கோபத்தைவிட்டு விலகுதல்Sample
பேசுவதற்கு முன்னர் சிந்திக்கவும்
தாங்கள் உணவருந்த எதிர்பார்த்திருந்த பிரபல்யமான ஒரு உணவகத்திற்குச் செல்லும் வழியை சரிபார்க்கத் தவறியதால் சியுங், தனது மனைவி மீது மிகவும் வருத்தப்பட்டார். தங்கள் விடுதலையில் ஜப்பான் எங்கும் சுற்றித்திரிந்து, வீடு திரும்புவதற்கு விமானத்திற்குச் செல்லுவதற்கு முன்னர் ஒரு சுவையான உணவுடன்கூட முடித்துக்கொள்ள குடும்பமாகத் திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது நேரம் தாமதமாகிவிட்டது, அதனால் அந்த உணவை தவறவிடவேண்டி நேரிடும். விரக்தியுற்ற சியுங் தனது மனைவியின் தவறான திட்டமிடலின் நிமித்தம் அவரைக் குறைகூறினார்.
பின்னர் சியுங் தனது வார்த்தையினிமித்தம் வருத்தப்பட்டார். அவர் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அத்துடன், தானே அந்த வழியை சரிபார்த்திருக்கலாம் என்பதையும், மற்றைய ஏழு நாட்களும் தனது மனைவியின் சிறந்த திட்டமிடலுக்காக அவளுக்கு நன்றி கூறத் தவறிவிட்டதையும் அவர் உணர்ந்தார்.
நம்மில் பலரும் சியுங் போலவே காணப்படுகிறோம். நாம் கோபப்படும்போது, அதை பெரிதாக வெளிப்படுத்த சோதிக்கப்படுகிறோம். அத்துடன் வார்த்தைகளையும் கட்டுப்பாடின்றி பறக்கவிடுகிறோம். ஓ! சங்கீதக்காரனைப்போல ஜெபிப்பது நமக்கு எவ்வளவு தேவையாயிருக்கிறது: “கர்த்தாவே என் வாய்க்குக் காவல் வையும். என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங்கீதம் 141:3).
ஆனால், அதனை நாம் எப்படிச் செய்யமுடியும்? நமக்கு உதவியாயிருக்க இதோ ஒரு சிறு குறிப்பு: நீங்கள் பேசுவதற்கு முன்னர் சிந்தியுங்கள். உங்கள் வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா மற்றும், உதவிசெய்கின்ற, கருணையுள்ள, அன்புநிறைந்தனவா? (எபேசியர் 4:29-32 ஐப் பார்க்கவும்)
நமக்கு எரிச்சல் ஏற்படுகையில் நமது வாயை இறுக மூடிக்கொள்வதற்கு நமது வாய்க்குக் காவல் வைப்பது மிகவும் அவசியம். மற்றும், சரியான வார்த்தைகளை சரியான தொனியோடு அல்லது ஒருவேளை ஒன்றுமே பேசாது இருக்கும்படியாக ஆண்டவரிடத்தில் உதவியை நாடவேண்டும். நமது பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு வாழ்நாள் முழுவதற்குமான வேலையாகும். “தேவனைப் பிரியப்படுத்துவதைச் செய்வதற்கான விருப்பத்தையும், பெலத்தையும்” (பிலிப்பியர் 2:13) நமக்கு அருளுவதற்காகவும் தேவன் நமக்குள் கிரியை செய்வதற்காகவும் அவருக்கே நன்றி.
Scripture
About this Plan
நமது அனுதின மன்னாவின் இந்த 5 தொடர்களையும் வாசிக்கும்போது உங்கள் கோபத்தை தேவனிடத்தில் எவ்வாறு முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பது என்பதனை இன்னும் அதிகமாக கண்டறிந்துகொள்ளலாம்.
More