வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
நீதி மீட்டெடுக்கப்பட்டது
சகரியா 9ல் காணப்படும் ஒரு தீர்க்கதரிசனத்தில், வரப்போகும் ராஜன் இரட்சிப்போடு அவருடைய நீதியையும் கொண்டுவருவார் என்று தேவன் வாக்களிக்கிறார். அதாவது கிறிஸ்துமஸில், தேவன் நமக்காக "அவருடைய நீதியை" இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து எனும் மனிதராக கொண்டுவந்திருக்கிறார். சரியாக இதுவே உலகத்தின் தேவையாக இருந்தது (இன்றும் தேவைப்படுகிறது). ரோமர் 3:10ல், அப்போஸ்தலராகிய பவுல் மனிதத்தின் கவலைக்கிடமான நிலையை இவ்வாரு விவரிக்கிறார்:“அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை." நாம் அனைவருமே இதே நிலையில், பாவத்தின் சாயலோடு பிறந்து நம்மை நீதிக்குட்படுத்த முடியாமல் இருக்கிறோம். ஆனால் ரோமர் 1:17ல், பவுல் கூறுகிறார், ”விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று. கிறிஸ்தவம் என்பது நீதியை பெற்றுக் கொள்வதைப்பற்றியது அல்ல, அது இயேசுவின் நீதியை "விசுவாசத்தினால்" பெற்றுக்கொள்வதை சார்ந்தது. அது நாம் யார் என்பதல்ல, அவர் யார் என்பதைப்பற்றியது.
இயேசுவானவர் பிறந்த பின், அவர் முழு வாழ்விலும் நீதியுடன் வாழ்ந்து வந்தார். அவர் மிகச்சரியானவராக, தேவனுக்கு நெருங்கியிருந்து அவருடைய பிதாவின் சித்தத்தை தயக்கமின்றி பின்பற்றி வந்தார். சிலுவையில், அவர் ஒரு பரிமாற்றம் செய்தார். 2 கொரிந்தியர் 5:21 சொல்கிறது, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” என்று. இயேசு நமக்காக மரித்தபோது, அவர் நம்முடைய எல்லா அநீதிகளையும் எடுத்து அவற்றை மரணத்திற்குள்ளாக்கி, பதிலாக அவருடைய நீதியையும் தேவனுடனான நெருக்கத்தையும் நமக்கு அருளினார்.
நினைவிலிருக்கட்டும், நமக்கான தேவனின் அன்பு நாம் என்ன செய்கிறோம் அல்லது செய்யவில்லை என்பதை சார்ந்தது அல்ல. அது இயேசு ஏற்கனவே என்ன செய்துள்ளார் என்பதை மட்டுமே சார்ந்தது. ரோமர் 5:8 சொல்கிறது, ”நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்று. நீதியுள்ளவர் கிறிஸ்துமஸ் நன்னாளில் பிறந்தது நம்மிடம் தேவனின் அன்பை மிகவும் வல்லமையுள்ள வழியில், அவருடைய பார்வையில் நம்மை நீதிமான்களாக்கி எடுத்துரைக்கவே.
ஜெபம்: பராமத்தந்தையே, நீர் வியக்கத்தக்க கருணையானவர்! உம்முடைய நீதியை இன்று நான் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மீதான விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறேன். இயேசுவானவர் எனக்காக செய்ததால் மாத்திரமே நீர் எண்ணில் மகிழ்ச்சியாக இருக்கிறீர் என்பதை நான் உணருகிறேன். நன்றி, இயேசுவே, என்னையும் சேர்த்துக்கொண்டதற்காக. உம்முடைய நீதியில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னும் நம்பிக்கையில் என்னை திடப்படுத்தும். நானாக அதை சம்பாதித்துக் கொள்ளவில்லை என்பதை நான் ஞாபகம்கொண்டு அதன்மூலமாக நான் உமக்கு நன்றியுடனும் தாழ்மையுடனும் ஊழியம் செய்ய உதவியருளும்.
இன்றைய படத்தை தரவிறக்க here.
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More