பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்மாதிரி
தேவன் இல்லாமல் நம்மால் ஓட முடியாது
நாம் சேவை செய்யும் தேவனின் நம்பமுடியாத சக்தியை மறந்துவிடுவது மிகவும் எளிது. மாறாக, நாம் நம்மை நம்பியிருக்கிறோம். நம் சொந்த உடலையும், நம்முடைய சொந்த ஞானத்தையும். தேவனின் மகத்துவத்தை எங்காவது நம் மனதின் இருண்ட மூலையில் வைக்கிறோம்.
இன்று இருட்டில் இருந்து அதை வெளியே உயர்த்தவும்,ஏனென்றால் எதையும் நம்மால் செய்ய முடியாது. எனவே தேவனின் மகத்துவத்தை முன்னணியில் கொண்டு வந்து சிந்தித்துப்பாருங்கள்.
எரேமியா 31:35 இவ்வாறாக கூறுகிறது,சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர். சங்கீதம் 89 கூறுகிறது, “தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர். ”
மத்தேயுவில், இயேசு தம்முடைய சீடர்களுடன் மீன்பிடி படகில் தூங்குகிறார். ஒரு புயல் அடிக்கிறது, சீடர்கள் பயப்படுகிறார்கள், அவர்களை காப்பாற்ற இயேசுவை எழுப்புகின்றனர்.
மத்தேயு 8:26 கூறுகிறது, “அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.”
லூக்கா 19 ல் இயேசுவின் சீஷர்கள் அவரை "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்".
ஆச்சரியப்பட்ட பரிசேயர்கள், “போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
தேவன் புகழ்ச்சிக்கு மிகவும் தகுதியானவர், படைப்பு அதைக் கோருகிறது. ஆனால், படகில் இருக்கும் சீடர்களைப் போலவே, தேவனின் மகத்துவத்தை நமக்குத் தேவைப்படும்போது மட்டுமே நாம் நினைவில் கொள்வதால் பெரும்பாலும் குற்றவாளிகளாகிறோம். மாறாக, அதை நாமே செய்ய முயற்சிக்கிறோம். உண்மை என்னவென்றால்:நாம் அதை நாமே செய்யவதர்காக படைக்கப்படவில்லை.
அலைகளும் காற்றும் அமைதியாக இருக்கும்போது நாம் தேவனிடம் கூக்குரலிட்டால் என்ன? தேவனின் மகத்துவத்தை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் கொண்டு வந்து, நம்மைத் தாழ்த்திக் கொண்டால் என்ன?
இன்றைய கேள்வி
<இன்று நீங்கள் தேவனிடம் சமர்ப்பிக்கும் மூன்று விஷயங்கள் என்னென்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.
More