கோபத்தைவிட்டு விலகுதல்Sample
கோபத்தை நிர்வகித்து நடத்தல்
யாக்கோபு 4 இல், ஆசிரியர் கோடரியை நம்முடைய ஆழமான பிரச்சனைகளில் ஒன்றின் வேரில் வைத்து அங்குமிங்கும் சுழற்றினார்: அதாவது நமது சுய ஆசைகளை அடக்கி உள்வாங்கிக்கொள்ளல் – நமது சுயவழிகளில் நடப்பது மற்றும், நமது சுய தேவைகள் சந்திக்கப்படல். அந்த தீவிர உணர்வு விரக்திக்குள்ளாகும்போது, அது விரைவில் குருட்டுத்தனமான ஆத்திரமாக மாறும், இது பிறரைக் குறைவாகப் பார்க்கச் செய்யும், நம்மையும் தாழ்த்தும். நமக்கு தேவையானவை கிடைத்தாலும் நாம் திருப்தியடையாத நிலைமையில் விடப்படுகிறோம்.
தேவனுடைய கரங்களினால், அவருடைய நேரத்தில், அவருடைய வழியில் நமது தேவைகளைச் சந்திக்குமாறு தேவனிடத்தில் கேட்பது சிறந்ததுள. அவருடைய கட்டுப்பாட்டிற்குள் நமது விருப்பத்தை இணங்கவைத்து, இயேசு ஜெபித்ததுபோல ஜெபிக்கவும்: “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42).
அநியாயங்களைக் குறித்து ஆழமாக வருந்துவது, நம்முடைய வழியில் காரியங்களைச் சரிசெய்ய முயற்சித்தல், அல்லது நம்முடைய இச்சையான ஆசைகள் நம்முடைய தீர்மானங்களை நிர்ணயிக்க அனுமதித்தல் போன்றவை நல்லதல்ல. எமது சுய ஆசைகளை நமது இன்பங்களுக்கு ஒப்புவித்தலானது, “நமக்குள்ளும், நம்மைச் சுற்றி வாழுகிறவர்களுடனும் “யுத்தங்களுக்கும் சண்டைகளுக்கும்” இட்டுச்செல்லும் (யாக்கோபு 4:1).
நமது கோபம் உச்சநிலைக்குச் செல்லுமுன்னர், ஒரு “நேர இடைவெளி” எடுத்துக்கொண்டு, நம்மை நாம் புரிந்திருப்பதிலும் பார்க்க, நம்மைக் குறித்து சிறப்பாகப் புரிந்த – நாம் ஒருபோதும் அறிந்ததைவிட நம்மீது அதிக அக்கறை கொண்டவருடன் ஒரு விசை நடப்போம். அவரிடத்தில் நமது கோபத்தைக் குறித்தும், அவரைக் குறித்து நாம் கொண்டுள்ள குழப்ப நிலையைக் குறித்தும் கூறமுடியும்.
நாம் சுயமாக சமாளிக்கக்கூடியதான எக் காரியத்தைப் பார்க்கிலும் “அதிக கிருபையை” (வச.6) தேவன் கொடையாகத் தருகிறார் என்று யாக்கோபு சொல்லியிருக்கிறபடி, நமது தேவைகளை தேவன் தாமே தமது வழியில் சந்திக்கும்படி நாம் அவரிடத்தில் வேண்டுதல் செய்யலாம்.
Scripture
About this Plan
நமது அனுதின மன்னாவின் இந்த 5 தொடர்களையும் வாசிக்கும்போது உங்கள் கோபத்தை தேவனிடத்தில் எவ்வாறு முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பது என்பதனை இன்னும் அதிகமாக கண்டறிந்துகொள்ளலாம்.
More