BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
வேதாகமத்தின் முதல் பக்கத்தில், இந்த உலகம் நன்றாய் இருக்கிறது என்று தேவன் கூறுகிறார், எனவே இயற்கையாகவே தேவன் உருவாக்கிய இந்த நல்ல விஷயங்களில் மக்கள் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். ஆனால் இந்த உலகம் எப்படி நம் சுயநலத்தால் சிதைக்கப்பட்டு இப்போது மரணம் மற்றும் இழப்பால் குறிக்கப்படுகிறது என்பதையும் வேதாகமம் காட்டுகிறது. இவ்வளவு குழப்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் எப்படி ஒருவர் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்? இந்தப் பதற்றத்தின் மத்தியில், வேதாகமம் சந்தோஷத்தைப் பற்றிய ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது. எதிர்காலத்தைக் குறித்த தேவப் பிள்ளைகளின் சந்தோஷம் தேவன் அளித்த வாக்குத்தத்தங்களால் தக்கவைக்கப்படுகிறது, அவர்களின் தற்போதைய சூழ்நிலைகளினால் அல்ல. உதாரணமாக, தேவன் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபோது, தேவன் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசம் வெகு தொலைவில் இருந்தபோதிலும், அவர்கள் வனாந்தரத்தின் நடுவில் இருந்தபோதிலும் சந்தோஷமாய் பாடினார்கள்.
வாசிக்கவும் :
சங்கீதம் 105: 42-43, யாத்திராகமம் 15: 1-3
சிந்திக்கவும் :
இன்று நீங்கள் சந்தோஷப்படும் படி தேவன் அளித்த வாக்குத்தத்தங்களில் எது உங்களுக்கு உதவுகின்றன?
அதற்கு பதிலளிக்கும் விதமாக, தேவனின் வாக்குத்தத்தங்களை கொண்டாட ஒரு ஜெபத்தை எழுதுங்கள் அல்லது பாடுங்கள்.
Scripture
About this Plan
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More