கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி
நாம் ஜெபிப்போம்:
பிதாவே, உம்முடைய குமாரன் என்னும் தனி நபரைக்குறித்து வியப்படைகிறோம்.
அவர் உம்மோடு நித்திய சந்தோஷத்தில், காலத்தின் துவக்கம் முதல், முழுமையும் திவ்வியமான உருவுமாய் இருந்தார். ஆனாலும் இந்த மனுகுலத்திற்காக மனித ரூபத்தை அவர் எடுத்து இந்த பாவத்தால் வியாதிப்பட்ட உலகத்தின் வலியையும் கஷ்டங்களையும் எங்களை இரட்சிக்கும்படியாக ஏற்றுக்கொண்டார்.
கிறிஸ்துவின் மூலமாக நீர் எங்கள் மீது கொண்டுள்ள அன்பு, உம்முடைய முழு மனதின் அன்பையும் கண்டுபிடிப்பதற்கு அப்பாற்பட்டது எனினும், ஆனால் நாங்கள் மேலும் அறிய விரும்புகிறோம். இத்தகைய அன்பிற்கே எங்கள் ஆராதனை.
உம்முடைய குமாரனை நாங்கள் வணங்குகிறோம், இன்னும் அதிகம் அவரை அறிய விரும்புகிறோம் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.
More