கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 3 நாள்

இயேசுவின் கிறிஸ்மஸ் பட்டியல்

இன்றைய வசனங்களைப் படியுங்கள்.

50 வருடங்களுக்கும் மேலாக இயேசுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதை எங்கள் குடும்பத்தில் ஒரு பாரம்பரியமாகக் கைக்கொண்டு வருகிறோம்.

நான் 3 வயதாக இருந்த போது இது ஆரம்பித்தது. நான் என் தாயாரிடம் கேட்டேன், "கிறிஸ்மஸ் என்றால் என்ன?" என்று. அவர்கள் இயேசுவின் பிறந்தநாள் என்று சொன்னார்கள். 3 வயது உற்சாகத்துடன் நான், "நாம் அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்" என்று கூறினேன். நாங்கள் கேக், குளிர்பானம், பாட்டுகள் மற்றும் மெழுகுவர்த்தியுடன் ஒரு முழுமையான பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினோம்.

நான்கு தலைமுறையாக இன்றுவரை இந்த பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறோம். இப்போது இயேசுவின் பிறந்தநாள் கொண்டாட்டமானது, கிறிஸ்மஸ் கதையை வாசித்து, பின்னர் எங்கள் நன்றியறிதலை தெரிவித்து, இயேசுவுக்கு என்ன கொடுக்கிறோம் என்று பகிர்ந்து கொள்ளும் ஒரு புனிதமான மறக்கமுடியாத நேரமாக ஆகிவிட்டது.

அடிக்கடி கிறிஸ்மஸ் நேரத்தில் இயேசு வெளியேற்றப்படுகிறார். நான் பலரையும் அழைத்து உங்களுக்கு ஒரு விழா கொண்டாடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பல பரிசுகளைக் கொண்டு வருகின்றனர், அவர்கள் தங்களுக்குள்ளும் பரிசுகளை பகிர்ந்து கொள்கின்றனர் - உங்களுக்கு மட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை.

அதுதான் கிறிஸ்மஸ். நாம் இயேசுவைத் தவிர மற்ற அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கிறோம். நாம் உண்மையாக யோசிப்போம் - எல்லாமே உடையவரான கர்த்தருக்கு என்னத்தைக் கொடுப்பது?

உண்மையில், இயேசுவுக்கு எல்லாமே இல்லை. இந்த கிறிஸ்மசுக்கு நீங்கள் கொடுத்தாலொழிய அவரிடம் இல்லாத நான்கு காரியங்கள் உண்டு:

உங்கள் நம்பிக்கையை அவருக்குக் கொடுங்கள். விசுவாசம் என்பது ஒரு தன்னிச்சையான செயல். நீங்கள் கொடுத்தாலொழிய அவரிடம் உங்கள் நம்பிக்கை இருக்க முடியாது. அவர் அதை வற்புறுத்த மாட்டார்.

உங்கள் வாழ்வின் முதலிடத்தை இயேசுவுக்குக் கொடுங்கள். வேறு யாராவது அல்லது ஏதாவது உங்கள் வாழ்வின் முதலிடத்தை வைத்திருந்தால் அது ஒரு விக்கிரகம். இந்த கிறிஸ்மசில் உங்கள் பொருளாதாரத்திலும், விருப்பங்களிலும், உறவுகளிலும், திட்டங்களிலும் - உங்கள் கஷ்டங்களிலும் கூட முதலிடம் கொடுங்கள்.

உங்கள் இருதயத்தை இயேசுவுக்குக் கொடுங்கள். உங்கள் அன்பு, மதிப்பு, மற்றும் கவனிப்பு எல்லாவற்றின் இருப்பிடம் உங்கள் இருதயம் தான். இயேசு கூறுகிறார், "உங்கள் இருதயம் எங்கேயோ அங்கே உங்கள் பொக்கிஷமும் இருக்கும்" என்று. (லூக்கா 12:34) உங்கள் மூலவளங்களை அவரது சேவைக்காக அளிப்பது, இந்த கிறிஸ்மசின் போது உங்கள் இருதயத்தை இயேசுவுக்கு கொடுக்கும் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அவருக்கு உங்கள் பணம் தேவையில்லை - அது குறிப்பிடும் உங்கள் இருதயம் தான் அவருக்குத் தேவை.

மற்றவரை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். வேறெதையும் விட ஒரு குடும்பமே இந்த கிறிஸ்மசுக்கு கர்த்தருக்கு விருப்பம். விரும்பி அவரிடம் அன்புடன் நம்பிக்கை வைக்கும் பிள்ளைகள் அவருக்கு விருப்பம். நாம் கிறிஸ்மஸ் கொண்டாடும் காரணம் இதுவே. யாரையாவது இயேசுவிடம் இந்த கிறிஸ்மசின் போது அழையுங்கள். இயேசு உங்கள் வாழ்க்கையில் செய்தவற்றை யாரிடமாவது கூறுங்கள்.

இயேசுவைக் காணச் சென்ற போது ஞானிகள் இயேசுவுக்கு தங்களிடம் மீதமுள்ளவற்றை கொடுக்கவில்லை என்று வேதம் சொல்லுகிறது. மாறாக, அவர்கள் மூன்று விலையுயர்ந்த அர்த்தமுள்ள பரிசுகளைக் கொடுத்தார்கள்: "அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்." (மத்தேயு 2:11)

அப்படியாக நீங்கள் உங்கள் நம்பிக்கையை அவர் மேல் வைத்து, உங்களது அரிய பொருட்களை அவரது சேவைக்கென அளித்து, பிறரை அவரிடம் அழைத்து வந்தால் நீங்களே இயேசுவுக்கு சாஸ்திரிகள் கொண்டு வந்த பரிசுகளைப் பார்க்கிலும் மேலானவற்றைக் கொடுக்கிறீர்கள்.

ஆக, இந்த கிறிஸ்மஸ் இயேசுவுக்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" கூறுங்கள். உங்களது மேலானவற்றை அவருக்குக் கொடுங்கள்.
நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.