth, A Story Of Redemption

வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!

More

இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: brittanyrust.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்