இளைப்பாற நேரம் ஒதுக்குவதுமாதிரி

Making Time To Rest

5 ல் 5 நாள்

வெளியே ஊற்றும்படியாக உன்னை நிரப்பு.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது என்றால் வெறுமனே — என்னுடைய முழு சுபாவத்தையும் அவருடைய வல்லமைக்கு ஒப்புவிப்பதாகும். ஆத்துமாவை பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புவிக்கப்படும்பொழுது, தேவன்தாமே அதை நிரப்புவார். - ஆன்ட்ரூ முர்ரே

நாம் ஏதாவதொரு வழியில் உழைத்துக்கொண்டே இருப்பதினால்தான் நமக்கு இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளும்பொழுது அல்லது இளைப்பாறுதலை உணரும்பொழுது, நாம் அப்படியே இருந்துவிடுவோம் என்று அர்த்தமில்லை.

நாம் திரும்பவும் உழைப்போம்.
நாம் மற்றவர்களுக்கு திரும்பவும் உதவி செய்வோம்.
நாம் திரும்பவும் உணர்வுபூர்வமாக வெறுமையாய் உணருவோம்.

இளைப்பாறவேண்டும் என்பதற்காக மட்டுமே இளைப்பாறுவது சரியல்ல. நாம் இளைப்பாறி இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளுவது, திரும்பவும் உழைப்பதற்கு தான். உழைப்பதற்கு மற்றும் இளைப்பாறுவதற்கு ஒரு அழகான அமைப்பு இருக்கிறது; அதாவது நாம் ஊற்றுவதற்காக நிரப்பப்படுவது.

நாம் விவாதித்தவண்ணமாக, தேவனுடைய வார்த்தையை தியானித்து, எழுதி வைத்து, மற்றும் நம்மை கவனச்சிதறல் அடைய வைக்க கூடிய காரியங்களிலிருந்து நம்மை பிரித்தெடுக்கும்பொழுது நாம் திரும்பவும் நிரப்பப்படுவோம். இவைகளை நாம் அனுதினம் செய்யும்பொழுது நாம் இளைப்பாறுதலை பெறுகின்றோம். நம்முடைய சரீரத்திற்கு எப்படி இரவில் போதுமான அளவு இளைப்பாறுதல் தேவைப்படுகின்றதோ, அதேபோல் நம் ஆவிக்கும் தேவைப்படுகிறது. பலமான மற்றும் துடிப்பான ஆவியை பெற்றுக்கொள்ள அதற்கு நாம் மூலதனம் செலுத்தவேண்டும். ஒரு வாரம் விடுமுறை எடுத்தால் போதும், அதுவே நம்மை அநேக மாதங்களுக்கு எடுத்து செல்லும் என்று நாம் எண்ணக்கூடாது. நாம் நிலைத்திருக்க, அனுதினம் நம்முடைய இளைப்பாறுதலின் பாத்திரத்தில் சேமிக்கவேண்டும். அநேகமுறை அந்த பாத்திரத்தில் இருந்து நாம் ஊற்றியிருந்தால் அதை கவனமாக கையாளவேண்டும்.

அவருடைய புத்தகத்தில், காலியாக இருந்து நடத்துவது: உங்கள் பாத்திரத்தை மீண்டும் நிரப்பி உங்கள் உணர்ச்சிகளை உத்வேகப்படுத்துவது, எழுத்தாளர் மற்றும் போதகர் வேயின் கார்டெய்ரோ அவர் கண்ட கனவை சொல்கிறார். ஒரு ஸ்திரி ஒரு விவசாயியை அவர் நிலத்தில் சென்று சந்தித்து அவரிடம் இல்லாத ஒன்றை வேண்டி கேட்டுக்கொண்டாள். அவர் சொன்னார், "நாளைக்கு வா, அப்போது என்னிடம் அதிகம் இருக்கும்." அவள் சோகம் அடைந்தாள் ஆனால் அது அந்த விவாசாயியை கவலைப்படுத்தவில்லை. அவர் தொடர்ந்து வேலையைப்பார்த்தார். அவரிடம் முட்டை மற்றும் பால் இல்லாதபோது, மக்கள் அவருடைய நிலத்திற்கு அனுதினம் வரும்போது, அவர் அவர்களிடம் வெறுமனே, "நாளைக்கு வா, அப்போது என்னிடம் அதிகம் இருக்கும்." போதகர் கார்டெய்ரோ இந்த கனவை கண்டபின்பு இந்த புதிய பார்வையை பகிர்ந்துகொண்டார்:

நான் என்னை ஒரு கற்பனையான, இடைவிடாமல் அதிகமாய் செய்ய வேண்டிய, கடந்த வாரத்தைக் காட்டிலும் அதிகமாய் செய்ய வேண்டிய சுழற்சியில் என்னை சிக்கிக்கொள்ள வைத்து விட தேவையில்லை. எனக்கு ஒவ்வொருநாளும் அதற்கேற்ற நேரம்தான் இருக்கிறது, அதில் என் முழு இருதயத்தோடு எதை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நேரம் முடியும்போது, நான் சொல்லுவேன், "நாளைக்கு வா, அப்போது என்னிடம் அதிகம் இருக்கும்” என்பதாக.

ஒவ்வொரு நாளையும் நாம் ஒரு மனதளவு, உணர்வளவு மற்றும் சரீர-அளவு சக்தியோடுதான் சந்திக்கிறோம். நம்மிலிருந்த எல்லாவற்றையும் நாம் ஊற்றிவிட்டபிறகு, நாம் இளைப்பாறவேண்டும். நாம் இந்த வெறுமையான நிலையில் இருக்கும்போதுதான், நம்முடைய ஜீவியத்தில் அவருடைய கிரியைக்கு தடைகள் குறைவாயிருக்கும்.

சாய்ந்து அமர்ந்து, அமைதலாய் இருந்து, இளைப்பாறு. இதுவே தேவ ஆவியால் நீ நிரம்பக்கூடிய சரியான சிறந்த நேரம்.

சிந்திக்க

  • நீ காணும் ஒவ்வொரு தேவையையும் சந்திக்கவேண்டும் என்று நீ உணருகின்றாயா?
  • நீ நிரப்பப்பட்டதுபோல் உணர உன் நாளில் எதை உட்புகுத்த உன்னால் முடியும்?
  • இன்றைய வேத வேதவாசிப்பு பகுதி அல்லது தியானப்பகுதியின் மூலமாக தேவன் பேசும் வெளிப்பாட்டை எழுதிவை.
நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Making Time To Rest

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.