நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 3 நாள்

ஆபிரகாம்: விசுவாசத்தின் தந்தை

Danny Saavedra

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”—கலாத்தியர் 3:29

நாம் நேற்று பார்த்ததுப் போல, தேவன் ஒரு பூரணமான பிரபஞ்சத்தைப் படைத்தார். ஆறாம் நாளில், தன்னுடைய உருவத்திலும், சாயலிலும் தனக்கென்று பிள்ளைகளைப் படைத்தார். அவர்கள் படைப்பின் மகுடமாக திகழ்ந்தனர். பின்னர், ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து பாவத்தையும் மரணத்தையும் உலகத்திற்குள் கொண்டு வந்தப் போது, எல்லாம் தவறாக சென்றது. ஆனால் இது கதையின் முடிவு அல்ல. தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பாருங்கள், மரணம் வந்தப் போது, நம் அதிசயமான, இரக்கமுள்ள தேவன் வாழ்க்கையின் வாக்கையும் கொடுத்தார்.  

இவை அனைத்தும் எப்படி வீழும் என்று ஆதியாகமம் 3இல் தேவன் விளக்கினார்: உலகத்திற்குள் புதிய ஒரு ஜீவனைக் கொண்டு வர பெண்கள் வலியையும் வேதனையையும் அனுபவிக்க வேண்டும் . . . ஆனால் புதிய ஜீவன் வரும். அந்த புதிய ஜீவன் பொல்லாத சர்ப்பத்தின் தலையை நசுக்கப்போகும் வித்தை ஒரு நாள் உருவாக்கும் (ஆதியாகமம் 3:15). இந்த வெளிப்பாட்டைப் பற்றி ஜான் கில் இப்படியாக எழுதியிருக்கிறார், “வரவிருக்கும் பெண்ணின் வித்தாகிய மேசியா, பிசாசாகிய பழைய சர்ப்பத்தை அழிக்கவே அதன் தலையை காயப்படுத்தினார். . . அவன் திட்டங்களை உடைத்து, ஒழிக்க, அவன் செயல்களையெல்லாம் நாசமாக்க, அவன் முழு ராஜ்யத்தையும் நசுக்க, அவனது அதிகாரத்தையும் ஆட்சி உரிமையையும், குறிப்பாக மரணத்தின் மேல் வல்லமையையும் அவனிடம் இருந்து பறிக்க, மனிதர்களின் உடல் மற்றும் ஆத்துமாவின் மேல் உள்ள கொடுமையை முறிக்கவுமே அவர் அதை செய்தார். இவை அனைத்தையுமே கிறிஸ்து அவதரித்தப் போது அவர் செய்தார்.”

வாக்களிக்கப்பட்ட வித்தைக் கொண்டுவர தேவன் தேர்ந்தெடுத்த விசுவாசத்தின் மனிதனைப் பற்றி இன்று ஆராய்வோம். அவரது பெயர் ஆபிரகாம், விசுவாசத்தின் தந்தை என்று அன்பாக அழைக்கப்படுபவர். "தேவன் ஏன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார்?" "அவரிடம் சிறப்பாக இருந்தது தான் என்ன?" என்று இப்பொழுது நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்.

சேமின் வம்சத்தானாகிய ஆபிரகாமுக்கு நாம் ஆதியாகமம் 12 இல் முதலாவதாக அறிமுகப்படுத்தப் படுகிறோம். தன் வீட்டையும் எல்லா சுகங்களையும் விட்டு விட்டு, பொருட்களையெல்லாம் கட்டிக்கொண்டு, தன் குடும்பத்தை பிடுங்கியெடுத்து ஒரு தூர தேசத்துக்கு செல்லும்படி தேவன் இங்கு கட்டளைக் கொடுக்கிறார். சுவாரசியமாக, எந்த தேசத்துக்கு போக வேண்டும் என்று கூட ஆபிரகாமுக்கு சொல்லப்படவில்லை. "நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ" என்று தேவன் அவரிடம் சொன்னார். (ஆதியாகமம் 12:1). ஆனால் இந்த மகத்தான அழைப்புடன் சேர்ந்து ஒரு வாக்குறுதியும் வந்தது: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி. . . பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.” (ஆதியாகமம் 12:2–3). இந்த தருணத்தில் தான் தேவன் அவரைத் தேர்ந்தெடுத்ததின் காரணத்தை காண்கிறோம். 

ஆபிரகாம் சிறந்தவனாக, திறமைசாலியாக, உத்தமனாக இருந்ததால் அல்ல, ஆபிரகாம் கீழ்ப்படிவான் என்று அவர் அறிந்ததால் தேவன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார். ஜான் மெக்ஆர்தர் இப்படியாக எழுதினார், “தேவன் என்ன சொல்லுகிறார் என்று அவர் புரிந்துக் கொண்டவுடனே, தன் உடைமைகளைக் கட்டத் தொடங்கினார். அது உடனடியான கீழ்ப்படிதலாக இருந்தது. அந்த பயணத்திற்கான இறுதி ஏற்பாடுகளை செய்ய பல நாட்கள், அல்லது பல வாரங்கள் ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம், ஆனால் தன் மனதளவில் அவர் ஏற்கனவே போகும் வழியில் தான் இருந்தார். அப்போதிருந்து, அவர் செய்த எல்லாமே தேவனின் அழைப்பை கீழ்ப்படிவதை சுற்றி தான் இருந்தது.” 

யாக்கோபு 2:23 சொல்லுகிறது, “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்." 75 வயதானாப்போது, ஆபிரகாம் தேவனுடைய அழைப்புக்கு இணங்கி, தன் குடும்பத்துடன் முற்பட்டார். அவரை பெரிய தேசமாக்குவது மற்றும் ஆபிரகாமின் சந்ததி மூலம் முழு உலகத்தையும் ஆசீர்வதிப்பது பற்றிய தேவனின் வாக்குறிதி பற்றிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆபிரகாமுக்கும் தன் மனைவி சாராளுக்கும் பிள்ளை இல்லை ஒரு பிள்ளையில்லா வயதான ஆண் மற்றும் அவரது மனைவி மூலம் எப்படி தேவன் ஒரு பெரிய தேசத்தை உருவாக்க முடியும்? ஆபிரகாமும் அதையே தான் யோசித்தார்! எனவே, தேவன் தன் திட்டத்தை வெளிப்படுத்தி, அவர் ஒரு பிள்ளையை பெறுவார் என்றும், பின்னர் அவரது சந்ததி நட்சத்திரங்களை விட எண்ணிக்கையில் அதிகமாவார்கள் என்றும் அவரிடம் சொன்னார். என்ன நடந்தது தெரியுமா? And guess what? முரண்பாடுகள் மத்தியிலும், சாத்தியமானவை மற்றும் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஆபிரகாம் தேவனை நம்பினார்!  

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் நமது பங்கை ஆபிரகாமின் கதை நமக்குப் போதிக்கிறது. அது வேலை அல்ல, விசுவாசமும் அராதனையுமே. ஆதியாகமம் 12 இல், ஆபிரகாம் விசுவாசத்தால் வாக்கைப் பெற்றுக்கொண்டான் என்றும், அதன் பின், உடனே, ஆராதிக்கும் இடமாகிய ஒரு பலிப்பீடத்தைக் கட்டினார் என்றும் பார்க்கிறோம். ஏன்? ஏனென்றால், தேவனுக்கு முன் அவருக்கு இருந்த சரியான நிலையோ, தேவன் அவருக்கு கொடுத்த வாக்குகளோ ஆபிரகாம் யார் என்பதையோ அவர் என்ன செய்தார் என்பதையோ சார்ந்தது அல்ல, தேவன் உண்மையுள்ளவராக இருப்பதையே சார்ந்தது என்று அவர் தெளிவாக புரிந்துக் கொண்டார். 

இந்த நாளை நீங்கள் கடந்து செல்கையில், தேவனை அவர் இருக்கும் விதமாகவும், அவர் கொடுக்கும் பெலனுக்காகவும் அவரை ஆராதிப்பதில் வல்லமை இருக்கிறது என்று நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாமிடம் நாம் பார்த்ததுப் போல, நாம் என்ன செய்ய முடியும் என்பது பற்றியதல்ல, அவர் என்ன செய்திருக்கிறார் என்பது தான். எனவே, அவரது வாக்குகளை நம்பி அவரை ஆராதியுங்கள், ஏனென்றால், “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. . . . நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (Galatians 3:26–27, 29).

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்