பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்மாதிரி

Running the Race: 5-Days of Encouragements for an Active Lifestyle

5 ல் 4 நாள்

ஓய்வில் விசுவாசம்

A.D.A இன் டூர் டி க்யூர் பைக் சவரியின் தொடக்கத்தில், ரவுலியும் எடியும் வலுவாக உணர்ந்தனர், மேலும் அவர்கள் சிற்றுண்டி இடங்களைக் கடந்து சென்றனர்.

12 மைல்கள் மேல் கடந்த பிறகே அவர்கள் தங்கள் ஒரு பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தார்கள். சோர்வாகவும், பசியுடனும், நீரிழப்புடனும், அவர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததையும் கண்டறிந்தனர். திரும்பிப் பார்க்கும்போது, ​​சவாரிக்கென்று கட்டப்பட்டிருந்த நிறுத்தங்களை அவர்கள் பயன்படுத்தி இருந்தால், அவரும் எட்டியும் நேரத்தில் சரியான பாதையில் சென்று இருந்திருக்கலாம் என்று ரவுலி கூறுகிறார். மீதமுள்ள சவாரிக்கு அவை எரிபொருளாக இருந்திருக்கும்.

ரவுலி மற்றும் எடியின் கதை ஓய்வின் முக்கியதுவத்திற்கு ஒரு சான்று

மீண்டும் மீண்டும், ஓய்வு நமக்கு மறந்துவிடுகிறது. செய்ய வேண்டியவைகளின் பட்டியல்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுவதோடு, நாம் பெலன் அற்று போகும் வரை செயல்பாடுகளால் நம் வாழ்க்கையை நிரப்புகிறோம். நமது கால அட்டவணையை நாம் உண்மையிலேயே கவனித்து, இடைநிறுத்தப்பட்டு, கருத்தில் கொண்டால், “குழந்தை, ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது”எனக்காக நேரம் ஒதுக்குங்கள் என்று தேவன் நம்மிடம் சொல்வதைக் கேட்போம். ”

ஆதியாகமத்தின் முதல் அதிகாரங்களில், தேவன் படைப்பு அனைத்தையும் உருவாக்குகிறார், பின்னர் அவர் ஓய்வுக்கொள்கிறார். அவர் ஓய்வுக்கொள்கிறார், அதையே நாமும் செய்யும்படி அழைக்கிறார். யத்திரகமம் கூட இதையே கூறுகிறது அவர் ஓய்வெடுப்பதற்கான நேரத்தை உருவாக்கியபோது, ​​அவர் அதை "பரிசுத்தமாக்கினார்" (ஆதியாகமம் 20:11).

இந்த ஓய்வு நாள் நம் வாழ்க்கையில் நாம் சற்று நேரத்தினை ஒதுக்கி பின்னும் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்த வழங்கப்பட்டது. தேவனை வணங்கியும், பின்னர் உடல் ஓய்வுக்கொண்டும், பொழுதுபோக்கு மறுசீரமைப்பு, தொடர்புடைய மற்றும் தேவனுடன் நம் இதயங்களை மாற்றியமைக்கும் நேரம் ஆகியவற்றின் மூலம் நாம் ஓய்வெடுக்கிறோம்.

ஆனால் பெரும்பாலும், நாம் மிக வேகமாக நகர்கிறோம். ரவுலி போன்றே நிறுத்தங்களில் நிறுத்தாமல் நாம் வேகமாக செல்கிறோம். நாம் முற்றிலுமாக தணிந்துபோகும்போதுதான் நாம் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அப்போது தான் “என்ன நடந்தது?” என்றும் சிந்திக்கின்றோம்

சங்கீதம் 46:10 ல் தேவன் இவ்வாறாக கூறுகிறார், நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். முக்கியமாக இதில், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நிறுத்தி என்னை நினைவில் வையுங்கள்" என்று தேவன் சொல்கிறார். ஓய்வெடுக்கும் தருணங்களே நம் வாழ்வின் அடுத்த பாதையை கற்றுக்கொள்ளவும், வளரவும், திசையைப் பெறவும் நமது வாய்ப்புகள்.

தேவன் உங்களை மெதுவாக்க அல்லது இப்போதே நிறுத்த முயற்சிக்கக்கூடும், எனவே நீங்கள் எப்போதும் ஓடிக்கொன்டே இருப்பதால் என்றுமே நீங்கள் பார்க்கக்கூடாத விஷயங்களை அவர் உங்களுக்குக் காண்பிப்பார். வாழ்க்கையில் நிறுத்தங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றை விசுவாசத்தோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

நிதானமாக ஏதாவது செய்வதை நிறுத்துவது ஒரு தியாகம் போல் உணரலாம். ஒருவேளை நீங்கள் விரும்பியதையும் அல்லது உங்களுக்கு தேவை என்று உணர்ந்தது அனைத்தையும் நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் இந்த தருணங்களில், நீங்கள் தேவனுடன் தொடர்பு கொள்கிறீர்கள். தேவன் உங்களைப் பார்த்து, “நல்லது, குழந்தை” என்று கூறுகிறார்.

நிறுத்தங்கள் உங்களை நிரப்புகின்றன, இதன் மூலம் தேவன் உங்களை அழைத்த வாழ்க்கைக்கு உங்களால் முழு நிறைவிலும் வாழ முடியும். அவை உங்களை சரியான பாதையில் அமைத்து, உற்சாகப்படுத்துகின்றன, மேலும் உங்களுக்காக குறிக்கப்பட்ட பந்தயத்தை வலுவாக முடிக்க உங்களை அனுமதிக்கின்றன. ஓய்வெடுப்பதற்கான நீங்கள் ஒதுக்கும் அந்த நாளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கவனியுங்கள்.

நீங்களே வாசிப்பதாக இருந்தாலும் அல்லது ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் உரையாடுவதாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஆற்றல் நிறைந்ததைச் செய்யுங்கள்.

இன்றய கேள்வி

உங்கள் வாராந்திர வழக்கத்தில் நீங்கள் எவ்வாறு ஓய்வு நிறுத்தங்களை உண்மையுடன் உருவாக்க முடியும்?

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Running the Race: 5-Days of Encouragements for an Active Lifestyle

இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.

More

லைஃப்வாட்டர் இன்டர்நேஷனல் அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.lifewater.org க்கு செல்லவும்