கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 10 நாள்

கிறிஸ்துமஸின் நற்செய்தி

1 தீமோத்தேயு 2: 5-ஐ வாசியுங்கள்.

ஆண்டவரின் அன்பை பற்றின நற்செய்தியே, கிறிஸ்துமஸ் ஆகும். ஆனால் அது ஏதோ விலையுர்ந்த பரிசுபொருட்களை பற்றின செய்தியோ, அல்லது சிறப்பு உணவை பற்றின நல்ல செய்தியோ அல்ல. அது, நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் செலவழிக்கும் நேரத்தை பற்றின நல்ல செய்தியோ கூட அல்ல.

கிறிஸ்துமஸ் ஆண்டவருடைய அன்பின் நற்செய்தியைப் பற்றியது.

வேதாகமம் சொல்கிறது, ஆண்டவர் இல்லாவிட்டால் நாம் திக்கு திசை தெரியாமல் தொலைந்து விடுவோம். பாதுகாப்பற்றவர்களாகி விடுவோம். உலகில் நமது நித்திய தாக்கத்தை வெளிகொணர முடியாமலே போய்விடும். உண்மையான சந்தோஷம் இல்லை.
பரலோக ராஜ்யத்தில் நம்முடைய நித்தியத்தை குறித்த நிச்சயம் இல்லை.

கிறிஸ்துமஸை குறித்த நற்செய்தி என்னவென்றால், ஆண்டவர், கிறிஸ்து இயேசுவை காணாமல் போனவர்களை தேடி மீட்கவே அனுப்பினார். வேதாகமம் சொல்கிறது, ''தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே" ( 1 தீமோத்தேயு 2:5).

தேவாலயத்தில் நீங்கள் இரட்சிப்பைக் குறித்து பல முறை கூற கேட்டிருக்கலாம். ஆனால் அதனுடைய அர்த்தம் உங்களுக்கு புரியாமல் இருந்திருக்கலாம். அந்த வார்த்தை வைரத்தை போன்றது; நீங்கள் அதை எந்த கோணத்திலும் பார்க்கலாம்.

• இயேசு நம்மை காப்பாற்ற வந்தார். நம்முடைய பிரச்சனைகளை நாமே தீர்த்து கொள்ளமுடியாது. இயேசு நம் வாழ்க்கையில் இல்லாததினால், மற்றவர்களின் எதிர்பார்ப்பை மட்டுமே பூர்த்தி செய்பவர்களாகி விடுகிறோம். நம் சக மனிதர்கள் நம்மை ஏற்று கொள்ளும்படி, அதற்காய் நாம் செய்கிற காரியங்களில் சிக்கிக் கொள்கிறோம். அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம்.
இதையெல்லாம் விட்டு நாம் மாறுவதற்கு, நாம் திரும்பத் திரும்ப முயற்சித்தும், தப்பிப்பதற்கு பெலன் இல்லை. அந்த பெலத்தை நமக்கு கொடுக்கவே இயேசு வந்தார்.

• இயேசு நம்மை மீட்டெடுக்க வந்தார். நம் வாழ்க்கையில் தொலைந்து போன பகுதிகளை மீட்டெடுக்க நாம் ஆவலாய் உள்ளோம். இயேசுவின் உதவி இல்லாமலே தொலைந்து போன பெலன், நம்பிக்கை, திடன், நன்மதிப்பு, பேதைமை மற்றும் ஆண்டவருடனான உறவை மீட்டு விட வேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். இயேசு ஒருவரால் மட்டுமே அதை செய்ய முடியும்.

• இயேசு நம்முடனான உறவை புதுப்பிக்கவே இவுலகத்திற்கு வந்தார். பலர், மீண்டும் நாம் ஆண்டவரிடம் வந்தால் அவர் நம்மை கடிந்து கொள்வார் என்று நினைத்துகொள்கிறார்கள். ஆனால், ஆண்டவர் உங்களை கடிந்து கொள்ள மாட்டார். உங்களைக் குறித்து கரிசனை உள்ளவராகவே இருக்கிறார். இயேசு, ஆண்டவருடனான நமது உறவை சமரசம் செய்து மீண்டும் அவருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே, முதலாவது கிறிஸ்துமஸ் அன்று இவ்வுலகத்திற்கு வந்தார்.

இயேசு இவ்வுலகத்திற்கு வந்து, தம்மையே நமக்கு பரிசாய் தந்தார். அவர் பிறந்ததை கொண்டாடும் நம்மில் பலர், அவர் இலவசமாய் கொடுக்கும் இரட்சிப்பு என்னும் பரிசை ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு வருடமும் அவை பிரிக்கவே படாத பரிசாய் கிடக்கின்றது. அது புத்திசாலித்தனம் அல்ல! ஆண்டவருக்கென்று, ஆண்டவரால் உருவாக்கப்பட்டவர்கள் நீங்கள். அதை நீங்கள் புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர மாட்டீர்கள்.

இந்த கிறிஸ்துமஸ் அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கியமான பரிசை திறவுங்கள்: இயேசுவின் மூலமாய், ஆண்டவருடனான புது உறவே அப்பரிசு.

வேதவசனங்கள்

நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.