எல்லா தேவைகளுக்கும் தேவ வசனம்மாதிரி
ஒரு பரலோக அழைப்பு
“நான் உங்களுக்கு தந்தையாக இருப்பேன்.”
வேதாகமத்தில் மிக முக்கியமான வசனம் எது? பலரும் இவ்வாறு பதிலளிப்பார்கள்: "யோவான் 3:16: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." எனினும், கொரிந்தியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் கடிதத்திலிருந்து இந்த வசனமும் மிக முக்கியமானதாகக் கருதப்படலாம். ஒரு வகையில், தேவனுடைய முழு திட்டமும் நோக்கமும் "நான் உங்களுக்குத் தந்தையாக இருப்பேன்" என்ற வார்த்தைகளில் சுருக்கிக் கூறப்படலாம். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ததிலிருந்தே இது தேவனுடைய திட்டமாக இருந்து வருகிறது. அது நடந்தபோது, மனிதர்கள் பிதாவின் அன்பிலிருந்து பிரிக்கப்பட்டனர். உண்மையில், நாம் ஆன்மீக அனாதைகளாக மாறினோம் - இனி தேவனை நமது பிதாவாக உறவுகொள்ள முடியாதவர்களாக ஆனோம். ஆனால் இயேசுவுக்கு நன்றி, இவையனைத்தும் மாறிவிட்டன! நமது அனாதை நிலைக்கான பதில் இயேசுவே. நமது பாவங்களுக்காக மரிக்கவும், நம்மை பூமியில் பிதாவின் குடும்பத்தில் தத்தெடுக்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார். இப்போது நாம் தேவனை "பிதா" என்று அழைக்க முடியும், அவரது அன்பின் கரங்களில் இளைப்பாற முடியும். இந்த தியான புத்தகத்தில், இயேசு நம்மை இந்த காலத்தைக் கடந்த வார்த்தைகளுக்கு பதிலளிக்க அழைக்கிறார்: "நான் உங்களுக்குத் தந்தையாக இருப்பேன்."
பிரார்த்தனை
தேவனே, உம்மை பிதாவாக அறிந்துகொள்ள நீர் அளித்த அழைப்புக்கு நன்றி. நான் இந்த தியான தொடரை ஆரம்பிக்கும்போது, என் முழு இருதயத்தோடும் "ஆம்" என்று சொல்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
மேலும் அறியடெஸ்டினி பட வெளியீட்டாளர்கள், அல்லது இந்த புத்தகத்தை பற்றி மேலும் அறியAmazon or பார்ன்ஸ் மற்றும் நோபல்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை கடினமாக இருக்கலாம், மேலும் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போதும், ஊக்கம் தேவைப்படும்போதும் செல்ல சிறந்த இடம் தேவனின் வாசகமே. ஆனால் சில நேரங்களில் எங்கு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். வேதாகமம் வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளில் தேவ வசன மாணவர் அனைவருக்கும் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற முக்கியமான வேதவாக்கியங்களை நாடும் படிக்கு உள்ளடக்கியது. உங்கள் கஷ்ட காலங்களை கடக்க தேவரின் உதவியை சார்ந்திருங்கள்.
More