ரூத், மீட்பின் கதைமாதிரி

Ruth, A Story Of Redemption

5 ல் 2 நாள்

பெருக்கத்திற்கு நேரான ஒரு பயணம்

தேவன் நமக்காக இருக்கிறார், அவர் நம் பக்கத்தில் இருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது மிகவும் ஊக்கமளிக்கிறது. உலகத்தில் நடக்கும் எல்லாவற்றின் மூலமாகவும், வாழ்க்கையை நாம் எவ்வளவு கேவலமானதாக உணர்ந்தாலும் தேவனின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்னும் உண்மை நமக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

நகோமி மற்றும் ரூத்தின் கதையை விட சில கதைகள் இதை சிறப்பாக நமக்கு எடுத்துரைக்கின்றன. இன்றய காலக்கட்ட கண்ணோக்கில் அதை பார்ப்போமானால், அவர்கள் இருவரும் விதவைகள்; ஒரு பொல்லாத தேசத்தில் தனியாக, தாங்கள் விரும்பும் ஆண்களை இழந்து தவிக்கும் இரண்டு பெண்கள். இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் இந்நிலைகள் அனைத்தும் மாற உள்ளன. ஒரு நாள் நகோமி, தேவனின் தயவு அப்படத்தின் வீடாகிய பெத்லகேமுக்கு கிட்டியது என்றும் அங்கு உணவு மீண்டும் கிடைக்கிறது என்பதையும் கேள்விப்பட்டாள். கிட்டத்தட்ட உடனடி நடவடிக்கையுடன், நகோமி தனது வீட்டிற்கும் தன்னுடைய மக்களிடத்திற்க்கும் திரும்ப முடிவு செய்கிறாள்.

முதலில், ஓர்பாள் மற்றும் ரூத் இருவரும் நகோமியுடன் பெத்லகேமுக்கு செல்ல முடிவு செய்கின்றனர். பயணம் தொடங்கி கொஞ்ச காலத்தில், நகோமி தனது மருமக்களைக் கூட்டிக் கொண்டு போபதைப் பற்றி தனது மனதை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. நகோமியின் வற்புறுத்தலின் பேரில், ஓர்பாள் மோவாபுக்குத் திரும்புகிறாள். ரூத்தோ வேறு தேர்வு செய்கிறாள். ரூத் தேவனைப் பின்பற்ற முடிவு செய்கிறாள், பெத்லகேமுக்குச் செல்லும் வழியில் ஒரு உண்மையான உரையாடலை நாம் காண்கிறோம்.

இரண்டு பெண்களும் பெத்லகேமை அடையும் வரை பயணத்தைத் தொடர்கின்றனர். அவர்கள் பெதலகேமை வந்தடைகையில் அந்நகரில் ஒரு கலக்கம் என்று வேதாகமம் சொல்கிறது. நகோமியும் அவரது குடும்பத்தினரும் அங்கு நன்கு அறியப்பட்டவர்கள் என்று தெரிகிறது. வெளியூரில் இருந்து ​​நகோமி திரும்பி வருவதைப் பார்த்து ஊர் பெண்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

தனது அடையாளத்தை எதிர்கொள்ளும் போது, ​​நகோமி நகரப் பெண்களிடம் இனி தன்னை நகோமி (இனிமையான) என்று அழைக்காமல், மாராள் (கசப்பான) என்று அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். நீங்கள் எப்போதாவது நகோமியைப் போல் உணர்ந்திருக்கிறீர்களா, முன்பு முழுமையாகவும் இப்போது காலியாக இருப்பதுபோல? நமக்கு அன்பான ஒன்று நம்மிடமிருந்து பறிக்கப்படும் அந்த தருணங்களில் தானே நாம் பாதிக்கப்பட்டவராகவும் கோபமாகவும் உணர்கிறோம். கோபப்படுவது இயற்கைக்கு மாறானது அல்ல; கோபம் கசப்பாக மாறாதவாறு நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் கவனிக்க வேண்டும் காரியம் ஒன்றுண்டு, இந்த கதையில் நகோமி தான் திரும்பி வந்து வேஷம் போடவில்லை; அவள் தன் மக்களிடம் திரும்பி, நேர்மையாய் காரியங்களைச் சொன்னாள். நாமும் கூட நமது போராட்டங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் நேர்மையாக இருக்கவும், நமக்கு ஊக்கம் தேவைப்படும்போது நமது கசப்பான அனுபவங்களை ஒப்புக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். கடினமான காலங்களில் நம்மை சுற்றி விசுவாசிகளின் சமூகம் இருப்பது குணப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியமாகும்.

வாற்கோதுமை அறுவடையின் தொடக்கத்தில் ரூத்தும் நகோமியும் அப்படத்தின் வீடு பெத்லகேமுக்குத் திரும்பினர். இது தற்செயலா? நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு கண்ணுக்குத் தெரியாத வல்லமையை இங்கு காணலாம், இந்த இரண்டு பெண்களும் தேவன் இந்த நேரத்தில் கண்ணுக்கு தெரியாத பெரிய மற்றும் அற்புதமான விஷயங்களைச் செய்வதைப் பார்க்க உள்ளனர்.

இன்று உங்களுக்கு எனது ஊக்கமோவென்றால், தேவன் வேலை செய்கிறார் என்று நம்புவதே. அவருடைய திட்டம் இயக்கத்தில் இருப்பதையும் நீங்கள் அவருடைய பார்வையில் இருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களைப் பற்றி மறக்கவில்லை, எதுவும் அவர் உங்களை நேசிப்பதை நிறுத்த முடியாது. நீங்கள் கஷ்டப்படுகிறீர்களானால் அல்லது தனியாக உணர்ந்தால், உங்களைச் சுற்றியுள்ள விசுவாச மக்களை அணுக பயப்பட வேண்டாம்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Ruth, A Story Of Redemption

வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!

More

இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: brittanyrust.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்