தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி
எவெரெஸ்ட் மலையின் நிழல்களின் அருகே நேபாளத்திலுள்ள ஒரு மாசுநிறைந்த கிராமத்தில், ஏறக்குறைய 80 சதவீத சிறுமிகள் விபச்சார விடுதிகளில் விற்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் நாட்டிலேயே மிகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியான பாடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய மதம் கடந்தகால வாழ்க்கையில் அவர்கள் செய்த அதிகமான பாவங்களினிமித்தம் அவர்களைத் தண்டிக்கும்பொருட்டு கர்மா அவர்களை பூமிக்கு இந்த இனத்தில் அனுப்பியள்ளதாகப் போதிக்கிறது. மக்கள் அவர்களுக்கு உதவுவதுகூட இல்லை, ஏனெனில் கர்மா அவர்களைத் தண்டிப்பதிலிருந்து தடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. இதன் விளைவாக, பாடி இனப் பெண் பிள்ளைகள் உலகிலேயே சராசரியாக மிக அதிகம் கடத்தப்படும் மக்களில் சிலராக இருக்கின்றனர். அவர்கள் பிறந்த ஜாதி என்பது அவர்கள் நாயை விடக் கேவலமாக நடத்தப்பட வேண்டியவர்கள் என அர்த்தம் கொள்வதாயிருக்கிறது. மற்றவர்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தப் படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள் மற்றும் துர்ப்பிரயோகம் பண்ணப்படுகிறார்கள்.
இங்குதான் என்னுடைய நண்பர் ரையன், லாண்டனா என்னும் மிகவும் அழகான 10 வயது சிறுமியை சந்தித்தார். அவளை ஒரு இந்திய விபச்சார விடுதியில் விற்க அவளுடைய தந்தை சம்மதித்திருந்தார். அவளுடைய தாயினால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை, தன்னுடைய கணவர் தன்னுடைய அருமையான மகளை விற்பதைத் தடுக்க முயற்சித்தாள். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய மனைவி தங்களுடைய மகளை விற்க விரும்பாததினால் அவர் அவளை அடிக்கத் தொடங்கினார்.
இதை அவர்கள் அறிந்தபோது, அவர்கள் உள்ளூர் சமூக நலப் பணியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவுடன் தொடர்புகொண்டு விரைந்து செயல்பட்டனர். அவர்கள் லாண்டனாவை அவளைப்போன்ற பெண் குழந்தைகள் இருந்த ஒரு பாதுகாப்பான வீட்டிற்குக் கொண்டுசென்றனர். அங்கே அவர்கள் பாதுகாப்புடனும், கனிவுடனும், போஷிக்கப்பட்டு, அன்பு காட்டப்பட்டனர். லாண்டனா தேவசெய்தியைக் கேட்டாள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் எவ்வாறு தேவனுடைய குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பதைக் கேட்டாள். இதுவே உலகின் இப்பகுதியில் வாழும் மக்களுக்கான மிக வல்லமையான தேவசெய்தியாகும்.
இன்னொரு பாடி இன பெண் பிள்ளையுடன் தேவசெய்தியை பகிர்ந்து கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பர் ரையன் அவளிடம், “வேதம் சொல்கிறது உன்னுடைய குடும்பப் பெயர் இனி பாடி அல்ல. அதாவது உன்னுடைய பெயர் இனிமேலும் ஜார்லா பாடி அல்ல; அது ஜார்லா ‘கிறிஸ்து’ ஏனென்றால் நீ அவருடைய குடும்பத்தில் இருக்கிறாய், நீ இப்பொழுது அவருடைய ஜாதியில் இருக்கிறாய்” என்று சொன்னார். அவள் பிரகாசமடைந்தவளாய் முடிவுடனும், நம்பிக்கையுடனும் அவரை நோக்கிப் பார்த்தாள். “இது உண்மையாக இருக்க முடியுமா?” என்று அவள் கேட்டாள். “ஆமாம், உலகமுழுவதிலும் இதுவே உண்மையிலும் உண்மை!” என்று பதிலளித்தார்.
தனது குடும்பத்தின் அவமானம், ஜாதி, வம்சாவழி அனைத்தையும் விட்டுவிட்டு லாண்டனா மிகுந்த சந்தோஷத்துடன் தேவனுடைய குடும்பத்தில் சேர்ந்தாள். தேவன் அவளுடைய தந்தையானார், அவருடைய அன்பு தன்னுடைய சிறு பெண்ணையே விற்க விரும்பிய ஒரு தந்தையின் அன்பிற்கு முற்றிலும் மாறுபாடாய் இருந்தது. இந்த தேவன் தன்னுடைய சிறுபெண்ணைக் காப்பாற்றுவதற்காக முப்பது காசுக்காக தன்னையே விற்க விருப்பம் கொண்டிருந்தார்.
இக்கால மனிதனின் மனம் கிறிஸ்தவத்தைப் பார்த்து இவ்வாறு வியக்கிறது, “ஏன் இரத்தம்? இயேசுவின் இரத்தத்தைக் குறித்து எவ்வாறு பாடமுடியும்?” என்று. ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்களுக்கு இப்பூமியிலுள்ள நம்முடைய இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைக் காட்டிலும் மிக ஆழமான ஒரு பந்தத்தை இப்பொழுது நாம் பகிர்கிறோம் என்பது தெரியும். இயேசு ஒரு புதிய குடும்பத்திற்குள் வரும்படியாக நம்மை அழைக்கிறார், ஒரு புதிய எதிர்காலத்திற்குள் வரும்படியாக நம்மை அழைக்கிறார். இதனால்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறித்து சிந்திப்பதை விரும்புகிறார்கள்.
இந்த தேவசெய்தி நம்முடைய கடந்தகால பாவத்தை நீக்கி நம்மை சுத்திகரிப்பது மட்டுமல்ல; நம்முடைய முழுப்பரம்பரை, வம்சம், தூரத்து உறவினர்கள் எல்லோருடைய பாவங்களையும் அகற்றி சுத்திகரிக்கிறது. முக்கியமாக இனி நீங்கள் ஒரு உலகாகிதமான குடும்பத்தின் அங்கத்தினர் அல்ல; நீங்கள் ஒரு பரலோக குடும்பத்தோடு இணைந்திருக்கிறீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களை பரலோக குடும்பத்தின் அங்கத்தினராக அடையாளமிடுகிறது. நமக்கு ஒரு புதிய அடையாளம், ஒரு புதிய அந்தஸ்து, ஒரு புதிய ஆஸ்தி, புதிய சகோதர சகோதரிகள், ஒரு புதிய குடும்பப் பெயர் இவைகளெல்லாம் கிடைக்கிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
More