மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 17 நாள்

நம்பிக்கை இல்லை

“என்ன பிரயோஜனம்,” என்று ஜெஃப் என்னிடம் கேட்டார். “எத்தனையோ முறைகள், தேவனுக்கென்று எதையாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். நான் எதைச் செய்தாலும், எவ்வளவு கடினமாக முயன்றாலும், கடைசியில் தோல்வியைத் தான் சந்திக்கிறேன்.”

“தினமும் தேவனோடு நேரத்தைச் செலவு செய்வேன் என்று நான் பொருத்தனை பண்ணினேன்” என்று பாம் சொன்னாள். “இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நான் எடுத்த ஒரே முடிவு இது ஒன்று தான்” என்று தோளைக் குலுக்கினாள். “இப்பொழுது ஏப்ரல் மாதம் ஆகியும், மூன்று வாரங்களுக்குத் திட்டமிட்டபடி செய்தாலும், அதன்பிறகு நான் எந்த காரியத்தையும் முடிப்பதில்லை”.

ஜெஃப்ம், பாம்மும், நம்பிக்கை இழந்தவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தாலும், அதைச் செய்ய விரும்பினாலும், அவர்கள் செய்து முடிப்பதில்லை.

அவர்களுடைய தோல்விகளை விவரிக்க, நமக்கு எந்த வழியும் இல்லாவிட்டாலும், இவ்விருவருமே நம்பிக்கை இழந்த நிலைக்குச் சென்று விட்டனர். அவர்களால் செய்ய முடியாது என்று நிச்சயமாக இருந்தனர். “முன்பே நான் முயன்று விட்டேன், தோல்வி அடைந்து விட்டேன்” என்று ஒவ்வொருவரும் சொன்னார்கள். திரும்பவும் முயற்சி செய்கிறேன், நான் திரும்பவும் தோற்றுப் போகிறேன். ஏற்கனவே அதைக்குறித்து வருந்துகிற நான் தோல்வியைக் குறித்து, இன்னும் ஏன் மோசமாக உணரவேண்டும்?”

பிற்போக்கான அவர்களுடைய எண்ணங்களும், வார்த்தைகளுமே, அவர்களுடைய தோல்விக்குக் காரணம் என்பதை அவர்கள் நினைக்கவில்லை. அவர்களைத் தாக்கி, அதைரியப்படுத்த பிசாசு ஆயத்தமாக இருந்தான். நம்பிக்கை இழந்த மனநிலையில் தான் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளையெல்லாம், செய்து முடித்தனர். 

“எனக்கு எல்லாம் தோல்வியாகத் தான் முடிகிறது. என்னுடைய வாழ்க்கையில், முக்கியமான பல வேலைகளையும் என்னால் முடிக்க முடிவதில்லை” என்று பாம் அடிக்கடி சொல்லுவான்.

தங்கள் சொந்த வார்த்தைகளினாலேயே, ஜெஃப்ம், பாம்மும் தோற்றுப் போகத் தங்களை ஆயத்தப்படுத்திவிட்டனர். அவர்கள் வார்த்தைகளினால் மட்டுமல்ல, அவர்கள் சிந்தனைகளினாலும் கூட, சிதைக்கப்பட்டனர்.

நம்பிக்கையை, அதைரியம் அழித்துவிடும். ஒரு தோல்வி அடுத்தடுத்து அநேக தோல்விகளுக்குள் நடத்தும், “இது இப்படியேத்தான் இருக்கும்” என்ற சிந்தனைக்கு இடமளித்தால், பிசாசு நம் மேல் ஜெயம் எடுத்துவிடுவான்.

“உங்கள் சிந்தனைகளை எவ்வாறு சிந்திக்கிறீர்கள் என்று பரிசோதியுங்கள்”, என்று நான் ஜெஃப்ஐயும், பாம்ஐயும் வற்புறுத்தினேன். உங்கள் செய்கைகளின் முடிவு எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, உங்கள் சிந்தனைகளிலும், அதன்விளைவாக உள்ள உங்கள் மனப்போக்கு, ஆகியவைகளை ஆராய்ந்து பாருங்கள்” என்றேன்.

நாங்கள் இதைக்குறித்துப் பேசும்போதும், ஜெஃப், தோற்றுப்போவேன் என்று தான் எதிர்பார்த்தார். பிசாசானவன் அவர் மனதை சிறைப்படுத்தியிருந்தான். அவரும் தோற்றுப்போனார், காரணம் அவர் அதைத் தான் எதிர்பார்த்தார். பாம்மும் அப்படித்தான். இருவரும் தோல்வியையே நினைத்து அதிலே கவனம் செலுத்தினார்கள். அவர்கள் வேறு எதையும் சிந்திக்கவில்லை. எதை செய்ய துவங்கினாலும், துவக்கத்திலேயே தோற்றுவிடுவோம் என்று பயந்தார்கள். வேதமும் அதைத்தான் கூறுகிறது: “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது” (யோபு 3:25).

“எப்படிப்பட்ட நினைவுகளை நீங்கள் நினைக்கிறீர்கள் என்று உங்களையே கேளுங்கள்”, என்று நான் அவர்களுக்கு சொன்னேன். நாம் சிந்திக்கும் விதத்தை நாம் மாற்றினால் தான் நம் செய்கையின் விளைவை நாம் மாற்ற முடியும். ஜெஃப், பாம், இருவரும் தாங்கள் தோற்றுப்போவோம் என்று நம்பினார்கள். நாங்கள் ஜெயிப்போம் என்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். 

அடுத்த சில வாரங்களில், ஜெஃபின் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம். ஒரு புதிய காரியத்தைச் செய்யத் தொடங்கும் போதெல்லாம், “கொஞ்சம் மெதுவாகத்தான் செல்லுகிறது, ஆனாலும் நான் முன்னேறுகிறேன். நேற்று கடினமாக இருந்தது, நான் கொஞ்சம் அதைரியப்பட தொடங்கினேன், எனக்காக பரிதாபப்படவும் ஆரம்பித்தேன். அது ஏனென்றால், நான் தவறான நினைவுகளை தெரிந்தெடுத்ததால்தான்”.

பாம்மும் அப்படித்தான். “நான் இப்பொழுது சோர்வடைய மறுக்கிறேன்” போன செவ்வாய்கிழமை இரவு, நான் அவசரமாக படுக்கச் சென்றேன். அந்த நாள் முழுவதும் கர்த்தரோடு நேரத்தைச் செலவு செய்யாததை நினைத்தேன். மிகவும் களைப்பாக இருந்தேன். “கர்த்தாவே என்னை மன்னியும், நான் விட்டுக் கொடுத்துவிடாமலிருக்க எனக்கு உதவி செய்யும்” என்று அவள் ஜெபித்தாள்.

போன வாரம் ஒரு முறையும், அதற்கு முந்தின வாரத்தில் இரண்டு முறையும் தான் தவறியதை பாம் நினைவுக்கு கொண்டு வந்தாள். மற்ற நாட்களில், தான் உண்மையாக இருந்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டாள். அது அவளுக்கு நம்பிக்கையூட்டியது. “இது 100 சதவீதம் வெற்றியாக இல்லாவிட்டாலும், பூஜ்ஜியத்தை விட எவ்வளவோ மேல்”.

ஜெஃப்ம், பாம்மும் ஒரு வல்லமையான சத்தியத்தை அறிந்து கொண்டார்கள், அதை நாமும் புரிந்துகொள்ள வேண்டும். “இயேசுவானவர் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை”. நாமே தான் நம்மை குற்றப் படுத்திக்கொள்கிறோம். அதைரியப்படுத்தும், சோர்வுக்குள்ளாக்கும் சிந்தனைகளினால் நம் மனதை நாமே நிறைத்துக் கொள்ளுகிறோம். நாம் அப்படிப்பட்ட சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு “உம்முடைய உதவியினால், ஆண்டவராகிய இயேசுவே, என்னால் முன்னேற முடியும்” என்று சொல்ல வேண்டும்.


ஆண்டவராகிய தேவனே, உம்முடைய உதவியோடு, என்னால் எல்லாம் செய்ய முடியும். நான் அதைரியப்பட்டு என் நம்பிக்கையை இழக்க மாட்டேன். உம்முடைய உதவியோடு, என் மனதில் பிசாசு கொண்டு வரும் தவறான சிந்தனைகளை நான் தோற்கடிக்க முடியும். உம்முடைய வெற்றிக்காக நன்றி. ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/