தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும் தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்?
நீங்கள் என்னைப் போல் இருந்தால், தேவசெய்தியை அலட்சியம் செய்துவிட்டு, அதைக் குறித்து சிந்திப்பதை நிறுத்தி விடுவீர்கள், எனெனில் அது மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாகி விடுகிறது. நாம் அதை நம்முடைய கடந்தகால கதையுடன் சேர்த்து வைத்து விட்டு நம்மையும் அறியாமலேயே அதைவிட்டு கடந்துசெல்ல முயற்சிப்போம். ஆனால் நாம் அவ்வாறு செய்யாமல் தேவசெய்தியை முதல்முறை கேட்ட நாளில் கேட்டது போலவே இன்றும் கேட்க வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் தேவசெய்தியை நாம் நமக்கு நினைவூட்டினால், அன்றைய நாளில் நாம் எதிர்கொள்ளப் போகும் மிகக் கடினமானப் போராட்டம் ஏற்கனவே வெல்லப்பட்டு விட்டதால் நாம் அந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கடந்துசெல்வோம்.
தேவசெய்தியை நீ்ங்கள் உங்கள் இருதயத்திற்கு தவறாமல் பிரசங்கித்து வந்தால், உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமானதாக இருக்கும்?
தேவசெய்தி பல்வேறு வழிகளில் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தி, நம் அன்றாட வாழ்வை வடிவமைக்கிறது. இந்த பயன்களைக் குறித்ததான தொடர்ச்சியான நினைவூட்டல்கள் நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது, மேலும் அவைகளை இன்னும் புரிந்துகொள்ள தேவபலம் நமக்குத் தேவைப்படுகிறது.
நிறைய விசுவாசிகள் நற்செய்தி என்பது பழைய செய்தி என்று நினைக்கிறார்கள். நற்செய்தியை நாம் மிக அதிகமாகக் கேட்டதில்லை. அதாவது போதுமான அளவிற்குக் கேட்டதில்லை. ஒரு அழகான வைரத்திற்கு அநேக பட்டைகள் இருப்பதுபோல தேவசெய்தி என்பது எல்லையற்ற அழகுடையது, ஒருபோதும் பழமையாய்ப் போகாதது. தேவசெய்தியை ஆராய்ந்து பார்க்கப் பார்க்க, நாம் விசுவாசத்தில் பலமுள்ளவர்களாவோம், மனதிருப்தியுள்ளவர்களாவோம்.
தேவன் நமக்காக செய்த எல்லாவற்றையும் குறித்ததான தொடர்ச்சியான நினைவூட்டல்கள் நமக்குத் தேவைப்படுகிறது, ஏனெனில் தேவசெய்தி தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவருக்கு சேவை செய்யவேண்டும் என்ற நமது விருப்பத்தைத் தூண்டுகிறது, மற்றும் ஊக்கமூட்டுகிறது. தேவன் நமக்காக செய்த காரியங்களை, அதாவது தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் நமக்கு எவ்வளவாய் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கும் போது, நம்முடைய முழு வாழ்வையும் அவருக்கு அர்ப்பணிக்கும்படியாய் மாற்றப்படுவோம், மற்றும் தூண்டப்படுவோமே தவிர வேறொன்றும் செய்ய நம்மால் இயலாது. பலவீனமும், அற்பமுமான பாவிகளாய் நாம் பூரண இரட்சகராகிய அவரைப் பின்பற்றத் தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில், நாம் எவ்வாறு அன்புகூறப்பட்டவர்கள் என்பதையும், நமக்கு உதவிசெய்யும்பொருட்டு தேவன் எவ்வளவாய் நமக்குள் கிரியை செய்கிறார் என்பதையும் தேவசெய்தி நமக்கு நினைவூட்டுகிறது.
உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில், தேவசெய்தியின் சத்தியத்தை உங்கள் இருதயத்திற்குத் தவறாமல் நினைவூட்டுவதைக் காட்டிலும் பெரிய தேவை வேறெதுவுமில்லை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
More