வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் தேவன்
லூக்கா 1:34 இல், மரியாளிடம் அவர் இயேசுவை பெற போவதாக தேவ தூதன் சொன்னபோது, “நான் கன்னியாக இருக்கிறேனே இது எப்படி ஆகும்?” என்று கேட்டார். விஷயங்கள் எவ்வாறு செயல்படப் போகின்றன என்பதைப் பார்க்க முடியாதபோது நாம் அடிக்கடி என்ன செய்கிறோமோ அதையே மரியாளும் செய்தார். சாத்தியமற்றது என்று தோன்றும் ஒன்று எப்படி சாத்தியமாகும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; "பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்".
கிறிஸ்மஸ் போன்ற ஒரு அழகான பருவத்தில் கூட, நம்முடைய சாத்தியமற்ற சூழ்நிலைகளில் தேவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்ப்பது கடினம். இன்று, இந்த இரண்டு அற்புதமான நபர்களும் தேவனுடைய சக்தியை உங்களுக்கு நினைவூட்டட்டும். இயேசு மற்றும் எலிசபெத்தின் மகன் யோவான் ஸ்நானகன் மற்றும் அவர்களின் பிறப்பு வரலாற்றின் போக்கை எவ்வாறு மாற்றியது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களது சாத்தியமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் நீங்கள் கற்பனை செய்வதை விட தேவனால் அதிகம் செய்ய முடியும். உங்கள் நிலைமையை அவருக்குக் கொடுங்கள், அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்று நம்புங்கள். இன்று உற்சாகமடையுங்கள்: தேவால் நம்மை கைவிடார்!
ஜெபம்: அப்பா பிதாவே, நீர் நல்லவர்! உமது பெலத்திற்காக நான் உம்மைப் புகழ்கிறேன் உமக்கு எதிராக எதுவும் நிற்க முடியாது! என் வாழ்க்கைக்கான ஒரு திட்டத்தை வைத்ததற்கு நன்றி, என் சார்பாக உமது மகனை அனுப்பியதற்கும், சாத்தியமற்றதாகத் தோன்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள எனக்கு வலிமை அளித்ததற்கும் நன்றி. உம்முடைய பலத்தை நான் நம்புகிறேன், என்னுடையது அல்ல, இயேசு பிறப்பை சாத்தியப்படுத்திய உம்மால் எதுவும் சாத்தியம்தான் என்று பார்க்க எனக்கு உதவுங்கள்!
இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்யஇங்கே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More