எல்லா தேவைகளுக்கும் தேவ வசனம்மாதிரி
CHI தேவனின் குழந்தைகள்
இதைக் கவனியுங்கள்- நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம்!
முந்தைய தியானத்தில் தேவன் நமக்கு தன்னுடைய அற்புதமான அன்பை வழங்கிய தந்தை என்பதை நாம் கண்டோம். இதை வலியுறுத்திய உடனேயே, அப்போஸ்தலர் யோவான் நமக்கு நினைவூட்டுவதாவது, நாம் இயேசுவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்திருந்தால், "தேவனுடைய பிள்ளைகள்" என்று அழைக்கப்படுகிறோம் என்பதே. உண்மையில் நாம் இதுதான். இதுதான் நமது உண்மையான அடையாளம். நமது சுய பிம்பம் நாம் என்ன செய்கிறோம் என்பதை பொருத்தது அல்ல. நமது சுய மதிப்பு நமது சாதனைகளின் அடிப்படையில் அமைந்தது அல்ல. இல்லை, நமது உண்மையான அடையாளம் இன்னும் நிலையான, பாதுகாப்பான ஒன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இயேசுவை அறிந்தவர்கள் தந்தையின் தத்தெடுத்த மகன்கள் மற்றும் மகள்கள்- புதிய ஏற்பாட்டின் மைய்ய வெளிப்பாட்டின் அஸ்திவாரம் இதைவிட சிறந்தது எதுவாக இருக்க முடியும்? நீங்கள் உங்களை அப்படித்தான் பார்க்கிறீர்களா? இல்லையெனில், இந்த உண்மையின் மீது உங்கள் அடையாளத்தைக் கட்டமைக்குமாறு நான் உங்களை வற்புறுத்துகிறேன். அப்போஸ்தலர் யோவான் இங்கே "இதைக் கவனியுங்கள்." என சொல்வதை செய்யுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த உண்மையை கருதுங்கள், பிரதிபலியுங்கள், ஆழமாய் சிந்தியுங்கள் பின்னர் அதன் அழகில் களிப்பிருங்கள். நீங்கள் அப்படிச்செய்தால், உங்கள் பாதுகாப்பு உங்கள் வேலையில் அல்லாமல், தேவனுடைய பிள்ளைகள் என்ற நிலையின் ஆழமான உறுதிபாட்டில் எப்போதும் இருக்கும்.
பிரார்த்தனை
அன்புள்ள பிதாவே, நான் யார் என்பதற்காக - தேவனுடைய பிள்ளை என்பதற்காக - என்னை நீர் நேசிக்கிறீர் என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த கௌரவத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வாழ்க்கை கடினமாக இருக்கலாம், மேலும் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போதும், ஊக்கம் தேவைப்படும்போதும் செல்ல சிறந்த இடம் தேவனின் வாசகமே. ஆனால் சில நேரங்களில் எங்கு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். வேதாகமம் வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளில் தேவ வசன மாணவர் அனைவருக்கும் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற முக்கியமான வேதவாக்கியங்களை நாடும் படிக்கு உள்ளடக்கியது. உங்கள் கஷ்ட காலங்களை கடக்க தேவரின் உதவியை சார்ந்திருங்கள்.
More