கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி
நாம் ஜெபிப்போம்:
பரம பிதாவே, நாங்கள் ஒரு காலத்தில் கிறிஸ்துவிலிருந்து பிரிந்திருந்தோம், உம்முடைய ஜனங்களையும் கட்டளைகளையும் விட்டு பிரிக்கப்பட்டு, நம்பிக்கையும் உம்மையும் இல்லாமல் வாழ்ந்தோம்.
ஆனால் இப்போதோ ஓ தேவனே, கிறிஸ்து இயேசுவில், தூரமாக இருந்த நாங்கள், அந்த ஞானிகளைப்போல கிறிஸ்துவின் இரத்தத்திற்கு அருகாமையில் வந்துள்ளோம்.
கிறிஸ்துமஸ் என்பது உம்முடைய கிருபையை குறிக்கிறது, எங்கள் தகுதியை அல்ல. உம்முடைய வருகை கிறிஸ்துவாகிய நீர் எங்களை பாவத்தில் இருந்து பிடுங்கி எடுக்க முதலாவதாகவும், பிறகு உம்மிடம் தாழ்மையில் வந்து ஆராதிக்கவும் அமைந்திருக்கிறது.
அவர் நீதிமான்களை அல்ல பாவிகளை அழைக்கவே வந்தார். எங்கள் முரட்டாட்டங்கள் தோல்விகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு, சந்தோஷத்தோடே குமாரனுக்கு முன்பாக பணிகின்றோம்.
அவர் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.
More