வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
எல்லா ராஜாக்களுக்கும் மேல் ராஜா
தாவீது ராஜா தன் மகன் சாலமோன் இஸ்ரவேல் தேசத்தின் மேல் பெரிய ராஜாவாக வேண்டும் என்ற அவரது ஜெபத்துடன் சங்கீதம் 72 துவங்குகிறது. அந்த சங்கீதம் தொடரும் போது, பூரணமான ராஜாவைப் பற்றி தாவீது கனவு காண்கிறார். அதில், இயேசுவின் ராஜ்யத்தில் நிறைவேறும் காரியங்களையும் தீர்க்கதரிசனமாக சொல்கிறார். இயேசுவின் பிறப்பிற்கு 950 க்கும் மேற்பட்ட ஆண்டுகுக்கு முன், ராஜாதி ராஜாவின் முடிவில்லா ஆளுகையை தாவீது கண்டார். இந்த ராஜா அவரது இரக்கம் மற்றும் தேவையுள்ளோர், துன்புற்றோரை காப்பாற்றுவது ஆகியவற்றால் அறியப்படுவார். அவர் கொடங்கோன்மை மற்றும் வன்முறையை தோற்கடிப்பார். அவரது மக்கள் அவருக்கு விலைமதிப்பற்றவர்கள் என்பது வெளியரங்கமாகும். இந்த காரணங்களுக்காக, அவருக்கு முன் எல்லா ராஜாக்களும் அடிப்பணிவார்கள் என்றும் எல்லா நாடுகளும் அவரை சேவிக்கும் என்றும் தாவீது கூறியிருக்கிறார்.
தேவனின் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் கரிசனையும், கொடங்கோன்மையை எதிர்ப்பதும் அதனை வீழ்துவதுமே பூரணமான ராஜாவுக்குரிய சின்னங்கள் என்று தாவீது அறிந்திருந்தார். அப்படிப்பட்டவருடைய நீதிக்குரிய தீர்ப்பும் தன்னலம் இல்லாமையும் எப்போதுமே தளராது. இரட்சகர் உலகத்திற்கு வந்த பொழுதாக இருப்பதோடுக் கூட, நித்தியக்காலத்துக்கும் மிகப்பெரிய ராஜாவின் மரபின் துவக்கத்தையும் கிறிஸ்துமஸ் குறிக்கிறது. இந்த உலகத்தின் ராஜாக்களும் ராஜியங்களும் கடந்துப்போய் பல காலங்களுக்கு பின்னும் இயேசு தொடர்ந்து ஆளுகை செய்வார். அவருடைய பூரண அன்பின் மறைவுக்குள் நம்மால் வாழ முடியும்.
ஜெபம்: இங்கே பூமியிலும் நித்தியத்திற்கும் என் ராஜாவாக உம்மை மதிக்கிறேன். இந்த உலகத்தின் உடைந்தத்தன்மை வீழும் போது, உம் தலைமைத்துவத்தின் சுத்தத்தை அனுபவிக்க நான் காத்திருக்கிறேன். இந்த உலகத்திற்கு வந்து, உம் சிங்காசனத்திற்கான பயணத்தை எங்கள் மத்தியில் துவங்கியதற்காக நன்றி. எங்கள் மேல் நீர் அதிக கரிசனையாக இருப்பதற்காகவும் எனக்காக எப்போதும் என் ராஜாவாக போராடுவதற்காகவும் நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன். உம் பூரண வழிகளுக்கு என்னை நான் சமர்ப்பிக்கிறேன்.
இன்றைய படத்தை இங்கு பதிவிறக்கம் செய்யுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More