பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்மாதிரி
சவாரி செய்யும் சமாரியன்
2014 ஆம் ஆண்டில், அமெரிக்க நீரிழிவு சங்கத்திற்கான நிதி திரட்டும் நிகழ்வான L.A. இல் A.D.A இன் டூர் டி க்யூர் பைக் ரைடில் ரவுலியும் எடியும் பங்கேற்றனர்.
தீவிர ஓட்டுனர்கள் என்பதால், இருவரும் இந்த 62 மைல் பயணத்தை ஒரு வேடிக்கையான முயற்சியாக நாடினர். எடியுடன் ஏராளமான ஓய்வு நிறுத்தங்களில் பறப்பதை ரவுலி நினைவு கூர்ந்தார்.“ அடுத்த இடத்தில் நிறுத்துவோம்! இது தொடக்கமே!"ஆனால், நாள் ஆக ஆக, இருவரும் தவறான திருப்பத்தை எடுத்துள்ளனர் என்பதை இருவரும் உணர்ந்தனர்.
"நாம் மோசமான நிலையில் இருக்கிறோம்," என்று ரவுலி கூறினார், அவர்களின் மோசமான பசி மற்றும் நீரிழப்பைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்.
"நான் தோற்கடிக்கப்பட்டது போல் உணர்கிறேன்," ரவுலி மேலும் கூறினார். “ஆதரவு வாகனத்தினை அழைத்து நம்மை அழைத்துச் செல்ல சொல்ல வேண்டுமா?, என சிந்தித்துக்கொண்டிருந்தேன் ’இது முடிந்துவிட வேண்டும் என்று நான் விரும்பினேன்".
அப்போதுதான் அவர்களுக்கு அருகில் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் வந்து நின்றார். அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து, அவர்களுக்கு இரண்டு சிறிய பாட்டில்கள் ஊறுகாய் சாறு கொடுத்தார். ஊறுகாய் சாற்றில் அதிக அளவு சோடியம் மற்றும் சில வினிகர் உள்ளன, இது எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது. ரவுலியும் எட்டியும் ஊறுகாய் சாற்றை எடுத்துக்கொண்டு தங்கள் வண்டியை எடுத்தனர், அப்போது நடந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டார்கள்.
வெற்றி கோட்டிற்கு 11 மைல் தூரம் அவர்கள் சென்றால் போதும், ஒவ்வொரு மைலும் மன மற்றும் உடல் வேதனை. அந்த நாளில், ரவுலியும் எட்டியும் அவர்கள் எதிர்பார்த்ததை விட 74 மைல் சென்றனர் - கிட்டத்தட்ட 12 மைல் அதிகமாக சவாரி செய்தனர்.
"அந்த மிதிவண்டி ஓட்டுநருக்காக நான் மிகவும் நன்றி உணர்வோடு இருந்தேன், அவருடைய பெயரைக் கூட பெறவில்லை" என்று ரவுலி கூறினார். "அவர் எங்கு இருந்து வந்தார் என்றே தெரியவில்லை, ஆனால் எங்கள் தேவை நேரத்தில் எங்களுக்கு வந்து உதவினார்."
"அவர்கள் என் தலைக்கு மேல் பந்தயத்தை முடித்ததற்கான பதக்கத்தை வைத்த போது என் தொண்டையில் ஒரு பெரிய கட்டி இருப்பது போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.
ரவுலிக்கு 2 ஆம் வகை நீரிழிவு நோய் உள்ளது. அவரைப் பொறுத்தவரை, அமெரிக்க நீரிழிவு சங்கத்திற்கான இந்த சாதனை உலகின் சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும்.
ரவுலியும் எட்டியும் அவர்கள் பந்தயத்தின் முடிவு கோட்டைக் கடக்க ஒரே காரணம் அந்த அந்நியரின் தாராள மனப்பான்மைதான் என்று நம்புகிறார்கள். அறியப்படாத மிதிவண்டி ஓட்டுநரின் பார்வையில் இந்த கதையை கருத்தில் கொள்வோம்.
அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்திருப்பார்? சாலையின் ஓரத்தில் இரண்டு வாகன ஓட்டிகளை கவனிக்க அவர் மிகவும் கவனமாக வந்திருக்க வேண்டும், ஏனெனில் அவர் தானும் தனது சொந்த பந்தயத்தின் எல்லையை நோக்கி போய் கொண்டிருந்திருப்பார். பின்னர் தான் கவனமாக நிரம்பிய ஊறுகாய் சாற்றைக் கொடுப்பதற்காக தனது மிதிவண்டியை நிறுத்தியிருக்கிறார்?
நல்ல சமாரியரின் உவமையை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம், குற்றுயிராய் கிடந்த மனிதருக்கு உதவிய அந்நியன், ஆனால் அது உண்மையில் அதை போல நாம் வாழ்வதற்கு என்ன தேவைப்படும் என்பதைப்பற்றி உண்மையில் சிந்திக்கின்றோமா?
ஒரு நல்ல சமாரிடன் இவ்வாறான மனநிலையுடன் வாழுவர்,"என்னுடையது ஏதுவோ அது உன்னுடையது"சுற்றுப்பயணத்தின் போது அந்த அந்நியர் தனது பொருட்களை தனக்காக வைத்திருக்க முடியும், எஞ்சியிருக்கும் 11 மைல்களில் என்ன இருக்கும் என்று தெரியாமல். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவர் அதை மற்றவர்களுக்கு கொடுத்தார்.
ஒரு நல்ல சமாரியன்கவனம் செலுத்துகிறார்.ஒவ்வொரு நாளும், நம்முடைய முகங்களின் முன்னால் நாம் நன்மை செய்வதற்கும், மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும், மற்றும் தேவனுக்கு சேவை செய்வதற்கும் நமக்குத் தேவன் வழங்கும் வாய்ப்புகளை தவரவிடுகின்றோம். யோவான் 4:35 இவ்வாறாக செல்லுகிறது, "அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்." (சேதி).
இன்று, நாமும் அந்த டூர் டி குணப்படுத்தல் வாகன சவாரியில் கலந்துக்கொண்ட தாராளமான ஓட்டுநர் போல வாழலாம். நம் கண்களைத் தேவைக்குத் திறக்கும், மனநிலையுடன் வாழ்வோம், "என்னுடையது எல்லாம் உன்னுடையது" என்னும் மனநிலை
இன்றய கேள்வி
ஒரு நல்ல சமாரியன் போல் நாமும் நடைமுறையில் எப்படி வாழ தொடங்குவது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.
More