தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி
உள்ளூர் ஆலயம் ஒன்றிலிருந்து ரஷ்யாவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஆலயம் கட்டுவதற்காக ஊழியப் பயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் பாழடைந்த ஒரு ரஷ்ய சிறைச்சாலையின் கற்களைக் கொண்டு தேவாலயத்தைக் கட்டிக்கொண்டிருந்தனர். என்ன ஒரு அற்புதமானக் காட்சி!
அந்தக் கற்களைப் பாதுகாக்க மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. அங்குள்ள பெரிய கற்களில் ஒன்றை அகற்றியபோது, செதுக்கி எடுக்கப்பட்ட ஒரு கல்லினுள்ளே வைக்கப்பட்டிருந்த காற்று புகாத பெட்டி ஒன்றைக் கண்டுபிடித்தனர்; அந்தபெட்டியினுள்ளே மிக அவசரமாக எழுதப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது, அதில்: “நாங்கள் எங்கள் ஆலயத்தின் கற்களை எடுத்து அதினால் ஒரு சிறைச்சாலையைக் கட்டி, சாகும் வரை அதற்குள் இருக்கும்படியாக பொதுவுடைமைக் கொள்கைக்காரர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு கிறிஸ்தவ குழுவினர். எங்களுடைய ஜெபமெல்லாம் ஒருநாளில் இந்த கற்களெல்லாம் திரும்ப எடுக்கப்பட்டு ஒரு ஆலயம் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே.”என்று எழுதப்பட்டிருந்தது.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, அவர் தன்னை முதலாவது வெளிப்படுத்த தெரிந்தெடுத்த பாத்திரம் மகதலேனா மரியாளாவாள். அந்நாட்களில், ஒரு பெண்ணின் சாட்சி என்பது நியாயஸ்தலங்களில்கூட ஏற்கப்படுவதில்லை. ஆனால் இயேசு ஒரு அற்பமான ஏழைப் பெண்ணை தன்னுடைய முதல் சாட்சியாகத் தெரிந்தெடுத்தார், உலகிலேயே மிகப்பெரிய செய்தியான தேவசெய்தியைக் கொண்டு, ஒரு எளிய பெண்ணினால் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய, மற்றும் மிக சக்தி வாய்ந்த ஒரு சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்க முடியும் என்பதை உலகத்திற்குக் காட்டினார். இன்று, தங்கள் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களினால் தேவனுடைய இராஜ்யம் ஒவ்வொருநாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதே சமயத்தில் ரோம சாம்ராஜ்யம் என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது.
சுவிசேஷத்தின் கதை என்பது உயிர்த்தெழுதலின் அசாதாரண வல்லமையை நேரில் பார்த்து, அனுபவித்த சாதாரண மக்களுடைய ஒரு கதையாகும். எப்பொழுதெல்லாம் நீங்கள் சோர்வாய், பலவீனமாய் உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம் வல்லமையை உங்கள் மூலமாய் வெளிப்படுத்த ஆயத்தமுள்ளவராயிருக்கிறார். உங்கள் வாழ்வில் அற்பமானதாய் தோன்றுகின்ற பகுதிகளே இன்னுமொரு உயிர்த்தெழுதலின் அற்புதத்தைச் செய்யும்படியாக கிறிஸ்து நோக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளாகும்.
கிறிஸ்து தம்முடைய மிகப்பெரிய அற்புதங்களை மிகவும் சாதாரண சமயங்களில், மிகவும் அற்பமான பட்டணங்களில், மிகவும் சாதாரண மக்கள் மத்தியிலேயே செய்தார். பெரும்பான்மையான அதிசயங்கள் எருசலேம் ஆலயத்தில் செய்யப்படவில்லை, சிறிய கிராமங்களின் எல்லைகளிலேயே செய்யப்பட்டன. ஆகவே, நீங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியில்லாத ஒரு இடத்தில் இருந்தால், தேவனின் உயிர்த்தெழுதலின் வல்லமை கரைபுரண்டோடுவதற்கான மிகச்சரியான இடத்திலேயே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
தேவசெய்தியை நீங்கள் உங்கள் இருதயத்தோடு ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொள்ளும்போது, மிக சாதாரணமான சராசரி நாட்கள், மிக சாதாரணமான இடங்கள், மற்றும் மிக சாதாரணமான மக்கள் மத்தியிலேயே உயிர்த்தெழுதலின் வல்லமையைக் காண ஆரம்பிப்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
More