ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம்மாதிரி
இறைவன் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவது
பைபிள் விவனப்புகளில் பல முறை, தொன்மையான வரலாற்றை பற்றி படிப்பதை காட்டிலும் நம்மை பற்றியே மேலும் கற்கின்றோம். ஏட்டுரைப்பகுயில் கிதியோனின் இந்த கேள்வி நம் உதடுகளில் உடனடியாக குதித்தெழும், "என் ஆண்டவரே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவை எல்லாம் எங்களுக்கு நேரிடிவானேன்?"(நியாயப 6: 13).
மரணம், வேதனைகள், சலிப்பு, நமக்கு பிடிக்காத வேலை, நம்மால் புரிந்து கொள்ள முடியாத நபர்கள், நம்மால் மாற்ற முடியாத சூழ்நிலைகள் ஆகியவை நம் வாழ்வில் நிறைந்திருக்கும் வேளைகளில் ஆண்டவர் எங்கோ தூரத்தில் இருப்பது போல தோன்றும். நமது கேள்விக்கு பதிலை எதிர் நோக்கியே கிதியோனின் கேள்விக்கான பதிலை நாம் கவனிக்கின்றோம், சாதாரணமாக பதில் என நாம் வகைப்படுத்தாவிட்டாலும் கூட. ஆனால் ஒரு கட்டளையே இருக்கிறது: "நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்" (நியாயாப 6: 14).
கிதியோனின் பதில் நமது பதில் போலவே இருக்கிறது: “என்னை பாருங்கள். மனாசேயில் எனது வம்சம் மிகவும் பலவீனமானது மேலும் எனது குடும்பத்தில் நானே கீழானவன்” (நியாயாப 6: 15). ஆனால் கிதியோனுக்கு இனி மேலும் பழய தோல்விகளை பற்றிய உண்முக சோதனைகள்,, விதியின் வழிகள் பற்றிய ஊகங்கள், சொந்த மதிப்பீடு ஆகியவை தேவையற்றது என தேவன் காட்டினார். முன்பே எகிப்தில் உள்ளது போலவே. இந்த துவக்க முயற்சி ஆண்டவரின் கைகளில் உள்ளது. கிதியோன் சத்தியத்திறகு கீழ்படிந்து கடைபிடிக்க வேண்டும் அவ்வளவே. அவர் சேவகம் செய்தால் மட்டும் போதும், ஆண்டவர் வெற்றியை கொண்டுவருவார்.
இப்போது, உங்கள் வாழ்நாளை பின் நோக்குங்கள், உங்கள் குடும்பத்தின் சென்றகாலத்தை தேடுங்கள், நாட்டின் மரபுகளை கவனியுங்கள், ஒரு நபர் தேவனுக்கு பதிலளிக்காமல் அவரது நேசத்தை நிராகரித்தால் என்னவாகும் என்பதை காணுங்கள. கீழ்படியாமையை அறிதல் மிகவும் எளிது. அதன் வழக்கமான அறிகுறிகள் மந்தமான தார்மீக அன்னிச்சைகள், உங்கள் செறிக்கும் திறனை பாதிக்கும் ஒரு சஞ்சலமான மனசாட்சி, உங்களை எளிதாக சோர்வடைய செய்யும் குற்ற உணர்வின் பாரம், மேலும் உங்கள் படைப்பு திறனை அரிக்கும் ஒரு கீழ் தரமான சோகம்.
உங்களிடமே இந்த அறிகுறிகள் இருப்பதை அடையாளம் கொண்டுள்ளவர்களுக்கு, என்னிடம் இருந்து ஒரு நற்சேய்தி: ஆண்டவர் உங்களை நேசிக்கின்றார், அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுள் ஒரு புதிய சாசுவதமான வாழ்வை தோற்றுவிக்க தயாராக உள்ளார். இந்த வினாடியில் உங்கள் பழயதை அகற்ற, உங்கள் பற்றிய பதிவுகளை துடைக்க, உங்கள் கோப்புகளை எரித்து விட ஆண்டவர் தயாராக உள்ளார். நீங்கள் செய்த எதுவும் அல்லது நினைக்கும் எதுவுமே அவர் இத்தருணத்தில் உங்களுக்காக செய்வனவற்றை ஏற்க தகுதியற்றவராய் ஆக்காது.
உங்கள் சொந்த பலவீனங்கள் அல்லது பழய தோல்விகள் பற்றிய உணர்வுகள் பற்றிய சிந்தனைகள் ஆண்டவரின் வழிகாட்டுதலை பின்பற்றுவதை எப்போது தடுக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.
More