வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
"சமாதான பிரபு"
ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம், சமாதான பிரபு என்று அழைக்கப்படும் ஒரு குழந்தை பிறக்கும் என்று தேவன் வெளிப்படுத்தினார். எபிரேய மொழியில், (“சார்”) என்ற சொல் ஒரு “இளவரசர்” என்றோ அல்லது தலைவரைக் குறிக்கிறது, மேலும் “அமைதி” (“ஷாலோம்”) என்பதன் அர்த்தம் “முழுமை” என்று பொருள்படும். நம்முடைய பாவத்தால் தேவனிடம் நமக்கு ஏற்பட்ட இடைவெளியைக் குறைத்து, அவரோடு நம்மை ஒன்றுபடுத்த அவர் வந்தார். நம்முடைய கவலைகளைத் தணிக்கவும், நல்ல மனதைக் கொடுக்கவும் இயேசு வந்தார். நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் நாம் அவரிடம் திருப்தியடைந்து ஓய்வெடுக்க வேண்டும்.
இந்த பருவத்தில் நீங்கள் எதை எதிர்கொண்டாலும் சரி - நோய், உடைந்த உறவு, மனச்சோர்வு அல்லது தனிமை எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை ஆறுதல்படுத்த இயேசுவின் அமைதியை அனுமதிக்கவும். வாழ்க்கையில் முழுமையை அனுபவிக்க உங்கள் போராட்டத்தின் முடிவை நீங்கள் பெற வேண்டியதில்லை. இயேசு தம்முடைய அன்பினால் உங்கள் ஆவிக்கு சமாதானத்தை அருளவும், அவர்மீதுள்ள நம்பிக்கையை பூரணப்படுத்தவும் விரும்புகிறார். உங்கள் வாழ்க்கையின் போராட்டத்தை அவரிடம் முழுமையாக நீங்கள் ஒப்புக்கொடுங்கள்.
ஜெபம்: இயேசுவே, எனக்கு சாமாதானத்தைக் கொடுக்க வந்ததற்கு நன்றி. என் வாழ்வில் நான் எதை சந்திக்க நேர்ந்தாலும் உம்மில் ஓய்வெடுக்க முடியும் என்பதை நான் இன்று உணர்கிறேன். பயம் அல்லது பாரமான இதயம் எனது சமாதானத்தை அச்சுறுத்தும் போதெல்லாம், உம்மில் பாதுகாப்பிற்கு ஓட எனக்கு உதவும். உம்மிடத்தில் கிடைக்கும் முழுமைக்கு என் ஆவியை வழிநடத்தும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More