கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி
உங்கள் சிருஷ்டிகரை அறிந்து கொள்ளுங்கள்
இன்றைய வசனங்களைப் படியுங்கள்.
வருடத்தின் இந்த காலத்தில் நம் அனைவருக்குமே நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பல வேலைப்பணிகள் இருக்கும். வருடக் கடைசி அறிக்கைகள் எழுத வேண்டியதிருக்கும். விடுமுறை உணவுகளுக்குத் திட்டமிட வேண்டியதிருக்கும். மற்றும் பரிசுகள் வாங்க வேண்டியதிருக்கும்.
ஆனால் இதைவிட மிக முக்கியமான ஒரு காரியம் இந்த கிறிஸ்மஸ் சமயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியதாய் இருக்கிறது: இயேசுவோடு தனிப்பட்ட வளரும் உறவை ஏற்படுத்துவது.
ஏன் இயேசுவை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்? குறைந்த பட்சம் இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.
முதலாவதாக, இயேசு உன்னை உருவாக்கினார். வேதம் சொல்லுகிறது: "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது" (யோவான் 1:1-4).
இந்த அண்டசராசரத்தையும் படைத்த ஆண்டவரை மட்டுமல்ல உங்களைப் படைத்தவரை சந்திக்க வாய்ப்பு உங்களுக்கு உண்டு. ஜனங்கள் சொல்வார்கள்: "சந்தேகமிருந்தால் கையேட்டைப் பார்" இயேசுவை அறிந்திருப்பது அதைவிடச் சிறந்தது. வாழ்க்கையை சிறப்பாக வாழ விரும்பினால், உங்களைப் படைத்தவரை ஏன் அறிந்து கொள்ளக் கூடாது?
இரண்டாவதாக, அர்த்தமுள்ள சமாதானமும் வல்லமையும் மிக்க வாழ்க்கை வாழ இயேசு உங்கள் இருதயத்தைத் திறக்கிறார். இயேசுவுடனான உறவு உங்களுக்கு பரலோகத்தில் இடம் உண்டாகச் செய்யும், அத்துடன் கர்த்தர் தம்மை அறிந்தவர் அனைவருக்கும் அர்த்தமுள்ள சமாதானமும் வல்லமையும் மிக்க வாழ்க்கையை அளிக்க வாக்களிக்கிறார்.
இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிவது உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் மாற்றியமைக்கும்.
வாழ்வின் நோக்கம், வல்லமை, சமாதானம் இவையெல்லாம் கர்த்தர் இந்த வாழ்வில் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் காரியங்களின் துவக்கமே ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, அதிகமானவர்கள் முக்கியமற்ற சிறிய அளவிலான வாழ்க்கை வாழ்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தம் வாழ்க்கையை அர்த்தமற்ற செயல்பாடுகளால் நிறைத்திருக்கிறார்கள்.
கிறிஸ்மஸ் நெருங்கும் இந்த காலத்தில் முதல் கிறிஸ்மசில் இயேசுவுக்கு இடம் கொடுக்காத சத்திரக்காரனை நினைத்துப் பாருங்கள். அவனது செயல் இயேசு பிறப்பதை தடுக்கவில்லை. அவனது செயல் உலகுக்கான கர்த்தருடைய நோக்கத்தை தடுக்கவில்லை. சத்திரக்காரனை மட்டும் பாதித்தது. தேவகுமாரனின் பிறப்பை தன வீட்டில் நடத்தும் சலுகையை இழந்து விட்டான்.
உங்களுக்கும் இது பொருந்தும். இயேசுவை சந்திக்க நேரம் செலவழிக்காவிட்டால் உங்களைப் படைத்தவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள். தேவகுமாரன் மூலமாக மட்டுமே கிடைப்பதான வாழ்வின் நோக்கம், வல்லமை, சமாதானம் இவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இழந்து விடுவீர்கள். அவருக்கு இடமளிக்காவிட்டால் உங்கள் வாழ்விற்கு அவர் வைத்திருக்கும் நோக்கத்தையும் இழந்து விடுவீர்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை கொண்டாட வேண்டியதின் காரணத்தை நினைவுகூற உதவுகிறார். மேலும், அது விடுமறையைக் கொண்டாட வேண்டிய விதத்தை மட்டும் மாற்றாமல், மீதமிருக்கும் வாழ்க்கையையும் மாற்றவேண்டும் என்றும் நினைவூட்டுகிறார்.
More
இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.