வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 12 நாள்

நம்பிக்கையின் வல்லமை

தேவன் சொல்வதைக் கேட்பது மட்டும் அல்லாமல், அதனை நம்பும் போது ஒரு வல்லமையான காரியம் நிகழ்கிறது. தேவன் சொல்வது உண்மை என்றும், உங்களுக்காக அவர் வைத்திருக்கும் திட்டம் தலைச்சிறந்த முடிவுக்குக் கொண்டு செல்லும் என்றும் நீங்கள் நம்பினால், அந்த நம்பிக்கை சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறது. மரியாள் தேவத்தூதனைக் கண்டு, தேவன் தன் வாழ்க்கைக்காக வைத்திருக்கும் திட்டத்திற்குத் தன்னை ஒப்புவித்தப் பின், தன் உறவினரான எலிசபெத்த்தை சந்தித்தாள். அவரும் பல ஆண்டுகள் மலடியாக இருந்தப்பின் அதிசயமாக கற்பந்தரித்திருந்தார். மரியாளின் அற்புதமான செய்தியை எலிசபெத் கேட்டதும், அவர் பரிசுத்த ஆவியால் நிரம்பி, “கர்த்தர் அவளுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று விசுவாசிக்கும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டவள்!" என்று கூறினாள்.

நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட மேசியாவை பெற்றெடுப்பாள் என்று தேவன் சொன்னதை மரியாள் நம்பினாள். கலக்கத்துடன் இருந்திருக்கக்கூடிய நேரத்தில் தன் சமாதானத்தை தேவன் அவளுக்குக் கொடுத்தார். உலகத்தின் இரட்சகர், ஏன் தன் இரட்சகரும் கூட, பிறப்பது, வழியில் சந்திக்க வேண்டிய எந்த சவாலையும் விட சிறந்தது என்று தைரியமாக இருந்தாள். மரியாள் தேவனின் திட்டத்தை நம்பினாள், அவரது வாக்குத்தத்தங்கள் தன் வாழ்க்கையில் நிறைவேறும் என்று நம்பி முன்சென்றாள்.

கிறிஸ்துமஸ் நெருங்கும் இந்த நாட்களில், மரியாளின் நம்பிக்கையினால் ஏற்பட்ட அற்புதமான முடிவை சற்று சிந்தித்துப் பாருங்கள்: தேவக்குமாரன் பிறந்தார்! தேவன் உங்கள் வாழ்க்கையில் பேசியிருப்பதில் எதை நீங்கள் இன்று விசுவாசிக்க வேண்டும்? அவரது திட்டத்தை நம்பி, அவருக்கு தெரிந்தது சிறந்தது என்று அறிந்து அவரது சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள், வரவிருக்கும் ஆசீர்வாதத்தை எதிர்பாருங்கள்!

ஜெபம்: தந்தையே, இயேசுவின் பிறப்பின் ஆசீர்வாதத்தின் மீது நான் கவனம் செலுத்துகையில், மரியாளைப் போல மாற எனக்கு உதவும். உம் வாக்குத்தத்தங்களை நம்பும் நம்பிக்கையில் வளர எனக்கு உதவும். என் வாழ்க்கைக்கு நீர் வைத்திருக்கும் திட்டம் தலைச்சிறந்த பலனைக் கொடுக்கும் என்று நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நம்பிக்கையற்ற பகுதிகளை இனம் கண்டுக்கொள்ள எனக்கு உதவும், நான் பார்க்க முடியாத விதங்களில் நீர் வேலை செய்கிறீர் என்ற நம்பிக்கையை எனக்குத் தாரும். நான் உம்மை நம்ப இன்று தேர்ந்தெடுக்கிறேன்!

இன்றையப் படத்தை இங்கு பதிவிறக்கம் செய்யுங்கள்.

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்