இளைப்பாற நேரம் ஒதுக்குவதுமாதிரி

Making Time To Rest

5 ல் 2 நாள்

தேவனுடைய வார்த்தையை தியானி.

வேதத்தை நீ அதிகமாய் வாசிக்கும்போது; அதில் நீ அதிகமாய் தியானம் செய்யும்பொழுது அதே அளவு அதிகமாய் நீ ஆச்சரியமடைவாய். — சார்லஸ் ஸ்பர்ஜன்

அநேகர் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களுக்கு தியானம் என்றால் என்ன என்று புரிவதே இல்லை. நாம் ஒன்றில் தியானம் செய்யும்பொழுது நாம் நம்முடைய எண்ணங்களை கவனமாக அதன்மேல் வைக்கிறோம். தேவனுடைய வார்த்தையை தியானிப்பதை புரிந்துகொள்ள, பாஸ்டர் ரிக் வாறன் சொன்னதை நாம் வாசிப்போம். அவர் சொல்கிறார், “ஆச்சரியவிதமாக உனக்கு கவலைப்பட தெரியுமென்றால், உனக்கு தேவனுடைய வார்த்தையை தியானிக்க ஏற்கனவே தெரியும். கவலை என்பது ஒரு பிற்போக்கான எண்ணத்தை எடுத்து அதை திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதுதான். ஒரு வேத வாக்கியத்தை எடுத்து திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதுதான் தியானம்.”

வேதாகமம் இருபது முறைக்கும் மேலாக தியானம் என்று சொல்லி, நம்மை தேவனுடைய வார்த்தையை தியானிக்க அழைக்கிறது. அது நமக்கு மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் இளைப்பாறுதல் தந்து நமக்கு ஆவிக்குரிய பெலனையும் கொடுப்பதினால், தியானத்தை நம்முடைய தேவனோடு செலவிடும் நேரத்தில் உட்புகுத்துவது நமக்கு நலமாய் இருக்கும்.

நாம் ஒவொருநாளும் வேதத்தை வாசிக்க நேரம் செலவிடும்பொழுது, வேத பகுதிகளுக்குள்ளாக ஆழமாக சென்று பார்த்து தேவனோடு ஒரு சம்பாஷணையை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு வசனத்தை தியானிப்பது எப்படி என்று புரிந்துகொள்ள, எபேசியர் 4:31-32-ஐ பார்ப்போம், “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”

அதை திரும்ப வாசித்து தேவனிடம் கேட்போம்:

நான் கசப்பைக்கொண்டிருக்கின்றேனா?
நான் ஒரு கோபமான ஆளா?
என்னுடைய வார்த்தைகள் மூர்க்கமானவைகளா?
என்னுடைய இருதயம் தயாவானதா?
நான் மற்றவர்களை மன்னிக்கிற குணம்கொண்டவனா?

அப்போது நாம் வல்லமையான, ஆனால் மென்மையான தேவனுடைய வார்த்தைக்காக காத்திருப்போம். அது கேட்ககூடாததாக இருக்கும் ஆனால் அவர் நம்மோடு என்ன சொல்ல விரும்புகிறார் என்று நாம் அறிவோம். நம்முடைய கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம் மற்றும் மன்னிக்கக்கூடாத தன்மைகள் நம்முடைய எண்ணங்களை பிடித்துவிடாதபடி நாம் நாள்முழுவதும் இந்த வேத தியானங்களை நம்மோடு வர அனுமதிப்போம்.

இது தான் தேவனுடைய வார்த்தையை தியானிப்பது.

நாம் தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்போது, வேதத்தில் இருக்கும் உண்மைகள் நம்முடைய ஆத்துமாக்கள் ஆழத்தில் செல்கின்றது. நாம் நம்முடைய மனதின் சக்தியை தேவனுடைய வார்த்தையை நினைத்து செலவழித்து, உலகத்தின் கவலைகளில் நம்முடைய மனதை மூழ்காமல் காத்துக்கொள்வதினால் தியானம் நம்மை ஒரு புதிய இளைப்பாறுதலின் அளவிற்கு கொண்டுசெல்லும். அதுமாத்திரமல்ல, தேவனிடமிருந்து இந்த வாழ்க்கையை மாற்றும் வார்த்தைகளை பெற்று நம்முடைய ஜீவியத்தில் பயன்பாட்டில் கொண்டுவரலாம்.எந்தவகையான முயற்சியை நாம் எடுக்கும்பொழுதும், தேவன் நாம் என்னவாக மாறவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படியே நாம் நிச்சயம் மாறுவோம்.

சிந்திக்க

  • இன்றைய வாசிப்பிற்கான வேத பகுதியோ அல்லது வேறொரு வேத பகுதியையோ தெரிந்தெடுத்து தியானம் செய்க. அதை வாசிக்கும்போது, தேவனிடம் எந்த இடத்தில நீ அவருக்கு கீழ்ப்படிக்கின்றாய் அல்லது எந்த இடத்தில் உன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவரிடம் கேள். இந்த புதிய கண்டுபிடிப்பை இந்த நாள் முழுவதும் உன்னுடைய எண்ணங்களில் கொண்டிரு.
  • இன்றைய வேத வாசிப்பு பகுதியின் மூலமாக அல்லது தியானத்தின் மூலமாக தேவன் உனக்கு வெளிப்படுத்தும் காரியத்தை எழுது.
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Making Time To Rest

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.