கோபத்தைவிட்டு விலகுதல்Sample
மன்னிப்பு எதற்காக?
ஒரு நண்பர் எனக்குத் துரோகம் செய்துவிட்டால், நான் அவளை மன்னிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் அது என்னால் முடியமா என்பதில் எனக்கு உறுதியில்லை. அவள் கூறிய வாரத்தைகள் எனது உள்ளத்தில் ஆழமாகக் குத்தியது, நான் வருத்தத்துடனும் கோபத்துடனும் திகைத்துவிட்டதை உணர்ந்தேன். இதைக் குறித்து நாம் பேசி, நான் அவளை மன்னித்துவிட்டதாகக் கூறினாலும், அவளைக் காணும்போது அந்த வலியின் சாயலை நீண்டகாலமாக நான் உணர்ந்தேன்ள. இதனால் நான் இன்னமும் மனக்கசப்பைக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருந்தேன். ஒரு நாள், எப்படியோ, தேவன் எனது ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார், யாவையும் கடந்துபோகச் செய்யும் திராணியையும் கொடுத்தார். இறுதியாக நான் விடுதலையானேன்.
நமது இரட்சகர் சிலுவையில் மரிக்கும் தறுவாயிலும் வழங்கிய மன்னிப்புடன், மன்னிப்பு என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் இருதயத்தில் அமர்ந்திருக்கிறது. தம்மை ஆணியினால் அறைந்தவர்களையும் இயேசு நேசித்து, அவர்களை மன்னிக்கும்படி தமது பிதாவிடத்தில் கேட்டு ஜெபித்தார். அவர் கசப்புடனும் கோபத்துடனும் தொங்கவில்லைள. அவரைக் குற்றப்படுத்தியவர்களில் கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.
நம்மைப் புண்படுத்துகிறவர்களுக்கு இயேசுவின் அன்பை வழங்குவதில் நாம் அவரின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது, நாம் மன்னிக்கவேண்டிய சகல மனிதர்களையும் தேவனின் முன்னிலையில் கருத்தில் கொள்வதற்கு இது ஒரு பொருத்தமான தருணம். மன்னிப்பதற்கு உதவிசெய்யும்படி நாம் ஆவியானவருக்கூடாக தேவனிடத்தில் வேண்டுகையில், மன்னிப்பதற்கு அதிக காலம் எடுக்கும் என்று நாம் நினைத்தாலும்கூட, அவர் நமக்காக வருவார். நாம் அவ்வாறு செய்கையில், மன்னிக்கமுடியாத சிறையிலிருந்து நாம் விடுதலையாகிறோம்.
Scripture
About this Plan
நமது அனுதின மன்னாவின் இந்த 5 தொடர்களையும் வாசிக்கும்போது உங்கள் கோபத்தை தேவனிடத்தில் எவ்வாறு முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பது என்பதனை இன்னும் அதிகமாக கண்டறிந்துகொள்ளலாம்.
More