ரூத், மீட்பின் கதைமாதிரி

Ruth, A Story Of Redemption

5 ல் 3 நாள்

தனித்துவம்

ரூத் பெத்லகேமில் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் போது, ​​இன்று நாம் தேவனின் பாதுகாப்பையும் மற்றும் வேலையில் திட்டமிடுவதையும் உண்மையில் பார்க்கத் தொடங்குகிறோம். உங்களை ரூத்தினிடத்தில் வைத்து கற்பனை செய்ய முடியுமா? அவள் மதிக்கப்படாத வெளிநாட்டிலிருந்து வந்த விதவை. அவள் சமீபத்தில் ஒரு விசுவாசி. எல்லாமே அவளுக்குப் புதிதாகவும் அறிமுகமில்லாததாகவும் இருந்தது. கணவனை இழந்த சோகத்தை அவள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். ஆனால் எல்லாவற்றினூடாகவும், ஒவ்வொரு உணர்ச்சியையும் மீறி, அவள் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

அதிகாரம் 2-ன் தொடக்கத்தில், ரூத் வயலுக்குச் சென்று உணவிற்கு வேண்டி வாற்கோதுமை மை பொறுக்க முன்முயற்சி எடுக்கிறாள். லேவியரின் சட்டத்தின்படி (லேவியராகமம் 19), அறுவடை செய்பவர்கள் வயலை முழுவதுமாகப் பொறுக்கக் கூடாது, மூலைகளை ஏழைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதே கட்டளை. சிந்தி சிதறி கிடக்கும் வாற்கோதுமையை சேகரிக்கும் கடின உழைப்பைச் செய்ய ரூத் வெளியேறியது மட்டுமல்லாமல், அதில் தாழ்மையாகவும் இருந்து அவ்வேலையை செய்தாள்.

இந்த அதிகாரத்தில் தானே போவாஸையும் நாம் காண்கிறோம்! இந்த புத்தகம் முழுவதுமே, போவாஸ், நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறார். இயேசு பாவியை தன் அன்பான கரங்களில் ஏற்றுக்கொள்வது போன்ற அழகான பரிமானம். அப்படியானால் போவாஸ் என்ற இந்த மனிதர் யார்? அவர் நகோமியின் திருமணத்தின்‌ மூலம்‌ அவளது கணவனின் உறவினர் என்பது நமக்குத் தெரியும். ‌சமூகத்தில் மூத்த மற்றும் செல்வச் செழிப்பும் கொண்ட மனிதர் என்பதையும் நாம் அறிவோம். அவரது பெயரின் பொருள் "வலிமை". அவர் தனது ஊழியர்களை நன்றாகவும் அந்நியர்களை அன்பாகவும் நடத்துகிறார் என்பதும் நமக்கு தெரியும். மிக முக்கியமாக, அவர்
தேவனின் மனிதர் என்பதை நாம் அறிவோம்.

போவாஸ் ரூத்தை தனது வயலில் பார்த்து அவளைப் பற்றி விசாரித்த பிறகு, அவளை தனது வயலில் தங்கச் சொல்கிறான், அவள் கவனித்துக் கொள்ளப்படுகிறாள் என்பதில் உறுதியாக இருந்தான். அத்தகைய ஒரு அன்பான வாய்ப்பில், ரூத் தரையில் விழுந்து, போவாஸ் தன்னிடம் ஏன் இவ்வளவு கருணை காட்டினார் என்று கேட்கிறாள். ரூத் ஒரு மோவாபியராக இருந்ததை நினைவில் வையுங்கள், ஆனாலும் போவாஸ் அவளுக்காக வாற்கோதுமைகளை சிந்த தன்னுடைய ஊழியர்களுக்கு கட்டளையிட்டிருந்தான்.

அவள் மீதான நோவாவின் கிருபைக்கான கேள்விக்கு, போவாஸ் அழகாக பதிலளித்தார். போவாஸ் ரூத்தின் உள்ளார்ந்த அழகையும் குணத்தையும் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், அவள் மீது ஒரு ஆசீர்வாதத்தையும் கூறினார்.

தேவன் நம் அனைவரையும் - வெளிநாட்டவர், ஏழைகள், தனிமையானவர்கள், உடைந்தவர்கள், கசப்பானவர்கள், நம் அனைவரையும் - தம் சிறகுகளின் கீழ் அழைத்துச் செல்ல விரும்புகிறார். அவர் நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்து நம்மைப் பாதுகாக்கவும் நமக்கு அடைக்கலம் கொடுக்கவும் விரும்புகிறார். ரூத்தின் மீதான போவாஸின் விருப்பம், தேவன் நம்மீது வைத்திருக்கும் விருப்பத்தின் ஒரு நிழலாட்டம். நாம் அனைவரும் அவருடைய சிறகுகளின் கீழ் ஓய்வையும் தங்குமிடத்தையும் கண்டடைவோம். தேவன் நம்மை பாதுகாக்க விரும்புகிறார் மற்றும் நம்மை அவர் எவ்வாறாக வடிவமைத்தாரோ அதாவது நமது பிறப்பின் சித்தத்தின் படியே நம்மை வளர அனுமதிக்கிறார்.

ரூத் வீடு திரும்பியபோது, ​​அவள் நினைத்ததை விட அதிகமான உணவை எடுத்துக்கொண்டு திரும்பினாள். சில அறிஞர்கள் ரூத் ஒரு வருடத்திற்கு போதுமான உணவை எடுத்துக் கொண்டதாக நம்புகிறார்கள்! நண்பரே, இன்று நீங்கள் கூட நம்பிக்கையின் கதிர்களயோ அல்லது குணப்படுத்தும் வல்லமையின் கதிர்களை தேடிக்கொண்டிருக்கலாம், ஆனால் தேவன் உங்களுக்கு இன்னும் பலவற்றை கொடுக்க விரும்புகிறார்! நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அல்லது கற்பனை செய்வதற்கும் மேலான‌ காரியங்களை தேவன் உங்களுக்கு தருவார்!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Ruth, A Story Of Redemption

வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!

More

இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: brittanyrust.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்