வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
அற்பமான ஆரம்பம்
பெத்லகேம் ஒரு சிறிய நகரமாக இருந்தது, இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சிறியது. மீகா 5: 2 இன் செய்தி பொழிப்புரையில், பெத்லகேம் “ஆயிரங்களுக்குள்ளே சிறியது ” என்று குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற முக்கியமில்லாத இடத்தில் தேவன் ஏன் பூமிக்கு வரத் தேர்ந்தெடுப்பார்? இது ராஜாதி ராஜாவுக்கு தகுதியான பிறப்பிடமாகத் தோன்றுகிறதா?
விஷயம் என்னவென்றால், உலகின் மகத்துவத்தின் வரையறையில் தேவன் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை. செல்வம், புகழ், சக்தி ஆகிய இவை எதுவும் தேவனுக்கு குறிப்பிடத்தக்கவை அல்ல. பவுல் கொரிந்து சபைக்கு இவ்வாறாக சொல்லுகிறார், “ஞானிகளை வெட்கப்படுத்த தேவன் உலகின் பைதிதியமானவைகளைத் தெரிந்துக்கொண்டார்; பலமானவர்களை வெட்கப்படுத்த தேவன் உலகில் பலவீனமானவைகளை தெரிந்துக்கொண்டார். ”ஒருவரின் வாழ்க்கையில் அவர் என்ன செய்ய முடியும் என்பது அவர்களின் பூமிக்குரிய நிலையால் வரையறுக்கப்படவில்லை. பெத்லகேம் “குப்பைத் தொட்டியாக” இருந்தால், தம்முடைய குமாரனின் வாழ்க்கையை அங்கே ஸ்தாபிப்பதற்கு தேவன் இன்னும் எவ்வளவு மகிமையைப் பெறுவார்? இயேசுவின் பயணம் எங்கிருந்து தொடங்கியது, அவர் ராஜ்யத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதை அவர் உலகத்தின் அளவீடுகளால் தீர்மானிக்கவில்லை. இது நமக்கும் பொருந்தும் அல்லவா?
ஜெபம்: அப்பா பிதாவே, என் வாழ்க்கையின் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எனது திறனைக் குறைக்க அனுமதிக்காததற்கு நன்றி. என்னைப் போன்ற அபூரணருக்கு தெய்வீக நோக்கத்தை வழங்கியதற்கு நன்றி. பலவீனமான தருணங்களில் என்னைக் கொண்டு செல்லும் உங்கள் அற்புதமான சக்திக்காக நான் உம்மை புகழ்கிறேன். நான் எங்கு தொடங்கினாலும், நான் எங்கு செல்ல நீர் விரும்புகிறீரோ அங்கு என்னை அழைத்துச் செல்லுவீர் என்பது எனக்குத் தெரியும். இயேசுவே, நம்பமுடியாத விஷயங்கள் தாழ்மையான இடங்களில் தொடங்குகின்றன என்பதை எனக்குக் காட்டியதற்கு நன்றி.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More