தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி
வேதாகமத்தில் காணப்படும் "பாக்கியவான்" அல்லது "ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்ற வார்த்தைக்கான டேவிட் பென்ட்லி ஹார்ட் அவர்களின் மொழிபெயர்ப்பை நான் வாசித்தபோது ஏறத்தாழ என் கையிலிருந்த புத்தகத்தை நழுவவிட்டுவிட்டேன். பிரசித்தி பெற்ற கல்விமானான அவர், பாக்கியவான் என்பது நம்முடைய கலாச்சாரத்தில் எவ்வாறு அதன் அர்த்தத்தை இழந்திருக்கிறது என்பதைக் குறித்துப் பேசுகிறார்: இது கிட்டத்தட்ட "அதிர்ஷ்டம்" அல்லது "நல்வாய்ப்பு" என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. மாறாக, இதன் உண்மையான அர்த்தம் பேரின்பம் அல்லது பரவசம் போன்ற வார்த்தைகளோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாய் இருப்பதாக ஹார்ட் வாதிடுகிறார்.
தேவன் நமக்காக செய்திருக்கும் காரியம் இதுதான்: நாம் மட்டில்லா மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அளவுக்கு எல்லாவிதமான நித்திய ஆசீர்வாதங்களையும் அவர் நமக்குத் தந்திருக்கிறார்!
நம்முடைய அனுதின விருப்பம், நம்முடைய அனுதின போராட்டம், நம்முடைய அனுதின சோதனையெல்லாம் நாம் இதை நினைவில் வைத்து, உணர்ந்து, இந்த உண்மையில் வாழ்கிறோமா, அல்லது இல்லையா என்பதுதான்.
மேலும் இது சூழ்நிலைகளைப் பொருத்ததல்ல. நான் இதை ஒருக்காலும் மறக்காதபடிக்கு மேஷா என்ற ஒரு இளைஞன் இதை எனக்கு இவ்விதமாகக் கற்பித்தான்.
மேஷா போரினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஒரு நாட்டிலுள்ள ஒரு அகதி. அவனுடைய கிராமம் மற்றும் அவன் அறிந்திருந்தவைகள் எல்லாம் ஒரு கொடூரமான எதிரியின் படையால் அழிக்கப்பட்டுவிட்டன, அவன் ஒரு சுமைதூக்கியாக இருக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டவனாய், ஒரு போர்வீரனின் பொருட்களை சுமந்துகொண்டு, துப்பாக்கியின் குழலை வெறித்துப் பார்த்தவாறே மழை நிறைந்த ஒரு காட்டினுள் நடந்து சென்றான். இது இயேசுவின் நாட்களில் ரோமப்படைவீரன் ஒருவன் தன்னுடைய உடைமைகளை ஒரு மைல் தூரம் சுமந்துவரும்படி ஒரு மனிதனைக் கட்டாயப்படுத்துவது போல் இருந்தது.
பிறகு ஒரு நாள், ஒரு போர்வீரன் கண்ணிவெடி ஒன்றை அகற்றும்படி துப்பாக்கி முனையில் மேஷாவைக் கட்டாயப்படுத்தினான். கண்ணிவெடி வெடித்தது, மேஷா ஒரு கணப்பொழுதில் தன்னுடைய இரண்டு கைகளையும், இரண்டு கண்களையும் இழந்தான். அவன் இறந்துவிட்டான் என நினைத்து அவர்கள் அவனை அங்கேயே விட்டுச்சென்றனர், ஆனால் அவன் சாகவில்லை.
பல வருடங்களுக்கு முன்பு, யாரோ ஒருவர் நமக்காகப் பாடுபட்ட இயேசு இரட்சகரின் கதையை அவனோடு பகிர்ந்துகொண்டுள்ளார். தன்னுடைய வலி வேதனையை அறிந்த தேவனை அவன் இனம் கண்டுகொண்டான். அவனுடைய வாழ்க்கை மகிமையாக மறுரூபமடைந்தது.
தேவசெய்தியைக் குறித்து மேஷா மிகுந்த பரவசமடைந்தான், இயேசுவைப் பற்றி இதுவரை கேட்டறிந்திராத மக்களிடம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அவன் அநேக அகதி முகாம்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் சென்றான்.
மேஷாவின் மகிழ்ச்சி தொற்றும் தன்மையுள்ளது. கண்பார்வையுள்ளவர்கள், இரண்டு கைகளையுடையவர்கள், மிகுந்த வறுமையினிமித்தம் அகதி முகாம்களில் வாழும் நிலையில் இல்லாதவர்கள் போன்ற அநேகரைக் காட்டிலும் அவனுடைய சந்தோஷம் பெரிதாயிருக்கிறது. சிலுவையின் மீதான அவனுடைய நன்றியுணர்வினால் அவனுடைய சந்தோஷம் ஊற்றெடுத்து ஓடுகிறதாயிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் கிறிஸ்துவோடுகூட நித்தியகாலமாய் வாழ்வோம் என்பதை மேஷா அறிந்திருக்கிறான்.
அகதி முகாமின் மத்தியில் நற்செய்தியின் சந்தோஷத்தை பொங்கிவழியச் செய்வதின் மூலம் மேஷா இதற்கு முன்மாதிரியாய் இருக்கிறான். அவன் “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 4:17) என்ற பவுல் அப்போஸ்தலனின் கூற்றை மெய்யாக்குகிறான்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்மைக் காக்கவும் செய்கிறது. மாட் பிரௌன் மற்றும் ரையன் ஸ்கூக் என்பவர்களால் எழுதப் பட்ட 30-நாள் தியான புத்தகத்தை மையமாகக்கொண்டு ஆசிரியரும், சுவிசேஷகருமான மாட் பிரௌன் அவர்கள் இந்த வாசிப்புத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
More