பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்மாதிரி
பந்தயத்தில் ஓடுதல்
2018 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் பாதுகாப்பான தண்ணீருக்காக பணம் திரட்ட மைக் புறப்பட்டார். இந்த பயணம் ஒன்பது நாட்கள் சான் டியாகோ, CA இலிருந்து தென் கரோலினாவின் சார்லஸ்டன் வரை மொத்தம் 2,700 மைல்கள் ஆகும். நான்கு நாட்களில், அவர் குளிர் மற்றும் தலையில் இருந்து கால் வரை புண் ஆகியவற்றுடன் போராடினார், மேலும் சாலையில் இன்னும் ஐந்து நாட்கள் அவரால் பயணம் செய்ய முடியுமா என்று சந்தேகித்தார்.
அந்த தருணங்களில், ஊக்கக்கெடுள்ள எண்ணங்களுக்குள் நழுவுவது மிகவும் எளிது, ஆனால் எபிரெயர் 12 மற்றும் பிலிப்பியர் 4: 8 அவரது காதுகளில் ஒலித்தன.அவர் முன் வைத்திருந்த மகிழ்ச்சிக்காக அவர் சிலுவையை அவமானங்களையும் திட்டுதல்களையும் மீறி தாங்கினார்.
"இயேசு மரணத்தை வென்றார் மற்றும் சிலுவையை சகித்தார்," மைக் மேலும் கூறினார். "அவருக்கு முன்னால் இருந்த சந்தோஷத்திற்காக, அவர் சிலுவையைச் சந்தித்ததோடு, நம்முடைய பாவத்தை எடுத்துக்கொண்டு, நாம் இனிமேல் அப்பாவங்களை சுமக்க தேவை இல்லாததாக மாற்றினார், இயேசு நமக்கு செய்ததை நாம் அறிந்திருக்கிறோம், அதனால் தானே நம்மால் நம்முடைய ஓட்டத்தையும் சகித்துக்கொண்டு ஓடுகின்றோம்…அடுத்த ஒன்றும் இல்லாத 50, 60 மைல்களுக்குச் செல்ல இவ்வாரே மைக் உம் சிந்தித்தார்"
பிலிப்பியர் 4: 8 இவ்வாறாக கூறுகிறது, "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
மைக் ஏழு ஆண்கள் கொண்ட ஒரு குழுவுடன் சவாரி செய்தார்-வீல்ஸ் 4 வாட்டர் அணி- அவர் அந்த அணியின் முன்னணி தலைவர். அணியின் முன்னணி தலைவராக, மைக் அவர்களுடன் இந்த வசனத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.
"தேவன் நம்மிடையே எவ்வளவு திறமைகளை வைத்திருக்கிறார் என்பதை உண்மையாக அடிப்படையாகக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நமது ஆறுதலின் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் நமது திறன்களை நாம் கட்டுப்படுத்துகின்றோம். நன்மையானதிலும், உன்னதமானதிலும், உண்மையிலும் கவனம் வையுங்கள். அந்த கடினமான காலங்களில், எனது மனநிலையை ‘நான் மிகவும் நொறுக்கப்பட்டுள்ளேன்’ என்று செல்ல அனுமதித்தால்; மற்றும் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், என்றும் ஏற்றுக்கொண்டால் ’பிறகு நான் பார்ப்பது அவ்வளவுதான். அதேசமயம் ‘நான் சக்திவாய்ந்தவன்’ மற்றும் ‘என்னால் இதைச் செய்ய முடியும்; மற்றும் இதற்காக நான் பயிற்சியளிக்கப்பட்டிருக்கேன்… என்று என் மனநிலையை மாற்றியமைத்தல் அதையே நான் பார்க்கிறேன்.”
உங்கள் சவாரி, உயர்வு, ஓட்டம், ஏறுதல் அல்லது நீச்சல் போன்றவற்றில்,“நீங்கள் காலடி எடுத்து வைக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு நீங்கள் தகுதியானவரே”என்றார் மைக்.
நீங்கள் திறமையானவர், வலிமையானவர், விடாமுயற்சியுடன் பந்தயத்தை உங்களால் ஓட முடியும்.இயேசு நமக்காக என்ன செய்தார் என்பதை நினைவில் வையுங்கள். அப்போது நமக்கு முன்வைக்கப்பட்ட பந்தயத்தை நம்மால் செவ்வனே ஓட முடியும்
இன்றய கேள்வி
இன்று உங்கள் முழு திறனுடனும் பந்தயத்தை ஓடுவதற்கு உங்களைத் தடுக்கும் வலிகள் அல்லது மன அழுத்தங்கள் என்னென்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.
More