இளைப்பாற நேரம் ஒதுக்குவதுமாதிரி

Making Time To Rest

5 ல் 1 நாள்

இளைப்பாறுவது என்றால்?

நம்முடைய அட்டவணைகள ஒவ்வொரு மாதமும் நிரம்பிக்கொண்டே இருக்கின்றன. நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை கழிக்க முட்பட்டால் நமக்கு ஒரு மாதத்திற்குமேல்தான் ஓய்வாக இருக்க நேரமே நமக்கு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றோம். நம்முடைய பிள்ளைகளின் காரியங்கள், சபையின் வேலைகள், நம் வேலை செய்யும் இடத்தின் திட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் கோடை விடுமுறை காரியங்கள் இருக்கின்றன. நமக்கு புத்துணர்ச்சி கொடுத்து, நமக்கு இளைப்பாறுதல் கொடுக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் இடமில்லாதபடி நம்முடைய முழு ஜீவியத்தையும் நாம் திட்டப்படுத்தியுள்ளோம்.

அநேக வேளைகளில் இளைப்பாறுதல் என்றால் நாம் சோம்பேறியாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறோம். அது வீட்டில் இருந்தபடி எதுவும் செய்யாமல் ஓய்வு எடுப்பது போல். நம்முடைய இளைப்பாறுதலின்போது அதற்கு சிறு இடம் இருந்தாலும், அதுவே முழு அர்த்தமுமாகாது.

இளைப்பாறுதல் என்றால் இழந்ததை மீட்டெடுத்தல்.
நாம் சோர்ந்துப்போய், சக்தியில்லாமல் இருந்து, பெருமூச்சு எடுக்க வேண்டிய நேரங்களை அறியும் நிலைதான் இளைப்பாறுதல். அது நம்முடைய அளவுகளை அறிந்து, நம்முடைய அனுதின தேவைகளை கையாளும் முறைமையாக இருக்கிறது. நம்முடைய சரீரம் உண்மையாக இழந்ததை மீட்க, நாம் போதுமான இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளவேண்டும். அது இரவிலே போதுமான தூக்கம் பெற்றுக் இருக்கிறது. நாம் தொடர்ச்சியாக சோர்வாக உணர்ந்தால், நாம் இரவில் எவ்வளவு நேரம் தூங்குகின்றோம் என்று மாத்திரம் பார்க்காமல், எந்த நேரத்தில் தூங்குகின்றோம் என்றும் பார்க்க வேண்டும்.

இளைப்பாறுதல் என்பது புத்துணர்ச்சி ஆகும்.
அது நம்மை எது புத்துணர்ச்சிப் பெற செய்கிறது அல்லது எது தடைசெய்கிறது என்பதை அறிவது. நம்முடைய ஆவிக்கு புத்துணர்ச்சியின் நேரங்களை தர ஒருவகை அமைதியையும், செயல்பாடுகளையும் தெரிந்துகொள்வதாகும். நம்மை நிரப்பக்கூடிய காரியங்களை செய்யவேண்டிய இடத்தில், நம்மை வெறுமையாக்கும் காரியங்களையே தொடர்ந்து செய்தால், புத்துணர்ச்சி வரவே வராது. நம்முடைய இளைப்பாறுதலின் வேளைகளில் அதிகமாக புதிப்பிப்பை சேமிக்கவேண்டுமே தவிர இழக்கக்கூடாது.

இளைப்பாறுதல் என்பது புதிப்பித்தலாகும்.
அது நம்முடைய வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஒரு ஆழமான புதுப்பித்தலை பெற்றுக்கொள்வதாகும். அது நாம் ஆவிக்குரிய ரீதியாய் புதிதாக மாற தேவனோடு நேரத்தை செலவிடுவதாகும். நாம் மனதளவில் புதிதாக உணர சில காரியங்களை செய்ய விரும்பினாலும், முடிவிலே நாம் ஒவொரு நாளும் தேவனோடு நேரத்தை செலவழித்து நம்முடைய ஆவியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

வரும் நான்கு நாட்களில், நாம் நம்முடைய சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவியில் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள சில வழிகளை அறிந்துக் கொள்வோம். சில பழக்கங்களை நம்முடைய வழக்கங்களாக மாற்றிக்கொள்ள கற்றுக்கொள்வோம். அவ்வாறு செய்வதினால் நம்முடைய வாழ்வில் மனரீதியான, உணர்ச்சிரீதியான, ஆவிக்குரியரீதியான மற்றும் சரீரரீதியான குறைவுகளை சரிசெய்ய துவங்குவோம்.

சிந்திக்க

  • நீங்கள் இளைப்பாற நினைக்கும்போது, அது கூடாதகாரியமாக தோன்றுகிறதா?
  • உன்னுடைய வாழ்க்கையின் எந்த பகுதிகளில் அதிகமான இளைப்பாறுதல் உங்களுக்கு தேவையாக இருக்கிறது? சரீரமா, மனதா, அல்லது ஆவியா?
  • இன்றைய வேத வாசிப்பு பகுதியின் மூலமாக அல்லது தியானத்தின் மூலமாக தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும் காரியத்தை எழுது.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Making Time To Rest

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.