கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி
இயேசுவை இந்த கிறிஸ்மசின் போது மூழ்கடித்து விடாதீர்கள்
லூக்கா 10: 41-42 வாசியுங்கள்.
நீங்களும் நானும் நம் வாழ்க்கையை மிதமிஞ்சி நெருக்குகிறோம். நாம் அளவுக்குமீறி முன்பதிவு செய்து, செலவழித்து, மதிப்பீடு செய்து அநேகமாக சோர்வாகவே அலைகிறோம். இதன் விளைவாக, கர்த்தரின் சத்தியம் நம் வாழ்வில் துளிர்விட சந்தர்ப்பமில்லாமல் போய்விடுகிறது.
பலதரம் கர்த்தர் நமக்கு சத்தியத்தின் உட்கரு ஒன்றைப் போதிக்கிறார் - காலை வேதாகம தியானத்திலோ ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்திலோ - நீங்களும் அதைக் குறித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள் ஆனால் உடனடியாகவே அதை மறந்து நெருக்கி வெளியேற்றி விடுகிறீர்கள்.
உண்மைஎன்னவென்றால், தீமையினால் சத்தியம் வெளியேற்றப்படவில்லை. பெரும்பாலும் கர்த்தர் விதைக்க விரும்பும் சத்தியத்தை நெருக்கி வெளியேற்றி விடுபவை நல்ல காரியங்கள் தான். கர்த்தர் உங்கள் வாழ்க்கைக்காக வைத்திருக்கும் இலக்கை நிறைவேற்ற நீங்கள் அதிகமாக ஏதும் செய்யத் தேவையில்லை; குறைத்தே செய்ய வேண்டும்.
இயேசுவின் நண்பர்களான மார்த்தாள் மரியாளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் அவர்கள் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். மரியாள் அந்த மாலைப்பொழுது முழுவதும் இயேசுவை கவனித்துக் கேட்டுக் கொண்டே இருந்தாள். மார்த்தாளோ, எல்லாம் சரியாக உள்ளதா என்று சரிபார்ப்பதிலும் உபசரிப்பிலுமே கவலையடைந்து மும்முரமாக இருந்தாள். மார்த்தாள் தான் தனியே பற்பல வேலைகளைச் செய்வதையும் மரியாள் இயேசுவோடு அமர்ந்திருப்பதையும் குறித்து வருத்தப்பட்டாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: "மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" என்றார். (லூக்கா 10:41-42).
உங்கள் வாழ்வின் முடிவில் ஒரே ஒரு காரியம் தான் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்: தேவ குமாரனை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? அலுவலகத்தில் அதிக நேரம் உழைத்து சம்பாதித்ததால் வாங்கிக் கொடுக்க முடிந்த அதிகபட்சமான பரிசுகள் பொருட்டாக எண்ணப்படாது. அதிக நேரம் செலவிட்டு சமைத்த அம்சமான விடுமுறை சாப்பாடு கூட பொருட்டல்ல. ஆனால் நீங்கள் நேரம் செலவிட்டு இயேசுவை அறிந்து கொண்டீர்களா என்பது மட்டுமே வருங்கால யுக யுகங்களுக்கும் கருதப்படும்.
அப்படியாக கிறிஸ்துமஸ் காலத்தை அனுபவியுங்கள். பரிசுகளுக்கு உறையிடுங்கள். உங்கள் இல்லங்களை பண்டிகைக்கு அலங்காரம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்துங்கள். ஆயினும் இயேசுவின் பாதத்தில் சிறிது நேரம் செலவழிக்காமல் இந்த கிறிஸ்மசை கடந்து விடாதீர்கள். இயேசுவை பணிந்து கொண்டது மட்டுமே இந்த கிறிஸ்மஸ் முடிந்து பல காலம் கழிந்த பின்னரும் நிரந்தரமாக நிலைக்கும்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.
More
இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.