இளைப்பாற நேரம் ஒதுக்குவதுமாதிரி

Making Time To Rest

5 ல் 4 நாள்

கவனக்குறைவுகளிலிருந்து உன்னை காத்துக்கொள்.

உன்னை சுற்றி இருக்கக்கூடிய உலகத்திலிருந்து உன்னைப் பிரித்தெடுக்காவிட்டால், உன்னை சுற்றி இருக்கும் உலகத்தினால் நீ கீழாக இழுக்கப்படுவாய். - எர்வின் மக்மனஸ்

இளைப்பாறுதலின் ஒரு அர்த்தம் என்னவென்றால் கவலை மற்றும் இடையூறுகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வதாகும். நம் வாழ்க்கையின் இந்த நாட்களில், நம்மை கவலையில் அல்லது நம்முடைய இளைப்பாறுதலை இடையூறு செய்ய எளிதாக காரணங்களை நாம் கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில் ஒருவேளை அது சந்தோஷத்தை கொடுப்பதுபோலவும், நம்மை புதிதாக்குவதுபோலவும் தோன்றலாம், ஆனால் முடிவில் நம்மை உண்மையான இளைப்பாறுதலிலிருந்து குறைவுப்பட அவைகள் செய்யும்.

அதிகமாக இணைக்கப்பட்டுள்ள நம்முடைய உலகத்திலிருந்து நம்மை துண்டித்துக் கொள்ள எண்ணிலடங்கா மக்கள் வித்தியாசமான வழிகளைக்குறித்து பேசுகிறார்கள். நம்முடைய கவனத்தை சிதறடித்துக்கொள்ளாமல் இருக்க மூன்று வழிமுறைகள் என்று சொல்லி அநேக புத்தகங்கள், எழுத்துக்கள், செய்திகள் போன்றவை இருக்கின்றன. ஆனால் எல்லோரும் ஒரே காரியங்களினால் கவனச்சிதறல் அடைவதில்லை. ஒருவரை கவனசிதறல் அடையச்செய்வது மற்றொருவருக்கு ஒரு போராட்டமாக இருப்பதில்லை.

நம்முடைய வாழ்க்கையை கவனச் சிதறல்களிலிருந்து காத்துக்கொள்ள, நாம் இரண்டு காரியங்களை கையாள வேண்டும். முதலாவது, நம்மை கவனசிதறலடைய செய்யவது எது என்று அறிந்துக்கொள்ளவேண்டும். அவசரமாக தோன்றவோ அல்லது வேடிக்கையாக இருப்பதுபோலவோ தோன்றி நம்மை முக்கியமான காரியத்திலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய காரியங்கள். இரண்டாவதாக, நம் ஜீவியத்தின் முக்கியமான நபர்கள் எதோ கவனசிதறலைகளைப்போல தோன்றாதபடி நாம் நம் நிகழ்ச்சி நிரலை மாற்றிக்கொள்ளவேண்டும்.

நம்முடைய சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் திருடிப்போடக்கூடிய எதுவாக இருந்தாலும், அதற்கு நாம் சில கெடுக்களை விதிக்கவேண்டும். நாம் அந்த வாக்கியத்தை வாசித்தவுடன், அது எந்த காரியம் என்பதை சரியாக உணர்ந்திருப்போம். நம்முடைய கவனசிதறல்கள் நம்மை இளைப்பாறுதலிலிருந்தும், நம்முடைய முக்கியமான நபர்களிடமிருந்தும் பிரிக்க விடாமால் ஒருவேளை நாம்…

  • ...நம்முடைய பிள்ளைகள் தூங்கும்வரை நம்முடைய வேலைக்காக கணினியை உபயோகிக்காமல் இருக்கலாம்.
  • ...உலகத்தின் கவலைகளினால் கவனசிதறல் அடையாமல் இருந்து, நன்மைகளை மாத்திரம் நாம் கவனிக்க தெரிந்தெடுக்கலாம்.
  • ...நம்முடைய குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட ரிங்க்டோனை அமைத்து, மற்ற அழைப்புகளை மறுக்கலாம்.
  • ...வாரக்கடைசிவரை தொலைகாட்சி பார்க்காமலிருக்க தெரிந்தெடுக்கலாம்.
  • ...வரும்காலத்திற்கான திட்டங்களை ஒதுக்கிவைப்பதன் மூலமாக நிகழ்காலத்தை நாம் வாழலாம்.
  • ...சில இணையதளங்களுக்கும், செயலிகளும், வீடியோ கேம்களுக்கும் அதிகபட்ச கால அளவுகளை வைக்கலாம்.

நாம் தொடர்ச்சியாக கவலையடையவோ, அமைதிகுலைச்சலடையவோ நேர்ந்தால், நாம் அந்தவிதமாக உணரச்செய்யும் காரியங்களிலிருந்து நேரத்தை குறைத்துக்கொள்ளவோ, அல்லது முற்றிலும் தவிர்க்கவோ செய்யவேண்டும். அது சுலபமாக இருக்காது. நன்மையான எது ஒன்றும் கடினமானதாகவும் தியாகம் செய்யவேண்டியதாயும் இருக்கும். தேவன் நமக்காக கொண்டிருக்கும் சிறந்த இளைப்பாறுதலிலிருந்து நம்மை பிரிக்க முயலும் எந்த கவனச் சிதறலையும் இன்னும் ஒருநாள்கூட அனுமதிக்கவேண்டாம்.

சிந்திக்க

  • உண்மையாக இளைப்பாறுதலிலிருந்து எந்த காரியம் உன்னை பெரிதாய் கவனச்சிதறல் அடையச்செய்கிறது?
  • இந்த கவனசிதறல்களை உன் வாழ்க்கையில் தடுக்க/குறைக்க என்ன படிகளை நீ எடுக்கவேண்டும்?
  • இன்றைய வேத வேதவாசிப்பு பகுதி அல்லது தியானப்பகுதியின் மூலமாக தேவன் பேசும் வெளிப்பாட்டை எழுதிவை.
நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Making Time To Rest

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.