YouVersion Logo
Search Icon

கோபத்தைவிட்டு விலகுதல்Sample

கோபத்தைவிட்டு விலகுதல்

DAY 5 OF 5

இரக்கமுள்ள இருதயம்

ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் நாம் ஏழு பேர், ஒரு இசை தயாரிப்பின் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தோம். ஒன்றாக உட்கார விரும்பிய நாம், ஒரே வரிசையில் மிகவும் நெருக்கமாக அமர்ந்தோம். அப்படியே நாம் உட்காருகையில், ஒரு பெண் எங்கள் நடுவில் உட்புகுந்தார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து உட்காரவேண்டும் என்று எனது மனைவி அவளிடம் கூறினாள், ஆனால் அந்தப் பெண்ணும் அவளது இரண்டு தோழர்களும் நம்மைத் தள்ளுகையில், அவள், “இது மிகவும் சரியில்லை” என்று வேகமாகக் கூறினாள்.

நம்மில் மூவர், மற்றைய நான்கு நபர்களுக்கும் பின்னால் இருந்த வரிசையில் உட்கார்ந்தபோது, எனது மனைவி சூயி, சிறப்புத் தேவையுள்ள ஒருவர் அந்தப் பெண்ணுடன் இருப்பதை அவதானித்தாள். அவளுடைய அந்த நண்பரைப் பராமரிப்பதற்காக தன்னுடைய சிறு குழுவை அவள் தன்னுடன் வைத்துக்கொள்ள முயற்சி எடுத்துக்கொண்டிருந்தாள். உடனடியாகவே, நமக்குள் இருந்த எரிச்சல் தணிந்தது. “இப்படியான ஒரு ஜனக்கூட்டத்தில் அவளுக்கு காரியங்கள் எவ்வளவு கடினமாக காணப்படும் என்பதை கற்பனைபண்ணிப் பாருங்கள்” என்றாள் சூயி. ஆம், அந்த பெண் கடினமாகவேதான் பதில் கூறினாள். ஆனாலும், கோபத்துடன் பதிலுரைப்பதைப் பார்க்கிலும் நம்மால் இரக்கத்துடன் பதில் கூறமுடியும்.

நாம் எங்கு சென்றாலும், இரக்கம் தேவையான மனிதரை நாம் எதிர்கொள்கிறோம். நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களை – கிருபையின் மெதுமையான ஸ்பரிசம் தேவையான அநேகரை - வித்தியாசமான வெளிச்சத்தில் பார்ப்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுலின் இந்த வார்த்தைகள் ஒருவேளை நமக்கு உதவியாயிருக்கும். “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு…”(கொலோ 3:12). மேலும், “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவவருக்கொருவர் மன்னியுங்கள்” (வசனம் 13) என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

நாம் இரக்கம் காண்பிக்கையில், கிருபையையும் இரக்கத்தையும் தம்முடைய இருதயத்திலிருந்து நம்மீது ஊற்றிய அந்த ஒருவரை நாம் பிறருக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

Day 4

About this Plan

கோபத்தைவிட்டு விலகுதல்

நமது அனுதின மன்னாவின் இந்த 5 தொடர்களையும் வாசிக்கும்போது உங்கள் கோபத்தை தேவனிடத்தில் எவ்வாறு முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பது என்பதனை இன்னும் அதிகமாக கண்டறிந்துகொள்ளலாம்.

More