கோபத்தைவிட்டு விலகுதல்Sample
கோபத்திற்கு ஒரு மாற்று வழி
அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னும் இடத்தில், ஒரு காலைப்பொழுதில், பியோன் முல்ஓலன்ட் என்பவர் தனது மோட்டார் வாகனம் காணாமற்போனதைத் தெரிந்துகொண்டார். தனது வாகனம் தடைசெய்யப்பட்ட ஒரு இடத்தில் தவறுதலாக நிறுத்தி வைத்ததால், வாகனம் கட்டி இழுத்துச்செல்லப்பட்டுள்ளது என்று அவர் அப்பொழுதுதான் உணர்ந்தார். தவறுதலாக வாகனத்தை நிறுத்தியதற்கும் இழுத்துச் சென்றதற்குமாக 600 டொலர் அபராதம் என்ற நிலைமையை கருத்திற்கொண்ட அவர் மிகவும் விரக்தியடைந்தார்ள. ஆனாலும் தனது வாகனத்தை மீட்டெடுப்பதற்கு தான் சந்திக்கவேண்டிய மனிதருடன் கோபமடையக் கூடாது என்று முடிவெடுத்தார். தனது உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, முல்ஓலன்ட், அந்த சம்பவத்தை நகைச்சுவை மிக்க ஒரு கவிதையாக எழுதி வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த களத்தில் தான் சந்தித்த ஒரு ஊழியருக்கு அதனை வாசித்துக்காட்டினார். அந்த ஊழியருக்கு அக் கவிதை மிகவும் பிடித்திருந்தது, மற்றும் எவ்விதமான தகாத மோதலும் ஏற்படவேயில்லை.
“வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை” (20:3) என்று நீதிமொழிகளின் புத்தகம் கற்பிக்கிறது. குமுறல்களை மனதினுள்ளே அடக்கி அல்லது, ஏதோவொரு காரியத்தைக் குறித்து மனிதரிடையே வெளிப்படையாக கருத்துவேறுபாடுகள் ஏற்படும்போது உண்டாகும் உரசல்களே வழக்கு ஆகும்.
பிற மனுஷருடன் சமாதானமாக வாழ்வதற்கான வளங்களை தேவன் நமக்குத் தந்துள்ளார். கோபம் ஆத்திரமாக கொந்தளிப்பதற்கு அனுமதிக்காதவாறு நம்மால் கோபத்தை உணரமுடியும் என்று அவருடைய வார்த்தை (எபேசி 4:16) உறுதிப்படுத்துகிறது. நம்மை வருத்தப்படுத்தும் நபர்களை தாக்கும் விடயங்களைக் கூறுமாறு அல்லது செய்யுமாறு தூண்டுகின்ற கோபத்தின் தீப்பொறிகளைப் புறக்கணிக்க தேவனுடைய ஆவி நமக்கு இயலுமையைத் தருகிறார். மற்றும் நாம் கோபமூட்டப்படுவதாக உணரும்போது பின்பற்றுவதற்காக தேவன் தம்மையே உதாரணமாகத் தந்துள்ளார் (1பேதுரு 2:23). தேவன் இரக்கமும், கிருபையும், கோபப்படுவதில் தாமதிப்பவரும், அன்பில் நிறைந்தவரும், உண்மையுள்ளவருமாயிருக்கிறார் (சங்கீதம் 86:15).
Scripture
About this Plan
நமது அனுதின மன்னாவின் இந்த 5 தொடர்களையும் வாசிக்கும்போது உங்கள் கோபத்தை தேவனிடத்தில் எவ்வாறு முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பது என்பதனை இன்னும் அதிகமாக கண்டறிந்துகொள்ளலாம்.
More