இளைப்பாற நேரம் ஒதுக்குவதுமாதிரி
![Making Time To Rest](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16169%2F1280x720.jpg&w=3840&q=75)
உங்கள் மனதை, எழுதும் பழக்கத்தை கொண்டு புதுப்பித்தல்.
நீங்கள் எதை குறித்து நினைக்கிறீர்களோ அதுவே வளரும். நீங்கள் எந்த சூழ்நிலையினூடாய் கடந்து செல்கிறீர்களோ அதை குறித்து கவனம் செலுத்தாதீர்கள். என்ன செய்ய போகிறீர்களோ அதை குறித்து கவனம் செலுத்துங்கள் - டாக்டர் காரொளின் லீஃப்
இரண்டாம் நாள் தியானத்தில் நம்மடைய கிரியைகள் தேவனுடைய சத்தியத்திற்கு நேராக இருக் தேவனுடைய வார்த்தையை தியானித்து இளைப்பாறுவதை குறித்து கற்றுக்கொண்டோம். வேதம் நம் ஆவியை ஊடுருவி செல்ல அனுமதிக்க அநேக வழிகள் உண்டு. அவருடைய சத்தியம் உண்மையில் நம்முடைய மனத்தின்மீது ஊற்றப்படும், நாம் காரியங்களை புதிய வகையில் காண துவங்குவோம். நாம் தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்பொழுது நம்முடைய மனது புதிதாகி, நாம் சாத்தியம் என்று எண்ணாத இளைப்பாறுதலை கண்டுகொள்ளுவோம்.
தேவனுடைய வார்த்தையில் செலவிடும் நேரத்தில் அதிக நன்மையை பெற்றுக்கொள்ள, நாம் எழுதி வைக்கும் பழக்கத்தை நம்முடைய அனுதின நடக்கையில் கொண்டிருக்கலாம். எழுதி வைப்பது என்றால் அது ஆழமானதாக, அதிக விவரிப்புடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அது நாம் வேதத்தை வாசிக்கும் போது கிடைத்த சத்தியத்தை சிறிய வரிகளில் எழுதி வைப்பதாகவும் இருக்கலாம். எழுதி வைக்க அநேக வழிகள் உண்டு. நம்முடைய எண்ணங்கள், ஜெபங்கள் - இவைகளை கூட எழுதி வைக்கலாம்; சில மனிதர்கள் எழுதி வைக்கும்போது கலைப்பன்போடுகூட அதை செய்வார்கள். இப்படித்தான் செய்யவேண்டும் என்று எதுவும் எழுதுவதைகுறித்து ஒன்றும் இல்லை. நீங்கள் எழுத துவங்குவதற்கு, ஒரு எளிமையான வழி இங்கு உண்டு:
- ஒன்று வசனத்தை (அல்லது பல) தெரிந்துகொண்டு அதை வாசி.
- அதை மறுபடியும் வாசி.
- அதை எழுதிவை.
- தேவனிடம் அதற்கு அர்த்தத்தை கேட்டு அதை எழுதிவை.
ஒரு வேளை ரோமர் 8:28 - ஐ குறித்து எழுதி வைக்க தீர்மானித்தால், அது சொல்கிறது, “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” அதை இரண்டு மூன்று முறை வாசித்த பின்பு அதை நாம் எழுதிவைக்கிறோம். ஒரு வேளை அதை அநேக வேதாகம மொழிபெயர்ப்புகளில் எழுதிவைக்கவும் நாம் தீர்மானிக்கலாம். பிறகு தேவனிடம் அதற்கான அர்த்தத்தை கேட்டு நாம் எழுதுவதை முடித்துக்கொள்ளலாம்.
நாம் மேலே குறிப்பிடப்பட்ட வண்ணமாக வேதத்தை ஊடுருவி வாசிக்கும்பொழுது, அந்த நாள் முழுவதும் அதை நாம் உட்கொள்ளலாம். எழுதி வைப்பதன் மூலமாக நாம் திரும்பி பார்த்து நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியையும், கடந்தகாலத்தில் தேவன் நம்மோடு பேசிய புதிதான வழிகளையும் பார்க்கமுடியும்.
நாம் காரியங்களை தெளிவாக பார்த்து, தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்வில் எப்படி பொருந்துகிறது என்றும் நம்மை உள்ளிருந்து எப்படி திரும்பி சரியாக்குகிறது என்றும் நாம் காண்போம். நம்முடைய மனது புதிதாகும்போது, உலக சிற்றின்பங்களால் பெறக்கூடாத இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்வோம்.
சிந்திக்க
- நீ எழுதிவைக்கும் பழக்கத்தை தேவனோடு செலவிடும் நேரத்தின் ஒரு பங்காய் மாற்றியிருக்கிறாயா?
- ஒரு வசனத்தை தெரிந்தெடுத்து மேலேக்காடடப்பட்ட முறையில் எழுதிவை.
- இன்றைய வேத வேதவாசிப்பு பகுதி அல்லது தியானப்பகுதியின் மூலமாக தேவன் பேசும் வெளிப்பாட்டை எழுதிவை.
இந்த திட்டத்தைப் பற்றி
![Making Time To Rest](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16169%2F1280x720.jpg&w=3840&q=75)
பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.
More