ரூத், மீட்பின் கதைமாதிரி

Ruth, A Story Of Redemption

5 ல் 4 நாள்

கதிரடிக்கும் தளத்தில்

ரூத்தும் போவாஸும் தங்கள் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலுக்காக அன்றாடம் நம்முடைய சபைகளில் பேசப்படும் மக்கள். ரூத் விசுவாசமுள்ள பெண் என்பதில் சந்தேகமில்லை. அவள் பெத்லகேமுக்கு செல்லும் வழியில் உண்மையான மனமாற்றம் பெற்று புதிய நிலத்திற்கு தனது பயணத்தைத் தொடர்ந்தாள். அவள் வாற்கோதுமை கதிர்களை பொறுக்க வெளியே செல்லும் போது தேவன் தனக்கும் நகோமிக்கும் தேவையானவற்றை கொடுப்பார் என்று நம்பினாள். கஷ்டத்தின் மத்தியிலும் தேவனை அவள் நம்பினாள்.

ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும் என்றால், நமது பருவம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவன் நமது தேவைகளை சந்திப்பார் என்று நாம் நம்ப வேண்டும். சில நேரங்களில் அது கடினமாக இருந்தாலும், தேவனை நம்ப நாம் நம் நம்பிக்கையை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும், அல்லது நம் நம்பிக்கை வளராது, நாம் நம்மால் முடியாது வேளையில் அவரை நம்ப முன்வரும் போது தேவன் நம் வாழ்வில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை முழுமையாகக் காணலாம்.

ரூத் ஒரு நல்லொழுக்கமுள்ள பெண், போலாகும் அப்படிப்பட்ட ஆண் தான். அந்த வகையில் போவாஸும் ரூத்தும் சிறந்த ஜோடி. சிறந்த நல்லொழுக்கமுள்ள இரண்டு பேர் தேவனின் கிருபை மற்றும் நன்மையின் மூலம் ஒன்றிணைந்தனர். இந்தக் கதையின் மூலம் நிறைய சொல்ல வேண்டும் என்று நம்புகிறேன்.

ரூத் இரக்கம், விசுவாசம் மற்றும் பணிவுடன் நடந்துகொண்டதால், அவள் நேசித்த மனிதனால் அவள் பாராட்டப்பட்டாள். போவாஸ் அவளது சிறப்பையும் நல்லொழுக்கத்தையும் கவனித்தாரன் மற்றும் அவளுக்காக 2 ஆம் அதிகாரத்தில் அவளது சொந்த விண்ணப்பத்திற்கு பதிலளித்ததன் மூலம் அவளை கௌரவித்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் அவளுடைய சிறப்பையும் நல்லொழுக்கத்தையும் கவனித்தார்.

"யாரும் பார்க்காத போது நாம் எப்படி இருக்கிறோமோ அதுவே நமது குணம்" என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ரூத் தனது வாழ்க்கை இந்த அளவிற்கு சிறப்பிக்கப்படும் என்று நிச்சயமாக அறிந்திருக்கவில்லை, ஆனால் கோடிக்கணக்கானவர்கள் அவளை ஒரு முன்மாதிரியாக பார்க்கிறார்கள். சிறந்த குணாதிசயங்களைக் கொண்ட தம்முடைய மக்கள் மூலம் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். யாரும் பார்க்கவில்லை அல்லது நம் செயல்களுக்கு எந்த வெகுமதியும் இல்லை என்று நினைக்கும் தருணங்களில் தான் அந்த பாத்திரம் தேவனால் கவனிக்கப்படுகிறது.

நீங்களும் நானும் ரூத் மற்றும் போவாஸ் போன்ற நல்லொழுக்கமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அழைக்கப்படக்கூடிய மக்களாக இருக்க முற்படுவோம். நம்பிக்கை இல்லாமல் போகும் போது நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு பணிவுடன் பதிலளிக்கவும் கற்றுக்கொள்வோம். சுற்றியுள்ள அனைவருக்கும் அன்பான இரக்கத்தின் கரங்களை நீட்டுவோம். உங்கள் வாழ்க்கை யாரைத் தொடுகிறது என்று உங்களுக்குத் தெரியாது ஆனால் தேவன் உங்களுடைய வாழ்க்கையையும் பயன்படுத்துவார்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Ruth, A Story Of Redemption

வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!

More

இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: brittanyrust.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்