ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம்மாதிரி

Every Step An Arrival

5 ல் 2 நாள்

முன்னொரு காலத்தில்

“முன்னொரு காலத்தில்“ இதுவே எல்லா நல்ல கதைகளும் தொடங்கும் விதம். இதுவே கிறிஸ்த்துவர்கள் “வாழ்க்கை முக்கியமா?” என்ற கேள்வியை கையாளும் விதமும் ஆகும். ஒரு கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அத்தியாவசியமே. அனைத்து நபர்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. எனவே நாம் “ “ என கூறி நம் நம்பிக்கை மற்றும் ஐயங்கள், நம் பணிவு மற்றும் பணியாமை, நம் வழிபாடு மற்றும் நம் அசிரத்தை ஆகியவகளை தொடர்கிறோம். அவை அனைத்தும் மற்றும் பல ஒரு கதையின் பகுதியாகும் - அர்த்தமுள்ள ஒரு கதை.

எல்லா கதைகளும் ஹிரோக்களை பற்றியதில்லை. எல்லா கதைகளும் காவிய சாகசங்கள் பற்றியதில்லை. வீரம் நிறைந்த கதைகள் நமக்கு உள்ளது - ஜோசப், மோசஸ், டேவிட் மற்றும் பௌவுள் ஆகியவை. நயோமி, ரூத் போன்ற கதைகளும் உள்ளன. இங்கே சாகசங்கள் மிகவும் அன்றாடம். ஆனால் இந்த தினசரி சாகசங்கள்-குடிப்பெயர்ச்சி, நயோமியின் பால் ரூத்தின் விசுவாசம், ரூத்தின் மேல் போயெஸின் பரிவு, திருச்சட்டதின் பால் அவதானம்-இந்த விவரங்கள் எல்லாம் ஒரு கதையின் பகுதி தேவனின் மகா இரட்சிப்பு கதையின் ஒரு துணைக்கதை. ஏதோ பொருள் உள்ள கதை-அனைத்தும் பொருட்படுத்தும் கதை.

நயோமி இந்த கதையில் புகாரிட்டு நுழைந்தார். அவர் இழப்பு அனுபவித்தார், அதை பற்றி நொந்து முறையிட்டார், அவரது மனவருத்தம் கதை சொல்பவரால் முக்கியமாக கருதபட்டு தேவனை பற்றிய ஒரு குறைகூறலாக வடிவமைக்கப்பட்டது. இந்த வசனங்கள் அவரை கடவுளின் முன்பாக ஒரு வாதியாக அறிமுகபடுத்தும் விதமாக அமைக்கபட்டுள்ளன. இந்த மாதிரி சட்டபூர்வ புகார் செய்தல் எரேமியா பேசுகையில் உள்ளது, அவர் தேவனுக்கும் மக்களுக்கும் இடையே வழக்கு எதிர் வழக்காக பேசுகிறார். அவர் மக்களின் புகார்களை தேவனுக்கு எதிரான ஒரு சட்டபூர்வ வழக்காக மாற்றுகிறார், தேவன் நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்க தவறிவிட்டார் என்பதே குற்றசாட்டு.

இறைவனிடம் இவ்வாறு பேசுவது இழிவானதாகவும், ஏன் தேவதூஷணம் போல தோன்றினாலும் உண்மையில் இது பைபிள் சார்ந்ததே. பரஸ்பரம் புகார்களை கேட்டு அவற்றை தேவனுக்கு எதிராக வடிவமைப்பதன் மூலம் நாம் ஒருவருக்கு ஒருவர் கதைக்குள் நுழைய உதவுகிறோம். நாம் எப்போழுதுமே தேவனின் பக்கம் சார்நது அவருக்காக வாதம் செய்ய தேவையில்லை. வேதாகம ரீதியில் சில நேரங்கள் நாம் வாதியின் பக்கதில் இருக்க நேரிடும். முக்கியமாக கருதபட்டதால்-புரக்கணிக்கபடாமல், குறைக்கபடாமல், ஆன்மிகபடுத்தாமல் இருந்ததால்-நயோமியின் புகார் கதையின் ஒரு பகுதியாயிற்று. அவரின் வாழ்க்கையில் இருந்த வெற்றிடம் துணைகதையில் நெய்யபட்டு, அந்த செயலாக்கத்தின் வாயிலாக தேவனின் திருவருளை நிரூபிக்கும் ஒரு தறுவாயாக ஆக்கபட்டது.

தேவனுக்கு எதிராக புகார் குரலேடுக்க நீங்கள் தயங்குகிறீர்களா? நயோமியின் கதை உங்களை தேவனிடம் மிகுந்த வெளிப்படையாக பேச எவ்வாறு வழிகாட்டுகிறது?

day_2 https://my. bible. com/reading-plans/12716-every-step-an-arrival https://my. bible. com/reading-plans/12716-every-step-an-arrival/day/2

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Every Step An Arrival

யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த HarperCollins அமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://waterbrookmultnomah.com/books/540871/every-step-an-arrival-by-eugene-h-peterson/ என்ற வலைத்தளத்தை அணுகவும்