YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 29 OF 100

உன் நாவை அடக்கு

“உங்களுக்கு உண்மையாகவே பேசுவதற்கு நல்ல திறமை இருக்கிறது”, என்று ஒரு மனிதர் அநேக ஆண்டுகளுக்கு முன், நான் ஊழியத்திற்கு வந்த புதிதில் என்னிடம் கூறினார். எனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தான் அந்த மனிதர் சுட்டிக்காட்டினார். தேவன் எனக்கு ஒரு “ஆயத்தமாக இருக்கக்கூடிய நாவை” கொடுத்திருக்கிறார். என்னால் சுலபமாக பேச முடியும். வார்த்தைகள் எனக்கு ஒரு கருவியாக பயன்பட்டது. தேவன் முதலில் எனக்கு பேசுவதற்கு என்று திறமையை கொடுத்து, அதன் பிறகு ஊழியத்திற்கு அழைத்து, அந்த திறமையை கர்த்தருக்கென்று உபயோகிக்க பயன்படுத்தினார்.

எனக்கு பேசுவதில் எந்த கஷ்டமும் இருந்ததில்லை. அது எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஈவு; ஆனால், அதுவே எனக்கு ஒரு பெரிய பிரச்சனையும் கூட. ஏனென்றால், எனக்கு எப்பவும் சொல்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும். என் நாவை சரியாக உபயோகிப்பதில், அநேக ஆண்டுகளாக எனக்கு போராட்டம் இருந்தது.

அது ஒரு சுலபமான போராட்டம் அல்ல.

அநேக ஆண்டுகளாக, அநேக மக்கள் சொல்லும் ஒரு வார்த்தை, “உன் நாவை அடக்கு.” “உங்கள் மனதில் தோன்றம் ஒவ்வொரு வார்த்தையையும் பேசி ஆக வேண்டுமா?” “நீங்கள் எப்பொழுதும் முதலில் பேசிவிட்டு பிறகுதான் யோசீப்பீர்களா?” “இவ்வளவு கடுமையாக பேச வேண்டுமா?” நான் மட்டும் மற்றவர்கள் சொல்வதை கவனித்திருந்தால், கர்த்தர்தான் மற்றவர்கள் மூலமாக என்னிடம் எதையோ சொல்ல முற்படுகிறார் என்று உணர்ந்திருப்பேன். ஆனால் நானோ, அவர்கள் சொல்வதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு, என் சொந்த முரட்டாட்டமான வழியில் தொடர்ந்தேன்.

கடந்த நாட்களில், என்னுடைய வார்த்தைகளால் அநேகரை காயப்படுத்தி இருக்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன். கர்த்தர் என்னை மன்னித்துவிட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

தேவன் என் வாழ்க்கையை பயன்படுத்தவேண்டுமானால்; நான்தான் முதலில் என் நாவை அடக்கவேண்டும், என்று சில ஆண்டுகளுக்கு முன்புதான், நான் புரிந்துகொண்டேன். நான் பேசுவதை நிறுத்துவது மாத்திரமல்ல, என்னுடைய நாவை பொல்லாப்புக்கும், என் உதடுகளை கபட்டு வசனிப்பிற்கும், சங்கீதக்காரனாகிய தாவீது சொல்வதுபோல விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும்.

மற்றவர்களை என் வார்த்தைகளினால் புண்படுத்த முடியும்; (அதை நான் நன்றாக செய்துகொண்டு இருந்தேன்). அல்லது என் உதடுகளை தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படுத்தவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், கர்த்தருக்கு என்னை அர்ப்பணிக்கத்தான் விருப்பம். ஆனால், அதில் இன்னும் ஒரு போராட்டம்.

நம்முடைய வார்த்தைகள், நம்முடைய இருதயத்திற்குள்ளாக நடப்பதின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ஒருவர் எப்படிப்பட்ட மனிதர் என்று அறிய விரும்பினால், அவர் பேசும் வார்த்தைகளை கவனித்தாலே போதும். நாம் நிறைய கவனித்தால், அவர்களைப் பற்றி நிறைய அறிய முடியும்.

என்னுடைய வார்த்தைகளை, நானே கவனித்து கேட்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக, என்னைக்குறித்தே நான் அறிந்துகொள்ள முடிந்தது. என்னைக்குறித்து நான் அறிந்த சில காரியங்கள் எனக்கு பிடிக்கவில்லை, ஆனாலும், இது என்னுடைய குணத்தில் சில குறைகள் இருப்பதை அறிந்துகொள்ள எனக்கு உதவியது. அதை நான் சரி செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இருந்தது. என்னுடைய வார்த்தைகள் தேவனைப் பிரியப்படுத்தவில்லை. ஆனால், பிரியப்படுத்தவேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். என்னுடைய தோல்விகளை, தேவனிடத்தில் அறிக்கை செய்த உடனே வெற்றி கிடைத்தது - ஒரேயடியாக இல்லை, முழுவதுமாகவும் இல்லை. ஆனால், தேவன் என்னிடம் பொறுமையாக இருக்கிறார். நானோ வளர்ந்து வருகிறேன், என்னுடைய வளர்ச்சியின் ஒரு பகுதி, என்னுடைய நாவை பொல்லாப்புக்கு விலக்கிக் காப்பதுதான்.

நீங்கள் எவ்வளவு பிற்போக்கானவர்களாக இருந்தீர்களோ, இருக்கிறீர்களோ, எத்தனை காலமாக அப்படி இருந்தீர்களோ, கவலை வேண்டாம். கர்த்தர் உங்களை மாற்ற விரும்புகிறார்! என்னுடைய ஆரம்ப நாட்களிலே, என்னுடைய அறிக்கையை தேவனுக்கு முன்பாக செய்தபிறகு, நான் வெற்றி பெறுவதைவிட, அதிகமாக தோல்விகளைத்தான் சந்தித்தேன். ஆனால், வெற்றி பெற்ற ஒவ்வொரு முறையும், தேவன் எனக்கு வைத்திருக்கும் திட்டத்திற்கு நான் நெருக்கமாக வருவதை உணர்ந்தேன். எனக்கு செய்ததை, தேவன் உங்களுக்கும் செய்வார்.

அது சுலபமாக இருக்காது, ஆனாலும் நீங்கள் வெற்றி அடையமுடியும். உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு.


கர்த்தாவே, என்னுடைய வாயை நான் சரியாக பயன்படுத்த எனக்கு உதவி செய்யும். நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு, என் வாய்க்கு காவல்வையும். என்னுடைய வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக. இயேசுவின் அற்புதமான நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Day 28Day 30

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More