YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 30 OF 100

மனதைக் கட்டும் ஆவிகள்

ஒரு வல்லமையான, அகில உலக ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அதைக் குறித்து பெருமையாக பேசவோ, அல்லது நான் ஏதோ விசேஷமானவள் என்றோ நான் நினைக்கவில்லை. ஒருவரும் அறியாத, கேட்டிராத, வென்டன், மிசௌரியிலிருந்து வந்த ஒரு சாதாரணப் பெண் நான். எனினும், எனக்கு நாடு தழுவிய வானொலி ஊழியம் உண்டு என்று தெரியும். வியாதியை சுகமாகவும், அநேகரின் வாழ்க்கை மாறும்படி, தேவன் என்னைப் பயன்படுத்துவார் என்றும் விசுவாசித்தேன்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், பெருமையாக இருப்பதற்கு பதிலாக; என்னைப் போய் தேவன் பயன்படுத்த, நான் யார் என்று எண்ணி தாழ்மையாய் இருந்தேன். இந்த எண்ணத்திலும், தாழ்மையிலும், நான் அதிகமாக என்னை ஈடுபடுத்தி, தியானித்தபோது, தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் பலனை அதிகமாக அனுபவித்தேன். தேவனுடைய தெரிந்துகொள்ளுதல், ஆச்சரியமாக இருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 1:26-31 ஆகிய வசனங்களில் கூறுகிறார். “...ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்து மேன்மை பாராட்டத்தக்கதாக...” (வ.30).

பெருமைப்பாராட்ட எந்த காரணமும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. எனக்கு தேவன் தந்த அழைப்பையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் விசுவாசித்தேன். இதைத்தான் நான் வலியுறுத்தி கூற விரும்புகிறேன். ஒருவரும் பூட்டக்கூடாதபடி, தேவன் வாசல்களை திறந்தருள அவருக்காக காத்திருந்தேன். அவர் திறக்க ஆயத்தமாக இருந்தால், அது நடந்தேறும்.

எப்படி பிரச்சனை ஆரம்பமானது என்று எனக்கு தெரியாவிட்டாலும், “தேவன் உண்மையாகவே என்னை உபயோகிக்க விரும்புகிறாரா?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். தேவன் எனக்குத் தந்திருக்கும் வாக்குத்தத்தத்தை விட்டுவிட்டு, என்னையும், என்னுடைய தகுதி யின்மையையும் பார்க்க ஆரம்பித்தேன். மற்ற தேவ ஊழியர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினேன். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நடக்கும் தவறு என்னவென்றால், நாம் பிற்போக்கானவர்களாகவே முடிவில் இருப்போம்.

சந்தேகங்கள் எழும்ப ஆரம்பித்தன. ஒருவேளை நானாகவே விரும்பி, இதை ஏற்படுத்திக்கொண்டு விட்டேனோ? அப்படி நடக்காது. எவ்வளவுக்கதிகமாக நான் இப்படி யோசித்தேனோ, அவ்வளவுக்கதிகமாக நான் குழம்பிப்போனேன். நான் தேவனையும், அவருடைய வாக்குறுதியைக் குறித்தும் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். தேவன் தந்த தரிசனம் மங்கலாக ஆரம்பித்தது. இதன் விளைவாக, நான் சந்தேகத்தாலும் அவிசுவாசத்தாலும் நிறைந்தேன். 

“எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே; நீர் சொல்லாத காரியங்களை, நானாகவே செய்திருந்தால், அல்லது நீர் சொன்னதாக நம்பியிருந்தால், அந்த வாஞ்சையை தயவுசெய்து என்னைவிட்டு எடுத்துப் போடும். நீர் என்னை அழைத்தது உண்மையானால், உம்முடைய தரிசனத்தை எனக்கு புதுப்பித்து தாரும்”, என்று கெஞ்சி ஜெபிக்க ஆரம்பித்தேன். 

நான் சற்று நிறுத்தியபோது, “மனதைக் கட்டும் ஆவிகள்”, என்று தேவன் என் உள்ளத்தில் சொன்னார்.

“மனதைக் கட்டும் ஆவிகள் என்றால் என்ன?” என்று என்னையே கேட்டுக்கொண்டேன். இதை நான் கேட்டதே இல்லையே,இதைக் குறித்துக் கேள்விப்படாததால், நான் அதைப்பற்றி நினைக்கவும் இல்லை.

அடுத்த நாள் ஜெபித்தபோதும்,அதையே தேவன் சொன்னார். அடுத்தடுத்து ஜெபிக்கும்போது, இரண்டு நாட்களாக அதே காரியத்தைக் கேட்டேன், “மனதைக் கட்டும் ஆவிகள்”.

நான் ஏற்கனவே நிறைய ஊழியம் செய்கிறேன். அநேக நாட்களுக்கு முன்பாகவே, விசுவாசிகள் தங்கள் மனதிலே எப்படிப்பட்ட பிரச்சனைகளை உடையவர்களாயிருக்கிறார்கள் என்று அறிந்திருந்தேன். பரிசுத்த ஆவியானவரால், மனதை கட்டும் ஆவி என்ற குறிப்பிட்ட ஆவிக்கு எதிராக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதிர்த்து நிற்கவேண்டும் என்று, முதலில் நான் நினைத்து, ஜெபித்தேன்.

நான் ஜெபித்து, அந்த ஆவிக்கு கட்டளை கொடுத்தேன். ஆனால், அந்த வார்த்தை எனக்காகத்தான் கூறப்பட்டது என்று, அதன் பிறகுதான் உணர்ந்தேன். மனதைக் கட்டும் ஆவியானது, என் தரிசனத்தைத் திருடி, என் சந்தோஷத்தைக்கெடுத்து, என் ஊழியத்தையும் எடுத்துவிட முயற்சி செய்திருக்கிறது.

அந்த எதிர்ப்பு என்னை விட்டு நீங்கினது; அந்தக் கேள்வியும் மறைந்துபோனது. நான் விடுதலையானேன். தேவனால் கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான ஊழியத்தின் தரிசனம் என் சிந்தனையின் நடுவில் இருந்தது. நான் சங்கீதம் 107:20ஐ வாசித்தேன், “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்கு தப்புவிக்கிறார்”. அதை அவர் செய்தார்.

ஒரு பொல்லாத ஆவி என் மனதைத் தாக்கி, தேவன் எனக்கு வாக்குப்பண்ணினவைகளை விசுவாசிக்கமுடியாமல் தடை செய்தது. எனக்கு உதவி செய்யும்படி தேவனை வேண்டினேன். அவர் என்னை விடுவித்தார்.

அந்த மனதைக் கட்டும் ஆவிகள், இந்நாட்களில் அநேகரைத் தாக்குகின்றன. தேவன் எதை விரும்புவார், அவருக்கு யார் சேவை செய்ய ஆவலோடிருக்கிறார்களென்று அந்த ஆவிகளுக்குத் தெரியும். சில நேரங்களில், தேவனுடைய திட்டத்தை தங்களுடைய நண்பர்களுக்கும் அறிவிக்கும். தேவன் சொன்ன காரியங்கள் நடக்க தாமதமாவதைப்போல் நாம் நினைத்தால், இந்த மனதைக் கட்டும் ஆவிகள் தலைத்தூக்கும். ஏதோ இரும்புக் கம்பியால் மனதை சுற்றி கட்டியது போல இருக்கும். இதனால், தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறாததுபோல் இருக்கும். “தேவன் உண்மையாகவே இதைச் சொன்னாரா? இல்லையென்றால் நீயாகவே கற்பனை செய்துகொள்கிறாயா?” என்று சாத்தான் உடனே நம் காதுகளில் முனுமுனுப்பான். தேவன் உங்களிடம் பேசியிருப்பாரென்றால், அதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். தேவன் அதை நிறைவேற்றுவார்! தேவன் வாக்களித்த ஈசாக்கை, ஆபிரகாமுக்கு கொடுக்க, அவன் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருந்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்!


உண்மையும் நேர்மையுமுள்ள தேவனே, என்னுடைய சிந்தனையில் சந்தேகமும், குழப்பமும் வந்ததற்காக என்னை மன்னியும். அவை உம்முடைய கருவிகள் அல்ல, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில், மனதைக் கட்டும் எல்லா ஆவிகளையும் உடைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Scripture

Day 29Day 31

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More