எல்லா தேவைகளுக்கும் தேவ வசனம்மாதிரி
நிரூபிக்கபட்ட நேசம்
“பிதா உங்களை நேசிக்கின்றார்.”
இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, இயேசு தம்முடைய சீஷர்களிடம் பிதா அவர்களை நேசிக்கிறார் என்று கூறினார். இங்கே "அன்பு" என்ற வார்த்தை ஒரு கடமையான அக்கறையையோ அல்லது தன்னை மறந்த, தியாகம் செய்யும் பக்தியையோ குறிக்கவில்லை. இது "நிரூபிக்கபட்ட நேசம்" என்ற உணர்வைக் கொண்டுள்ளது — அரவணைப்பு நிறைந்த வெளிப்படையாக காட்டபடும் நேசம். இதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பிதாவின் அன்பு ஒரு கடமை சார்ந்த அல்லது முறைசார் அன்பு அல்ல. இல்லாமல், இங்கே இயேசுவின் வார்த்தைகளின் பொருள் என்னவென்றால், "பிதா உங்களை ஆழமாகவும், அன்பாகவும், நிரூபணமாகவும் நேசிக்கிறார்." எப்பேர்பட்ட மேன்மையான நேசம் இது! உலகத்தில் பல தகப்பனார்கள் உடல் நெருக்கத்திலும் உணர்ச்சி பூர்வமாகவும் மிக தொலைவில் இருக்கின்றனர். சொர்கத்தில் இருக்கும் நமது பிதாவானவர் இவ்வாறில்லை; கர்த்தர் மரித்து பின் உயிர்த்தெழுந்த போது, அவர் சொர்கத்திற்கு ஏறினார் அங்கிறுந்த படிக்கு அவரை பின்பற்றுவோர் மீது அவரது பரிசுத்த ஆவியினை ஊற்றினார். அவரது சீடர்களை தத்தெடுக்கும் அவியால் மிகவும் நிரப்பினார் எந்த அளவுக்கேன்றால் ”பிதாவே!” என விளிக்க தொடங்கினர். அத்தருணம் முதல் நிரூபிக்கபட்ட நேசத்தொடு பிதாவானவர் தங்களை நேசிக்கின்றார் என்பதை அறிந்தனர்-அவரது வலிமையான ஆருதல் அளிக்கும் நேசக்கரங்கள் மூலம். நமக்கும் கர்த்தர் இதையே நாடுகிறார். இதை நம் புத்தி மட்டுமன்றி மனதளவிலும் அறிந்து கொள்ள உதவமாறு அவரிடம் நாம் கேட்போமாக. பிதாவின் நிரூபிக்கபட்ட நேசத்தை நாம் அனுபவிப்போமாக.
பிரார்த்தனை
அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, பிதாவே என்னை ஆழமாகவும், அன்பாகவும், நிரூபணமாகவும் நேசிக்கிறார் என்பதை என் இருதயத்தில் அறிந்துகொள்ள எனக்கு உதவுமாறு நான் உம்மை வேண்டுகிறேன். உமது நாமத்தில். ஆமென்
மேலும் அறிய டெஸ்டினி பட வெளியீட்டாளர்கள் அல்லது இந்த புத்தகத்தை பற்றி மேலும் அறிய Amazon அல்லது பார்ன்ஸ் மற்றும் நோபல்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை கடினமாக இருக்கலாம், மேலும் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போதும், ஊக்கம் தேவைப்படும்போதும் செல்ல சிறந்த இடம் தேவனின் வாசகமே. ஆனால் சில நேரங்களில் எங்கு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். வேதாகமம் வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளில் தேவ வசன மாணவர் அனைவருக்கும் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற முக்கியமான வேதவாக்கியங்களை நாடும் படிக்கு உள்ளடக்கியது. உங்கள் கஷ்ட காலங்களை கடக்க தேவரின் உதவியை சார்ந்திருங்கள்.
More